டி20 தொடரையும் கைப்பற்றியது தென் ஆபிரிக்கா

134
Image Courtesy - CSA Twitter

தென் ஆபிரிக்க மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற தென் ஆரபிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில்  2-0 என வெற்றயீட்டியுள்ளது.

தென் ஆபிரிக்காவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது. அப்போட்டியில் தென் ஆபிரிக்க அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. தொடரை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் நேற்று (12) இரண்டாவது போட்டியில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணி முதலாவது போட்டியில் விளையாடிய நான்கு வீரர்களுக்கு ஓய்வு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 7 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தமது முதலாவது விக்கெட்டை இழந்தது. எனினும் ஹமில்டன் மசகட்ஸா 21 ஓட்டங்கள், பிரண்டன் டெய்லர் 29 மற்றும் சோன் வில்லியம்ஸ் 41 ஓட்டங்கள் என துடுப்பாட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு ஓரளவு கைகொடுத்தனர்.

டி20 யில் புதிய சாதனையுடன் தென்னாபிரிக்காவை வெற்றி பெறச் செய்த தாஹிர்

ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் தென் ஆபிரிக்க அணி சார்பாக ரொபி ஃப்ரைலின்க், டேன் படேர்சன் மற்றும் இங்கீடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இலகுவானதொரு வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. தென் ஆபிரிக்க அணி சார்பாக டுமினி அதிக பட்சமாக ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் டி கொக் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் சோன் வில்லியம்ஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். போட்டியின் சிறப்பாட்டக்காரராக தென் ஆபிரிக்க அணியின் பந்து வீச்சாளர் டேன் படேர்சன் தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டி நாளை (14) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 132/7 (20) –  சோன் வில்லியம்ஸ் 41, பிரெண்டன் டைய்லர் 29, ஹெமில்டன் மசகட்ஸா 21, ரொபி ஃப்ரைலின்க் 20/2, டேன் படேர்சன் 22/2, இங்கீடி 36/2,

தென் ஆபிரிக்கா – 135/4 (15.4) டுமினி 33*, டி கொக் 26, க்லாசன் 22, சோன் வில்லியம்ஸ் 25/2

முடிவு: தென் ஆபிரிக்க அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<