தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது பாகிஸ்தான்அணி

322

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி நேற்று (19) நடைபெற்றது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

டோனியின் சாதனையை 4 ஆண்டுகளில் முறியடித்த சர்ப்ராஸ் அஹமட்

ஒரு அணித்தலைவராகவும் ஒரு விக்கெட் காப்பாளராகவும் பாகிஸ்தான் அணி வீரர் …

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனினும், பதிலுக்குக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்து 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தென்னாபிரிக்காவுடனான இந்த சுற்றுப் பயணத்தில் தமது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி சார்பாக துடுப்பாட்ட வீரர் வேன் டேர் டஸ்ஸன் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் தொடர் நாயகனான வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலீவியர் ஆகியோர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அம்லா மற்றும் ஹென்ரிக்ஸ் ஜோடி சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்தனர். அணி 82 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஹென்ரிக்ஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடந்து அறிமுக வீரர் டஸ்ஸன் மற்றும் அனுபவ வீரர் அம்லா ஆகியோர் அணியை பலமான நிலைக்கு இட்டுச் சென்றனர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 155 ஓட்டங்கள் பகிர்ந்திருந்தனர்.  

டஸ்ஸன் தனது கன்னி ஒருநாள் சதத்தை 7 ஓட்டங்களால் தவற விட்டு 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காத அம்லா 108 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்காற்றியிருந்தார். பந்து வீச்சில் சதாப் கான் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

ஆஸி. மண்ணில் சாதனை படைத்த மஹேந்திர சிங் டோனி

ஆஸி. மண்ணில் 1,000 ஓட்டங்களை கடந்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் …

மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி கண்ட நிலையில்  ஒருநாள் தொடரில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இமாம் உல் ஹக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் வெற்றியிலக்கை கடந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இமாம் 86 ஓட்டங்களையும் பாபர் அசாம் ஒரு ஓட்டத்தால் அரைச்சதம் பெறும் வாய்ப்பை இழந்து 49 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு பங்காற்றினர். சிரேஷ்ட வீரர் ஹபீஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்கள் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்து ஆட்ட நாயகன் விருதையும் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

   இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளை மறுதினம் (22) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா அணி – 266/2 (50) – அம்லா 108*, டஸ்ஸன் 93, ஹென்ரிக்ஸ் 45, சதாப் கான் 41/1, ஹசன் அலி 42/1

பாகிஸ்தான் அணி – 267/5 (49.1) – இமாம் 86, ஹபீஸ் 71*, பாபர் அசாம் 49, ஒலீவியர் 73/2, ஹென்ரிக்ஸ் 13/1

முடிவு : பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<