தென்னாபிரிக்காவின் வெற்றியால் இலங்கைக்கு தரவரிசையில் முன்னேற்றம்

1840

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என வைட்வொஷ் முறையில் இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் ஏழாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், இலங்கை அணி ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.    

BPL தொடரில் தனது முதல் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த திசர பெரேரா

நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 என மூவகைப் ….

பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இன்று (14) நிறைவுக்கு வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 381 என்ற வெற்றியிலக்கினை நோக்கிய பாகிஸ்தான் அணி, 273 ஓட்டங்களுக்கு சுருண்டு, 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரை இழந்தது.

தற்போது, இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடர் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC புதிய டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடரை வைட்வொஷ் முறையில் வென்ற தென்னாபிரிக்க அணி, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளை பின்தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், தென்னாபிரிக்க அணி 110 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதேவேளை, டெஸ்ட் தரவரிசையின் மூன்றாவது இடத்தை 108 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து அணியை விட ஒரு புள்ளி வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி நான்காம் இடத்தை வகிக்கின்றது.

சதமடித்தும் மோசமான சாதனையை நிலைநாட்டிய ரோஹித் சர்மா

அவுஸ்திரேலிய மண்ணில் நான்கு சதங்களை விளாசிய இந்திய….Test ranking

அத்துடன், இலங்கை (91) அணியை விட 10 புள்ளிகள் முன்னிலையில் உள்ள அவுஸ்திரேலிய அணி 101 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதுடன், பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்க தொடரில் நான்கு புள்ளிகளை இழந்து 88 புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. ஏழாவது இடத்தை பிடித்துள்ள பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை விட மூன்று புள்ளிகள் பின்தங்கியுள்ளது.

இதேவேளை, டெஸ்ட் தரவரிசையின் 8ம், 9ம் மற்றும் 10ம் இடங்களை முறையே மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பிடித்துள்ளன.

அதேநேரம், புதிய டெஸ்ட் தரவரிசையை பொருத்தவரை நியூசிலாந்து அணியை விட ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலையை வகிக்கும் இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெற்றிக்கொள்ளும் பட்சத்திலேயே, தங்களுடைய மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<