இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற மேல் மாகாண வடக்கு அணி

425

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ஊவா மாகாணத்தை மேல் மாகாண வடக்கு அணி, இன்னிங்ஸ் மற்றும் 8 ஓட்டங்களால் அபாரமாக வெற்றி கொண்டுள்ளது.

இரண்டு நாள் கொண்ட இந்த போட்டிகளின் மேலும் இரண்டு ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (16) முடிவடைந்தன. இதில் வடமேல் மாகாண மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு இடையிலான போட்டியும், மேல் மாகாண மத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையிலான ஆட்டமும் சமநிலையில் முடிந்தன.

மேல் மாகாணம் வடக்கு எதிர் ஊவா மாகாணம்    

சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் இரண்டாவது நாள் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மேல் மாகாண வடக்கு அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களை பெற்றது.

ஷம்மு அஷான் 108 ஓட்டங்களை பெற்றதோடு பதும் நிசங்க 70 ஓட்டங்களை குவித்தார். ஊவா அணி சார்பில் எஸ். கோபினாத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

சந்தகன் பதிரன 10 விக்கெட்டுகள்; மேல் மாகாண தெற்கு 2 விக்கெட்டுகளால் வெற்றி

சந்தகன் பதிரன 10 விக்கெட்டுகள்; மேல் மாகாண தெற்கு 2 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடை….

ஆட்டத்தின் முதல் நாளான கடந்த சனிக்கிழமை ஊவா அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸுக்கு 163 ஓட்டங்களையே பெற்றது. இதனால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 129 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தது.

இவ்வாறான ஒரு நிலையில் அவ்வணியினர் 43.3 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. லிசுல லக்ஷான் மாத்திரம் அதிகபட்சமாக 54 ஓட்டங்களை பெற்றார். நிஷாய்த பீரிஸ் 27 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

ஊவா மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) 163 (45.1) – நவின்து நிர்மால் 64, மீதும் தினெத் 37, பினிர பெர்னாண்டோ 5ஃ20

மேல் மாகாண வடக்கு (முதல் இன்னிங்ஸ்) 292 (76.5) – ஷம்மு அஷான் 108, பதும் நிசன்க 70, எஸ். கோபினாத் 5/69

ஊவா மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 121 (43.3) லிசுல லக்ஷான் 54, நிஷான்த பீரிஸ் 5/27, துவின்த திலகரத்ன 4/38

போட்டி முடிவு – மேல் மாகாண வடக்கு அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ஓட்டங்களால் வெற்றி


வடமேல் மாகாணம் எதிர் வட மத்திய மாகாணம்

பாகொட இராணுவ மைதானத்தில் சனிக்கிழமை (15) ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட வடமேல் மாகாண அணி 29.1 ஓவர்களில் 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வட மத்திய மாகாண அணி 57.3 ஓவர்களில் 158 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (16) தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த வடமேல் மாகாண அணி 54 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. சிறப்பாக ஆடிய ருக்ஷான் பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை பெற்றதோடு பினோத் பானுக்க 70 ஓட்டங்களை குவித்தார். ஹரித் மதுவன்த மற்றும் சன்துல வீரரத்ன ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் 293 ஓட்ட வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த வடமத்திய மாகாண அணி ஆட்டநேரம் முடியும் வரை கடைசி விக்கெட்டை காத்துக் கொண்டு போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை பெற்ற நிலையிலேயே போட்டி முடிவுக்கு வந்தது.

வட மத்திய மாகாண அணிக்காக தினெத் ஹேவாதன்த்ரி 89 ஓட்டங்களை பெற்றார். எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற வடமத்திய மாகாண அணி அதற்கான புள்ளிகளைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

வட மேல் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) 104 (29.1) – சஷி டில்ரங்க 20, ஹேலகமல் நாணயக்கார 5/34, சந்துல வீரரத்ன 3/15,

வடமத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 158 (57.3) ஹேலகமல் நாணயக்கார 69, சச்சின்த பீரிஸ் 3/43, அசித் பெர்னாண்டோ 3/34

வட மேல் மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 247/9d (54) ருக்ஷான் பெர்னாண்டோ 86* , மினோத் பானுக 70, ஹரித் மதுவன்த 3/50, சன்துல வீரரத்ன 3/32

வடமத்திய மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 192/9 (51) டினெத் ஹேவாதந்த்ரி 89, சச்சின்த பீரிஸ் 4/61, திரிந்து ரத்னாயக்க 3/54

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


மேல் மாகாணம் மத்தி எதிர் மத்திய மாகாணம்

CCC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதற்கான புள்ளிகளை மத்திய மாகாணம் தட்டிச் சென்றது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேல் மாகாண மத்திய அணி தனது முதல் இன்னிங்ஸுக்கு 249 ஓட்டங்களை பெற்றது. இன்னிலையில் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (16) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மத்திய மாகாண அணி 77.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 298 ஓட்டங்களை பெற்றது. ரொன் சந்திரகுப்தா தனது சதத்தை ஒரு ஓட்டத்தால் பறிகொடுத்தார். தனுக தாபரே 70 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் 49 ஓட்டங்களால் பின்தங்கிய மேல் மாகாண மத்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்தது. அந்த அணி கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது 59 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை பெற்றது. மனில்க டி சில்வா 67 ஓட்டங்களை பெற்றதோடு ஜனித் லியனகே ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை குவித்தார்.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் மத்திய (முதல் இன்னிங்ஸ்)- 249 (53.2) அகீல் இன்ஹாம் 53, ஹிமச லியனகே 75, முஹமது ஷிராஸ் 4/55, லக்ஷான் பெர்னாண்டோ 4/60

மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 298 (77.4) ரொன் சந்திரகுப்தா 99, தனுக்க தபாரே 70, ஜனித் லியனகே 3/63

மேல் மாகாணம் மத்திய (இரண்டாவது இன்னிங்ஸ்)- 226/6 (59) மனில்க டி சில்வா 67, ஜனித் லியனகே 59ழ*, லக்ஷான் பொர்னாண்டோ 2/52, முஹமது ஷிராஸ் 2/66

 போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு