கடற்படையை தோல்வியிலிருந்து மீட்ட முஹம்மத் அல்பார்

187
Mohamed Alfar

2017/2018 பருவகாலத்திற்கான இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் பிரிவு B இற்கான 4  போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்தன.

காலி கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

DICS மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழக அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது. ராஜித பிரியன் 87 ஓட்டங்களையும் தமித ஹுனுகும்புற 58 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சதிக் நிமல்ஷ 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கடற்படை அணி தமது முதல் இன்னிங்சுக்காக 234 ஓட்டங்களைப் பெற்றது. புத்திக்க ஹசரங்க 88 ஓட்டங்களையும் குசல் எடிசூரிய 75 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கயான் சிரிசோம 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய காலி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது. தமித ஹுனுகும்புற 64 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் சுதார தக்சின 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான இறுதி T-20யின் நேரடி வர்ணனை

இலங்கை எதிர் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான T-20 தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று (18) சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் .

249 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கடற்படை அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 256 (82.1) – ராஜித பிரியன் 87, தமித ஹுன்னுகும்புற 58, சதிக் நிமல்ஷ 4/64

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 234 (77) – புத்திக்க ஹசரங்க 88, குசல் எடுசூரிய 75, கயான் சிரிசோம 6/81

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 226 (74.4) – தமித ஹுன்னுகும்புற 64, சானக விஜேசிங்ஹ 32, சுதார தக்சின 8/80

கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 117/7 (33) – முஹம்மத் அல்பார் 36, சுபுன் லீலரத்ன 5/46

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது லங்கன்


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

மத்தேகொட இராணுவப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லங்கன் அணி 188 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பொலிஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை லங்கன் அணிக்கு வழங்கியது. இதன்படி லங்கன் அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றது. லக்ஷான் ரொட்ரிகோ 67 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஹசித நிர்மல் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணி 187 ஓட்டங்களைப் பெற்றது. நிமேஷ் விமுக்தி 56 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரஜீவ வீரசிங்ஹ 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய லங்கன் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. தினுஷ்க மாலன் 50 ஓட்டங்களையும் சஷீன் பெர்னாண்டோ 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹசித நிர்மல் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

365 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணி 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. ரஜீவ வீரசிங்ஹ மற்றும் கீத் குமார ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 242 (77) – லக்ஷான் ரொட்ரிகோ 67, மதுரங்க சொய்சா 42, கீத் குமார 36, ஹசித நிர்மல் 4/83, நிமேஷ் விமுக்தி 3/59

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 187 (55.3) – நிமேஷ் விமுக்தி 56, கீத் சில்வா 40, ரஜீவ வீரசிங்ஹ 5/66

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 310/9d (78) – தினுஷ்க மாலன் 50*, சஷீன் பெர்னாண்டோ 49, மதுரங்க சொய்சா 45, ஹசித நிர்மல் 5/102

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 177 (34.1) – சமித் துஷாந்த 79, ரஜீவ வீரசிங்ஹ 3/56, கீத் குமார 3/20

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 188 ஓட்டங்களால் வெற்றி.


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர் விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் களுத்துறை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணி முதல் இன்னிங்சுக்காக 226 ஓட்டங்களைப் பெற்றது. ரொஸ்கோ தட்டில் ஆட்டமிழக்காது 93 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் பசிந்து மதுஷான் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய களுத்துறை அணி 197 ஓட்டங்களைப் பெற்றது. நிமேஷ் 75 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரசிந்திர சில்வா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இலங்கை பிரீமியர் லீக் சம்பியனாக சிலாபம் மேரியன்ஸ்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரில் நடப்பு சம்பியன் SSC அணியை 264 ஓட்டங்களால் வீழ்த்தி

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. மிலான் ரத்னாயாக ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மதீஷ பெரேரா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

178 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய களுத்துறை அணி 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. நிலுஷன் நோனிஸ் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 226 (69.2) – ரொஸ்கோ தட்டில் 93*, டுலாஷ் உதயங்க 52, பசிந்து மதுஷான் 7/98

களுத்துறை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 197 (59) – M. நிமேஷ் 75, மதீஷ பெரேரா 34, ரசீந்திர சில்வா 5/54, புத்திக்க சந்தருவன் 3/68

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 147 (65.1) – மிலான் ரத்னயாக 53*. மதீஷ பெரேரா 5/44, பசிந்து மதுஷான் 3/50  

களுத்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 178/6 (49.2) – நிலுஷன் நோனிஸ் 59*, எரங்க ரத்னாயாக 36, நிமேஷ் மென்டிஸ் 3/42, புத்திக்க சந்தருவன் 2/56

முடிவு – களுத்துறை நகர் விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் விளையாட்டுக் கழகம்

குருநாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு அணி முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட்டுகளை இழந்து 490 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பிரசன்ன ஜயமான்ன ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கேஷான் விஜேரத்ன மற்றும் ருவந்த ஏகநயக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய குருநாகல் இளையோர் அணி 310 ஓட்டங்களைப் பெற்றது. ஹஷான் பிரபாத் ஆட்டமிழக்காது 154 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரோஷேன் பெர்னாண்டோ 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அகீல் இன்ஹாம் 38 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய குருநாகல் இளையோர் அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 490/6d (130.2) – பிரசன்ன ஜயமான்ன 200*, செஹான் வீரசிங்ஹ 85, பிரவீன் பெர்னாண்டோ 79

குருநாகல் இளையோர் விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 310 (86.5) – ஹஷான் பிரபாத் 154*, தனுஷ்க தர்மசிறி 70, ரோஷேன் பெர்னாண்டோ 5/95, உமேக சதுரங்க 2/96, செஹான் வீரசிங்ஹ 3/65

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 113/6d (20) – அகீல் இன்ஹாம் 38, மலித் குரே 3/43

குருநாகல் இளையோர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 173/4 (31) – சரித் மென்டிஸ் 66, உமேக சதுரங்க 2/50

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.