இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறைவுற்றுள்ளன. கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொழும்பு அணி, காலி அணியை வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தது.

இலங்கை அணியின் அடுத்த இலக்காக உள்ள சதீரவின் அதிரடி சதம்

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர்வரும் ICC சம்பியன்ஸ் கிண்ணப்..

மூன்று வார காலமாக தொடர்ந்து நடைபெற்ற இப்போட்டித் தொடரில் 4 அணிகள் உள்ளடங்களாக 60க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் பல்வேறு வீரர்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த வகையில், குறித்த தொடரில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்த வீரர்கள் விபரம் உங்களுக்காக..

சதீர சமரவிக்கரமகாலி

Sadeera Samarawickramaவெறும் 21 வயதுடைய வலது கை துடுப்பாட்ட வீரரான இவர், இந்த தொடரில் அதிகமாக ஓட்டங்களை பெற்ற வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். அத்துடன், சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

ஜோசப் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், இந்தப் போட்டித் தொடரில் மொத்தமாக 7 போட்டிகளில் பங்குபற்றி 343 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டதோடு கண்டி அணியுடனான ஆரம்பப் போட்டியில் சதம் விளாசி 109 ஓட்டங்களை அடித்தார்.  அத்துடன் தம்புள்ள அணிக்கெதிரான கட்டாயமாக வெற்றி பெறவேண்டிய போட்டியில் களமிறங்கி நிதான  ஆட்டத்தை வெளிப்படுத்தி 120 ஓட்டங்களைப் பெற்று தனக்குள் இருந்த திறமை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தினார்.

மேலும், 39 பௌண்டரிகளை விளாசி குறித்த தொடரில் அதிக பௌண்டரிகளை அடித்த வீரர் என்ற சாதனையையும் தனதாக்கினார். துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாது விக்கெட் காப்பாளராகவும் திறமைகளை வெளிப்படுத்தி 9 பிடியெடுப்புக்கள் உள்ளடங்களாக 8 ஸ்டம்ப் ஆட்டமிழப்புக்களை பதிவு செய்தார்.

அத்துடன், விக்கெட் காப்பாளர்களாக செயல்பட்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா, லஹிரு மிலந்த மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகியோரின் கடும் போட்டிக்கு மத்தியில் சதீர தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டில்ஷான் முனவீர   

Dilshan Munaweeraஅதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டில்ஷான் முனவீர நடைபெற்ற ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தமை கொழும்பு அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

மொத்தமாக 7 போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டில்ஷான் முனவீர, 275 ஓட்டங்களுடன் சராசரியாக போட்டிக்கு 40 ஓட்டங்களை பதிவு செய்துள்ளார். அத்துடன், ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, தனுஷ்க குனதிலக்க மற்றும் சமரவிக்ரம ஆகியோருக்கு மத்தியில், 120 என்ற துடுப்பாட்ட வேக விகிதத்தில்  ஓட்டங்களை குவித்தமை இவரது மற்றொரு சிறப்பம்சமாகும்.

முதலிரண்டு போட்டிகளில் ஓட்டங்களை குவிக்கத் தவறிய டில்ஷான் முனவீர போட்டித் தொடரில் கூடிய ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்திருந்தார். அத்துடன், ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 299 ஓட்டங்களை விரட்டிய கொழும்பு அணிக்காக அதிரடியாக   துடுப்பாடி 54 பந்துகளில் 86 ஓட்டங்களை விளாசி இலக்கை அடைய பங்களிப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திமுத் கருணாரத்ன

Dimuth Karunarathneஇலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன, காலி அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் போட்டித் தொடர் முழுவதும் மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கியிருந்தார்.  

அந்த வகையில், திமுத் கருணாரத்ன ஒருநாள் போட்டி துடுப்பாட்ட வீரராக அறியப்பாடாத நிலையில், இத்தொடரில் மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 45.57 என்ற சராசரியில் 319 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இடது கை துடுப்பாட்ட வீரரான கருணாரத்ன இப்போட்டித் தொடரில் மூன்று அரைச் சதங்களை பெற்று காலி அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாவதற்கு பாரிய பங்களிப்புகளை வழங்கினார். அதேவேளை, போட்டித் தொடரில் கூடிய ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் மத்தியில் மூன்றாவது இடத்தையும் இவர் பிடித்தார்.

அத்துடன், அவருடைய ஸ்தீரமான துடுப்பாட்டம் பானுக்க ராஜபக்ஷ, குசல் மெண்டிஸ் மற்றும் சரித் அஷங்க போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு மத்தியில் முக்கியமான இடமான அணியின் மூன்றாவது இடத்தில் தொடர்ந்தும் துடுப்பாடுவதற்கு வழி வகுத்திருந்தது.

சகல துறையிலும் அசத்திய ஷெஹான் ஜயசூரிய; இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள கொழும்பு அணி

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர்வரும் ICC சம்பியன் கிண்ணப்..

தினேஷ் சந்திமல் (அணித் தலைவர்- கொழும்பு அணி)

Dinesh Chandimalபோட்டித் தொடரின் நாயகனாகத் தெரிவாகிய தினேஷ் சந்திமல், தொடர் முழுவதும் அதிரடியாக துடுப்பாடி கொழும்பு அணியை இறுதிப் போட்டிக்கு வழிநடத்திய அதேநேரம், இறுதிப் போட்டியில் 113 ஓட்டங்களை விளாசி சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அத்துடன், 79.60 என்ற சராசரியில் 7 போட்டிகளில் மொத்தமாக 398 ஓட்டங்களை பெற்று, கூடிய ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார்.

அவர் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைச் சதங்களை விளாசியதோடு மட்டுமல்லாது களத்திலும் அணியை வழிநடத்தி தலைமைத்துவத்தில் பிரகாசித்தார். அத்துடன் தடையின்றி தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்கவும் முன்னின்று செயலாற்றினார்.  

அந்த வகையில், ஏனைய அணித் தலைவர்களான உபுல் தரங்க, சாமர கப்புகெதர ஆகியோரை விட சிறந்த அணித் தலைவராக தன்னை முன்னிலைப்படுத்தியதோடு, சிறந்த நான்காவது துடுப்பாட்ட வீரராகவும் முன்னிலை பெற்றிருந்தார்.

அதேநேரம், தினேஷ் சந்திமாலின் இந்த அதிரடித் துடுப்பாட்டத்தின் வெளிப்பாடு, இங்கிலாந்தில் எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு நிச்சியமாக இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்கு கைகொடுக்கும் என நம்பப்படுகின்றது.

சாமர கபுகெதரகண்டி

Chamara Kapugedaraஇப்போட்டித் தொடரில் அதிக இலாபத்தை பெற்றுக்கொண்ட வீரராக சாமர கபுகெதர உள்ளார். 4 போட்டிகளில் மாத்திரமே விளையாடிய இவர் முதல் சுற்றுப் போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசி தேசிய ஒருநாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார்.

நான்கு போட்டிகளில் மாத்திரம் விளையாடிய கபுகெதர தம்புள்ள அணிக்கெதிரான இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக  இரண்டு சதங்களை விளாசி மொத்தமாக 287 ஓட்டங்களுடன் 95.67 என்ற  சராசரியுடன் கூடிய ஓட்டங்களைப் பெற்ற துடுப்பாட்ட பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தார்.

அதேநேரம், இவரது துடுப்பாட்ட வேக விகிதம் 140 க்கும் அதிகமாக இருந்தது. தம்புள்ள அணிக்கெதிரான போட்டியில் 14 பௌண்டரிகள் மற்றும் 2 சிஸ்சர்கள் உள்ளடங்களாக வெறும் 50 பந்துகளில் 105 ஓட்டங்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது.

கபுகெதர, தனது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இறுதி இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. அது இறுதிப் போட்டிக்கு தெரிவாவதில் கண்டி அணிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், துடுப்பாட்ட வரிசையில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கியிருந்த அவர் சம்மு அஷான், கித்ருவான் விதானகே மற்றும் ஹர்ஷ குரே ஆகியோரை விடவும் முன்னிலை பெற்றார்.

ஷெஹான் ஜயசூரியகொழும்பு

Shehan Jayasuriyaஇத்தொடரின் 7 போட்டிகளில் பங்குபற்றிய ஷெஹான் ஜயசூரிய மொத்தமாக 198 ஓட்டங்களை பெற்றிருந்தார். எனினும், கண்டி அணிக்கெதிரான போட்டியில் கொழும்பு அணி குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கும் இக்கட்டான நிலையில் இருந்தபோது, இவர் சிறப்பாக ஆடி 30 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தி ஸ்திரமான நிலைக்கு வலுப்படுத்தியிருந்தார்.

அத்துடன், இறுதிப் போட்டியில் 77 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை, அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுடன் பெறுமதி மிக்க 139 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தார். இவை தவிர, அணியின் 6ஆவது துடுப்பாட்டத்திற்கான சிறந்த வீரராக தன்னை அடையாளப்படுத்தியிருந்தார்.  

மேலும், சுழற்பந்து வீசக்கூடிய ஷெஹான் ஜயசூரிய மொத்தமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.  சகலதுறை வீரராக பிரகாசித்த இவர் கூடிய விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். அத்துடன், தம்புள்ள அணிக்கெதிரான போட்டியில்,  சிறந்த பந்து வீச்சாக 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்

ஐ.சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் மேலும் வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை

மே மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்டிருக்கும் ஐ.சி.சி இன் ஒரு நாள் அணிகள்..

தசுன் ஷானக்க  – காலி

Dasun Shanakaகாலி அணி 250 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொண்ட போட்டிகள் அனைத்திலும் தசுன் ஷானக்க பாரிய தாக்கத்தினை ஏற்றப்படுத்தியிருந்த போதிலும் இறுதிப் போட்டியில் பிரகாசிக்கத் தவறியிருந்தார். எனினும்,  7 போட்டிகளில் பங்குகொண்ட அவர் 140 விகித துடுப்பாட்ட வேகத்தில், 285 ஓட்டங்களை விளாசி, சராசரியாக  71.25 என்ற ஓட்ட விகிதத்தை பதிவு செய்தார்.

கூடிய ஓட்டங்களை பெற்றுக்கொண்ட துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்றுக்கொண்ட தசுன் ஷானக்க மொத்தமாக 20 சிஸ்சர்களை விளாசி, தொடரில் கூடிய சிஸ்சர்களை பெற்றுக்கொண்ட வீரர்களில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.  

பல சந்தர்ப்பங்களில் பந்து வீச்சில் பங்களிப்பு செய்த தசுன் ஷானக்க காலி அணி சார்பாக மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றி சகல துறை ஆட்டக்காரராக, திசார பெரேராவை விடவும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

சஜித்ர சேனநாயக்க – கொழும்பு  

Sachithra Senanayakeகொழும்பு அணியின் முக்கியமான சூழல் பந்து வீச்சாளரான சஜித்ர சேனநாயக்க போட்டித் தொடரிலும் சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அத்துடன், இடது கை துடுப்பாட்ட வீரர்களை நெருக்கடியில் வீழ்த்தியதுடன் 7 போட்டிகளில் பங்குபற்றி மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

மேலும், போட்டித் தொடர் முழுவதும் ஓவருக்கு 4.22 என்ற சராசரியில் துடுப்பாட்ட வீரர்களை ஓட்டம் பெறுவதில் இருந்து கட்டுப்படுத்தி  ஓட்டங்களை மட்டுப்படுத்தினார்.  இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி கொழும்பு அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கு  பங்களிப்புச் செய்த அதேவேளை, அகில தனஞ்சய (காலி)  மற்றும் டில்ருவான் பெரேரா (தம்புள்ள)  ஆகியோரைவிட முன்னிலை பெற்றார்.  

நுவன் பிரதீப் – கண்டி

Nuwan Pradeepஇவர் இந்த போட்டித் தொடரில் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்ட கண்டி அணிக்காக 4 போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றி 22.11 என்ற சராசரியில், 9 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிர்வரும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்துக்கொண்டார்.

வேகம் குறைந்த பந்துகள் மற்றும் யோக்கர் பந்துகளை சிறந்த முறையில் வீசி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்திருந்த நுவன் பிரதீப், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவருடைய இணைப் பந்து வீச்சாளராகத் திகழும் சுரங்க லக்மாலை பின்தள்ளி முன்னிலை பெற்றார்  

மலிந்த புஷ்பகுமார – காலி

Malinda Pushpakumaraஇதுவரை தேசிய அணியில் இடம் பெற்றிறாத மலிந்த புஷ்பகுமார 6 போட்டிகளில் பங்குபற்றி மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

30 வயதான மலிந்த புஷ்பகுமார இந்த போட்டித் தொடர் முழுவதும் ஓவருக்கு 4.11 சராசரியில் ஓட்டங்களை வழங்கியிருந்தார். அத்துடன், கொழும்பு அணிக்கெதிரான போட்டியில், 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்து வீச்சையும் பதிவு செய்திருந்தார். மேலும், இந்த போட்டித் தொடரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரேயொரு பந்து வீச்சாளராகவும் பதிவானார்.

அத்துடன், தன்னுடைய நேர்த்தியான பந்து வீச்சின் மூலம்,  ஏனைய இடது கை சூழல் பந்து வீச்சாளர்களாகிய சஜித் பத்திரன, லக்ஷன் சண்டகன் மற்றும் அமில அபோன்சோ ஆகியோரை புறம் தள்ளி தன்னை முன்னிலைப் படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அசித்த பெர்னாண்டோதம்புள்ள

Asitha Fernandoதற்பொழுது 19 வயதையுடைய வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ 6 போட்டிகளில் பங்குபற்றி 30.75 என்ற சராசரியில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இருந்த போதிலும் அவர் அதிகளவான ஓட்டங்களை வழங்கியிருந்தார். அத்துடன் ஓவருக்கு 6.49 ஓட்ட விகிதத்தினை வழங்கியிருந்தார். எனினும், போட்டியின் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஸ்விங் மற்றும் யோக்கர் பந்துகளை தொடர் முழுவதும் சிறப்பாக பயன்படுத்தி விக்கெட்டுக்களை கைப்பற்றிய அதேநேரம், போட்டித் தொடருக்கான சிறந்த பந்து வீச்சாளராக தெரிவானார். அந்த வகையில் அவருடன் போட்டியிட்ட லஹிரு கமகே, விஸ்வ பெர்னாண்டோ மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரை புறந்தள்ளி முன்னிலை பெற்றார்.

இந்த போட்டித் தொடரில் உங்கள் தெரிவு யார்? உங்கள் அணியை கீழே பதிவிடுங்கள்