மாகாண மட்ட 50 ஓவர் தொடருக்கான குழாம், அட்டவணை அறிவிப்பு

1024

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பட்டில் மாகாண மட்ட சுப்பர் 50 ஓவர் போட்டித் தொடர் வரும் மே 2ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இதன் இறுதிப் போட்டி மே 20ஆம் திகதி ஆர். பிரேமதாச அரங்கில் மின்னொளியில் நடைபெறும்.

நான்கு நாள் போட்டித் தொடர் பெரும் வெற்றி அளித்த நிலையிலேயே 50 ஓவர்கள் கொண்ட A நிலை தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

மாலிங்கவை மீண்டும் நிராகரித்த மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளரான….

கடந்த ஆண்டிலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் சபை இதேபோன்ற போட்டித் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணி தொடரை வென்றது. இம்முறையும் அவர் பலம்மிக்க கொழும்பு அணி ஒன்றுக்கு தலைமை வகிக்கவுள்ளார். அதேபோன்று, இலங்கை ஒரு நாள் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் கண்டி அணிக்கு தலைமை வகிக்கவுள்ளார். உபுல் தரங்க மற்றும் குசல் ஜனித் பெரேரா முறையே காலி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு தலைமை வகிக்கவுள்ளனர்.

இந்த நான்கு அணிகளுக்குமான 23-24 வீரர்கள் கொண்ட உத்தேச குழாம்களை இலங்கை அணியின் தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் சில வீரர்கள் இன்னும் தமது காயங்களில் இருந்து சுகம்பெற்று வருபவர்களாக உள்ளனர். தேசிய அணி வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் பங்கேற்று மேற்கிந்திய தீவுகளுடனான போட்டிக்கு தமது உடற்தகுதியை நிரூபிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தொடரில் அணி ஒன்றுக்கு மூன்று லீக் போட்டிகளே உள்ளன.

இலங்கை அணியில் இடம் கிடைக்காமல் தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக உள்ள லசித் மாலிங்க தம்புள்ளை குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு போட்டிக்குமாக ஒவ்வொரு குழாமும் அந்தந்த அணி முகாமையால் 15 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.

தென்னாபிரிக்காவிற்கான இலங்கை அணியின் சுற்றுப்பயண விபரம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள்….

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து ThePapare.com இறுதிப் போட்டி உட்பட ஏழு போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை கொண்டுவரவுள்ளது.

குழாம்கள்

கொழும்பு – தினேஷ் சந்திமால் (தலைவர்), திசர பெரேரா (உப தலைவர்), தனஞ்சய டி சில்வா, செஹான் ஜயசூரிய, லஹிரு திரிமான்ன, அஞ்செலோ பெரேரா, டில்ஹான் குரே, சாமர சில்வா, டில்ஷான் முனவீர, லசித் அபேரத்ன, சமித் துஷன்த, நிசல் பிரான்சிஸ்கோ, வனிந்து ஹசரங்க, திக்ஷில டி சில்வா, கவிஷ்க அங்சுல, லக்ஷான் சதகன், சச்சின்த பீரிஸ், லசித் அம்புல்தெனிய, விகும் சஞ்சய, விஷ்வ பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, நிபுன் மாலிங்க (19 வயதுக்கு உட்பட்ட வீரர்), கமிந்து மெண்டிஸ் (19 வயதுக்கு உட்பட்ட வீரர்), சரித் சேனநாயக்க (முகாமையாளர்), அவிஷ்க குணவர்தன (பயிற்சியாளர்).

காலி – உபுல் தரங்க (தலைவர்), தசுன் ஷானக்க (உப தலைவர்), பானுக்க ராஜபக்ஷ, சதீர சமரவிக்ரம, லஹிரு மிலன்த, ஜனித் லியனகே, சதுரங்க டி சில்வா, ரமித் ரம்புக்வெல்ல, மாதவ வர்ணபுர, அண்டி சொலமன்ஸ், டெஷான் டயஸ், இரோஷ் சமரசூரிய, செஹான் பெர்னாண்டோ, சம்மு அஷான், சிகுகே பரசன்ன, சதுர ரன்துனு, மலிந்த புஷ்பகுமார, நிஷான் பீரிஸ், சுரங்க லக்மால், நிசல தாரக்க, மொஹமட் டில்ஷாத், தன்ஞ்சய லக்ஷான் (19 வயதுக்கு உட்பட்ட வீரர்), அஷேன் பண்டார (19 வயதுக்கு உட்பட்ட வீரர்), வருண வாரகொட (முகாமையாளர்), ஹஷான் திலகரத்ன (பயிற்சியாளர்).

கண்டி – அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), நிரோஷன் திக்வெல்ல (உப தலைவர்), தனுஷ்க குணதிலக்க, அசேல குணரத்ன, சாமர கபுகெதர, மினோத் பானுக்க, மஹேல உடவத்த, அவிஷ்க பெர்னாண்டோ, தரங்க பரணவிதான, பிரியமால் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, ஜீவன் மெண்டிஸ், சச்சித் பதிரண, அதீஷ நாணயக்கார, ரமேஷ் மெண்டிஸ், பிரமோத் மதுஷான், சரித் அசலங்க, இசுரு உதான, நிபுன் காரியவசம், கசுன் ராஜித்த, லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, ஹசித்த போயகொட (19 வயதுக்கு உட்பட்ட வீரர்), ஜெஹான் டானியல் (19 வயதுக்கு உட்பட்ட வீரர்), மலிந்த வர்ணபுர (முகாமையாளர்), பியல் விஜேதுங்க (பயிற்சியாளர்).

இலங்கை கிரிக்கெட்டின் அழிவுக்கு அரசியல்வாதிகளே காரணம் – முரளிதரன்

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளின் தலையீடுகளால்…..

தம்புள்ளை – குசல் ஜனித் பெரேரா (தலைவர்), மிலிந்த சிறிவர்தன (உப தலைவர்), லசித் மாலிங்க, குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, அமில அபொன்சோ, சச்சித்ர சேரசிங்க, சச்சித்ர சேனநாயக்க, அஷான் பிரியன்ஜன், லஹிரு கமகே, நபுன் கருனநாயக்க, சங்கீத் குரே, திலகரத்ன சம்பத், லஹிரு மதுஷங்க, அசித் பெர்னாண்டோ, ஜெப்ரி வென்டர்சே, செஹான் மதுஷங்க, ருவிந்து குணசேக்கர, கோசல குலசேகர, சஹன் நாணக்கார, மஹேஷ் பிரியதர்ஷன, டி.ஏ. ரத்னாயக்க, நிஷான் மதுஷங்க (19 வயதுக்கு உட்பட்ட வீரர்), திசரு ரஷ்மிக்க டில்ஷான் (19 வயதுக்கு உட்பட்ட வீரர்), வினோதன் ஜோன் (முகாமையாளர்), சுமித்ர வர்ணகுலசூரிய (பயிற்சியாளர்).

போட்டி அட்டவணை

மே 02 – கொழும்பு எதிர் தம்புள்ளை – ஆர். பிரேமதாச (நேரடி)

      கண்டி எதிர் காலி – பீ. சரா

மே 05 – கொழும்பு எதிர் கண்டி – ஆர். பிரேமதாச (நேரடி)

      தம்புள்ளை எதிர் காலி – CCC

மே 08 – கொழும்பு எதிர் காலி – ஆர். பிரேமதாச (நேரடி)

      தம்புள்ளை எதிர் கண்டி – பீ. சரா

மே 11 – காலி எதிர் கண்டி – பீ. சரா (நேரடி)

       தம்புள்ளை எதிர் கொழும்பு – CCC

மே 14 – காலி எதிர் தம்புள்ளை – பீ. சரா (நேரடி)

       தம்புள்ளை எதிர் கொழும்பு – CCC

மே 17 – கண்டி எதிர் தம்புள்ளை – பீ. சரா (நேரடி)

      காலி எதிர் கொழும்பு – ஆர். பிரேமதாச

மே 20 – இறுதிப் போட்டி – ஆர். பிரேமதாச (பகலிரவு – நேரடி)

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க