Home Tamil மெதிவ்ஸின் சதத்தோடு தம்புள்ளை அணிக்கு மாகாண ஒருநாள் தொடரில் மூன்றாம் இடம்

மெதிவ்ஸின் சதத்தோடு தம்புள்ளை அணிக்கு மாகாண ஒருநாள் தொடரில் மூன்றாம் இடம்

927

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் குழாத்தினை தெரிவு செய்யும் நோக்குடன் ஒழுங்கு செய்திருக்கும் “சுபர் ப்ரொவின்சியல்” ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் பிளேஒப் போட்டியில் தம்புள்ளை அணி, கண்டி அணியினை 92 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

திசர, திமுத்தின் சிறப்பாட்டங்களினால் கண்டி அணிக்கு ஆறுதல் வெற்றி

அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் பொறுப்பான துடுப்பாட்டம் மற்றும் திசர பெரேராவின் அதிரடி…

இந்த தொடரில் தொடரில் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொள்ளும் அணியினை தேர்வு செய்ய நடாத்தப்பட்ட இந்த பிளேஒப் போட்டி, தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இன்று (10) ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கண்டி அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான தம்புள்ளை அணிக்காக வழங்கினார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் ஏமாற்றம் தந்தனர். இதில் குணத்திலக்க 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழக்க, நிரோஷன் திக்வெல்ல வெறும் 4 ஓட்டங்களை மட்டும் பெற்றிருந்தார். இலங்கை அணியின் உப தலைவரான நிரோஷன் திக்வெல்ல இந்த ஒருநாள் தொடரில் இப்போட்டியோடு சேர்த்து  4 இன்னிங்ஸ்களில் துடுப்பாடி வெறும் 31 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க ஆகியோரினை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ஒசத பெர்னாந்துவும் வெறும் 6 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

இதனால் தடுமாற்றம் ஒன்றினை தம்புள்ளை அணி சந்தித்தது. எனினும், தம்புள்ளை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக அதன் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினர்.

தம்புள்ளை அணியினை கட்டியெழுப்ப உதவிய இந்த இணைப்பாட்டம் மூலம், மெதிவ்ஸ் மற்றும் ராஜபக்ஷ ஜோடியினால் நான்காம் விக்கெட்டுக்காக 195 ஓட்டங்கள் பகிரப்பட்டது. இதேநேரம், தம்புள்ளை அணியின் நான்காம் விக்கெட்டாக ஓய்வறை நடந்த பானுக்க ராஜபக்ஷ 9 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 87 பந்துகளில் 95 ஓட்டங்களை குவித்து சதத்தை வெறும் 5 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார்.

பானுக்க ராஜபக்ஷ ஆட்டமிழந்த நிலையில் அஞ்செலோ மெதிவ்ஸ் சதம் ஒன்றினை கடந்து தம்புள்ளை அணியினை வலுப்படுத்தினார். மொத்தமாக 106 பந்துகளினை எதிர்கொண்ட மெதிவ்ஸ் 9 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அஞ்செலோ மெதிவ்ஸின் விக்கெட்டினை அடுத்து, ஜீவன் மெண்டிஸ் மற்றும் இசுரு உதான ஆகியோர் தமது அதிரடியான ஆட்டம் மூலம் தம்புள்ளை அணியின் ஓட்டங்களை மிக விரைவாக உயர்த்தினர்.

இந்த இரண்டு வீரர்களின் அதிரடி துடுப்பாட்டத்தோடு தம்புள்ளை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தம்புள்ளை அணியை இலகுவாக வீழ்த்திய கொழும்பு

தம்புள்ளை அணிக்கு எதிரான ‘சுப்பர் 4’ மாகாண மட்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில்…

தம்புள்ளை அணியின் துடுப்பாட்டம் சார்பாக பின்வரிசையில் ஆடிய ஜீவன் மெண்டிஸ் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் பெற, இசுரு உதான வெறும் 14 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதேநேரம், கண்டி அணியின் பந்துவீச்சு சார்பில் நுவான் பிரதீப் மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தம்புள்ளை அணியின் துடுப்பாட்டத்தை அடுத்து, போட்டியின் வெற்றி இலக்காக கண்டி அணிக்கு 50 ஓவர்களில் 326 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது.

கண்டி அணியின் துடுப்பாட்டம் சார்பாக சதீர சமரவிக்ரம 70 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, சங்கீத் கூரேவும் அரைச்சதம் ஒன்றுடன் 57 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

மறுமுனையில் தம்புள்ளை அணியின் பந்துவீச்சு சார்பாக தனுஷ்க குணத்திலக்க மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.

Photo Album : Kandy vs Damulla | Super Provincial One Day 2019 | 3rd Place Play Off

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தம்புள்ளை அணி, மாகாண ஒருநாள் தொடரினை மூன்றாம் இடத்தை பெற்றவாறு நிறைவு செய்து கொள்கின்றது.

இதேநேரம், மாகாண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி, நாளை பிளே ஒப் போட்டி இடம்பெற்ற இதே தம்புள்ளை மைதானத்தில் இடம்பெறுகின்றது. தொடரின் இறுதிப் போட்டியில் லசித் மாலிங்க தலைமையிலான தம்புள்ளை அணியும், தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியும் மோதுகின்றன.

போட்டியின் சுருக்கம்

Result


Team Kandy
231/10 (42.2)

Team Dambulla
325/5 (50)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Dimuth Karunaratne b Nuwan Pradeep 4 8 1 0 50.00
Danushka Gunathilake c Jeffrey Vandersay b Thisara Perera 15 38 1 0 39.47
Oshada Ferenado c Malinda Pushapakumara b Nuwan Pradeep 6 14 0 0 42.86
Bhanuka Rajapakse b Kasun Rajitha 95 87 11 2 109.20
Angelo Mathews c Dimuth Karunaratne b Thisara Perera 101 106 9 2 95.28
Jeevan Mendis not out 50 33 2 3 151.52
Isuru Udana not out 34 14 3 2 242.86


Extras 20 (b 5 , lb 4 , nb 0, w 11, pen 0)
Total 325/5 (50 Overs, RR: 6.5)
Bowling O M R W Econ
Nuwan Pradeep 10 1 68 2 6.80
Kasun Rajitha 10 2 71 1 7.10
Thisara Perera 10 0 54 2 5.40
Sachithra Senanayake 10 0 49 0 4.90
Malinda Pushapakumara 5 0 32 0 6.40
Jeffrey Vandersay 5 0 42 0 8.40


Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne b Vishwa Fernando 0 2 0 0 0.00
Sadeera Samarawickrama b Jeevan Mendis 70 66 9 0 106.06
Sangeeth Cooray lbw b Isuru Udana 57 79 8 0 72.15
Pathum Nissanka c Niroshan Dickwella b Ishan Jayaratne 11 14 0 0 78.57
Sachithra Senanayake c Vishwa Fernando b Danushka Gunathilake 17 24 2 0 70.83
Chathuranga de Sliva c Ishan Jayaratne b Danushka Gunathilake 30 31 4 0 96.77
Thisara Perera b Isuru Udana 21 17 1 1 123.53
Jeffrey Vandersay run out (Ishan Jayaratne) 0 0 0 0 0.00
Malinda Pushapakumara c Ashan Priyanjan b Jeevan Mendis 9 13 0 0 69.23
Kasun Rajitha c Niroshan Dickwella b Vishwa Fernando 1 4 0 0 25.00
Nuwan Pradeep not out 10 4 1 1 250.00


Extras 5 (b 0 , lb 1 , nb 0, w 4, pen 0)
Total 231/10 (42.2 Overs, RR: 5.46)
Bowling O M R W Econ
Vishwa Fernando 6.2 0 40 2 6.45
Ishan Jayaratne 6 0 34 1 5.67
Danushka Gunathilake 8 1 34 2 4.25
Isuru Udana 5 0 21 2 4.20
Ashan Priyanjan 6 0 36 0 6.00
Jeevan Mendis 8 0 47 2 5.88
Lakshan Sandajan 3 0 18 0 6.00



தம்புள்ளை அணி 92 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க