ப்ளூம்பீல்ட் அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த திலான் துஷார

340

இலங்கை கிரிக்கெட் சபை, பிரிவு B கழகங்கள் இடையே ஒழுங்கு செய்த மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (17) இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

வெலிசர மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் இலங்கை கடற்படை அணி 8 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்தது.

உலகக் கிண்ண ஆட்ட நாயகர்களாக அதிகம் வலம்வந்த நட்சத்திர வீரர்கள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 1877ஆம் ஆண்டு ஆரம்பமாகியதுடன், ஒருநாள் போட்டிகள் 1971ஆம் ஆண்டு முதல்

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை கடற்படை அணியினர் 130 ஓட்டங்களுக்கு தமது முதல் இன்னிங்ஸினை நிறைவு செய்து கொண்டனர். கடற்படை அணியின் துடுப்பாட்டத்தில் W. மயந்த 43 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய காலி அணியின் பந்துவீச்சில் ரஜீவ வீரசிங்க, 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

எனினும் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய காலி அணி, வெறும் 57 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. கடற்படை அணியின் பந்துவீச்சு சார்பாக சவிந்து பீரிஸ் 4 விக்கெட்டுக்களையும், டிலங்க அனுவார்ட் 3 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.

பின்னர் 73 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கடற்படை அணி, இம்முறை 118 ஓட்டங்களை பெற்றது. அதேநேரம் இந்த இன்னிங்ஸிலும் காலி அணியின் பந்துவீச்சில் அசத்திய ரஜீவ வீரசிங்க 6 விக்கெட்டுக்களை தனதாக்கியிருந்தார்.

கடற்படை அணியின் இரண்டாம் இன்னிங்ஸினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக, 192 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த காலி கிரிக்கெட் கழக அணி 183 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது.

காலி அணியின் வெற்றிக்கு ஹஸ்னைன் பொஹாரி அரைச்சதம் தாண்டி 63 ஓட்டங்கள் பெற்று போராடிய போதிலும் அது வீணாகியிருந்தது.

மறுமுனையில், சவிந்து பீரிஸ் கடற்படை அணியின் வெற்றியினை 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி உறுதி செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 130 (34.1) – W. மயந்த 43, ரஜீவ வீரசிங்க 30/6, அகலங்க கனேகம 29/3

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 57 (20.2) – சவிந்து பீரிஸ் 21/4, டிலங்க அனுவார்ட் 7/3

கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 118 (39.2) – சுபுன் லீலரத்ன 27, ரஜீவ வீரசிங்க 38/6, சத்துர லக்‌ஷான் 18/2

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 183 (52.1) – நிசால் ரன்திக்க 35, ஹஸ்னைன் பொஹாரி 63, சவிந்து பீரிஸ் 53/5, டிலங்க அனுவார்ட் 64/3

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 8 ஓட்டங்களால் வெற்றி


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

கொழும்பில் முடிவுக்கு வந்த லங்கன் கிரிக்கெட் கழகம் மற்றும் புளூம்பீல்ட் அணிகளிடையிலான இப்போட்டி சமநிலை அடைந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய லங்கன் கிரிக்கெட் கழக அணிக்கு S. கங்கநமகே சதம் ஒன்றினை கடந்து 117 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இவரோடு லஹிரு டில்ஷான் 62 ஓட்டங்களையும், லக்ஷித மானசிங்க 59 ஓட்டங்களையும் குவித்தனர். இதனால், லங்கன் கிரிக்கெட் கழக அணி தமது முதல் இன்னிங்ஸில் 410 ஓட்டங்களை பெற்றது.

இதேநேரம் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சு சார்பில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான திலான் துஷார 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

ஸ்கொட்லாந்துடனான இறுதி வாய்ப்பை பயன்படுத்துமா இலங்கை?

உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம், கசுன் அபேரத்ன (70), திலான் துஷார (67) மற்றும் கசுன் ஏக்கநாயக்க (57) ஆகியோரின் அரைச்சத உதவிகளோடு தமது முதல் இன்னிங்ஸில் 315 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. லங்கன் கிரிக்கெட் கழக அணியின் பந்துவீச்சு சார்பில் சிப்ரான் முத்தலிப் 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மீண்டும் தமது இரண்டாம் இன்னிங்ஸினை 95 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு ஆரம்பம் செய்த, லங்கன் கிரிக்கெட் கழக அணி 248 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. லங்கன் கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பாக சஞ்சுல அபேவிக்ரம சதம் கடந்து 113 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து லங்கன் கிரிக்கெட் கழகத்தின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 344 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் தமது இரண்டாம் இன்னிங்ஸில் 116 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த நிலையில் இப்போட்டியின் ஆட்டநேரம் நிறைவுக்கு வந்து போட்டி சமநிலை அடைந்தது. ப்ளூம்பீல்ட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸிலும் திலான் துஷார அரைச்சதம் (54) பெற்றது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 410 (108.4) – S. கங்கனம்கே 117, லஹிரு டில்ஷான் 62, லக்ஷித மானசிங்க 59, திலான் துஷார 64/4, அசெல் சிகெரா 41/3,

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 315 (75.4) – கசுன் அபேரத்ன 70, திலான் துஷார 67, கசுன் ஏக்கநாயக்க 57, சிப்ரான் முத்தலிப் 57/4

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 248/6d (52.4) – சஞ்சுல அபேவிக்ரம 113, லக்ஷித மானசிங்க 49, சனோஜ் தர்ஷிக 27/3, சத்துரங்க திக்கும்பர 53/3

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 116/3 (16) – திலான் துஷார 54, அசன்த சிங்கபுலி 45, துஷிர மடநாயக்க 12/1

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க