விமானப்படை அணிக்கெதிராக இலகு வெற்றியினை சுவீகரித்த லங்கன் கிரிக்கெட் கழகம்

210

இலங்கை கிரிக்கெட் வாரியம் நடாத்தும், இந்தப் பருவகாலத்திற்கான B கழக மட்ட அணிகளுக்கு இடையிலான (மூன்று நாட்கள் கொண்ட) ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில்(23)  நான்கு போட்டிகள் நிறைவடைந்தன.

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

மக்கோன சர்ரேய் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் லங்கன் கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் விமானப்படை அணியினை வீழ்த்தியிருந்தது.

போட்டியின் இறுதி நாளில் பலோவ் ஒன் முறையில் ஆடியிருந்த விமானப்படை அணி தமது இரண்டாம் இன்னிங்சினை 320 ஓட்டங்களுடன் முடித்திருந்தது. இதில் உதயவன்ஷ பராக்ரம சதம் கடந்து 101 ஓட்டங்களினை விமானப்படைக்காக பெற்றிருந்தார்.

விமானப்படை அணியின் இரண்டாம் இன்னிங்சினை தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 164 ஓட்டங்களினை அடைவதற்கு பதிலுக்கு ஆடிய லங்கன் கிரிக்கெட் கழகம் மதுரங்க சொய்ஸாவின் அரைச்சதத்தோடு மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 349 (70) சானக்க ருவன்சிரி 120*,மதுரங்க சொய்ஸா 74, லக்ஷான் ரொட்ரிகோ 53, கீத் குமார 43, புத்திக்க சந்தருவன் 3/81, லக்ஷான் பெர்னாந்து 3/69

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்)192 (45.5) உதயவன்ஷ பராக்ரம 45, தினுக்க மாலன் 4/54, கீத் குமார 2/12

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o320 (75.1) உதயவன்ஷ பராக்ரம 101, கசுன் அபயரத்ன 64, லக்ஷான் பெர்னாந்து 52, நவீன் கவிகர 3/80, கீத் குமார 2/30

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்)166/3 (35.5) மதுரங்க சொய்ஸா 69*, மிலன் ரத்னாயக்க 1/15


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

மொரட்டுவ டி சொய்ஸா மைதானத்தில் நடந்த கடற்படை மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழக அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்சில் 160  ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட பொலிஸ் அணி, ஆட்டத்தின் இறுதி நாளில் தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்து 331 ஓட்டங்களினை முதல் இன்னிங்சுக்காக குவித்துக் கொண்டது. கடற்படை அணியின் பந்து வீச்சு சார்பாக சுதார தக்ஷின 6 விக்கெட்டுக்களை தனியொருவராக கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருர்தார்.

இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்சினை 56 ஓட்டங்கள் பின்தங்கி ஆரம்பித்த கடற்படை அணி, போட்டியின் ஆட்ட நேரம் நிறைவடைந்து போட்டி சமநிலை அடைந்த போது 159 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 274 (93.3) இஷான் அபயசேகர 76, புத்திக்க ஹஸரங்க 64, கல்யான ரத்னப்பிரிய 3/54, ஹசித்த நிர்மல் 3/90

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 331 (103.3) தினுஷ பெர்னாந்து 71, கிடோர் யாதவ் 52, சுதார தக்ஷின 6/92

கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 159/5 (41) ஹசித்த நிர்மல் 3/49


பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர சபை விளையாட்டுக் கழகம்

பண்டாரகம பொது மைதானத்தில் இடம்பெற்ற களுத்துறை நகர சபை மற்றும் மற்றும் பாணதுறை விளையாட்டுக்கழக அணிகளுக்கு இடையிலான இப்போட்டி சமநிலை அடைந்தது.  

போட்டியின் இறுதி நாளில் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 68 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த களுத்துறை நகர சபை கிரிக்கெட் கழகம் சமீர சந்தமலின் அபார சதத்துடன் (102) அனைத்து விக்கெட்டுக்களையும் 280 ஓட்டங்களோடு பறிகொடுத்து முதல் இன்னிங்சினை முடித்துக்கொண்டது.இதில் பாணதுறை விளையாட்டு கழகம் .சார்பாக தனுஷிக்க பண்டார 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து தமது இரண்டாம் இன்னிங்சை துவக்கிய பாணதுறை விளையாட்டுக் கழகம் தடுமாற்றமான ஆட்டத்தினை காண்பித்து 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது இறுதிநாள் ஆட்ட நேரம் முடிவடைய போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 380 (115.1) வினோத் பெரேரா 138, காசிப் நவீட் 68, மதீஷ பெரேரா 3/88, நிப்புன காரியவசம் 3/70

களுத்துறை நகர சபை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 280 (84) சமீர சந்தமல் 102, நிலுஷான் நோனிஸ் 57, தனுஷிக்க பண்டார 5/117

பாணதுறை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 88/5 (38)


நீர்கொழும்பு விளையாட்டுக் கழகம் எதிர் காலி விளையாட்டுக கழகம்

காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று முடிந்த இந்த ஆட்டம் சமநிலை அடைந்தது.

போட்டியின் இரண்டாம் நாளின் முடிவில் முதல் இன்னிங்சில் 135 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட காலி விளையாட்டுக் கழகம் போட்டியின் இறுதி நாளில் ஏனைய 5 விக்கெட்டுக்களையும் குறுகிய ஓட்டங்களுக்குள் இழந்து 171 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றது. இதற்கு பிரதான காரணமாக அமைந்த நீர்கொழும்பு அணியின் உமகே சத்துரங்க 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து போட்டியின் இரண்டாம் இன்னிங்சினை  தொடங்கிய நீர்கொழும்பு அணி ரவிந்திர கருணாரத்ன (101*) மற்றும் அகீல் இன்ஹாம் (57*) ஆகியோரின் அபார ஆட்டத்தோடு 59.2 ஓவர்களில் 234 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 216 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்சினை தொடங்கிய காலி அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 68 ஓட்டங்களோடு காணப்பட்ட நிலையில் போட்டியின் நேரம் முடிவடைய ஆட்டம் சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட்கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 159 (62.3) ஸ்ரீஹான் அனுருத்திக்க 38, அகீல் இன்ஹாம் 31, கோஹர் பாயிஸ் 6/66, கயான் சிறிசோம 4/26

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ் ) – 177 (85.4) அருண தர்மசேன 71*, டமித் ஹூனுகும்பர 51, உமேகா சத்துரங்க 6/56

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ் ) – 234/3d (59.2) ரவிந்திர கருணாரத்ன 101*, அகீல் இன்ஹாம் 57*, பிரசன்ன ஜயமன்ன 40, கோஹர் பாயிஸ் 2/54

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ் ) – 68/0 (16) ஹசந்த பெர்னாந்து 50*