சொஹான், பிரனீத்தின் சிறந்த பந்து வீச்சினால் விமானப்படை அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

41

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டு உள்ளூர் பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் B பிரிவு கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிகளின் 2ஆம் நாள் ஆட்டம்  இன்று நடைபெற்றது.

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

பாணந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமான இப்போட்டியில் விமானப்படை அணி இன்னிங்ஸ் மற்றும் 97 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மதீஷ பெரேராவின் சதத்தின் உதவியுடன் வலுவான ஆரம்பத்தைப் பெற்றுள்ள களுத்துறை அணி

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டு உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர்….

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற விமானப்படை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை எதிரணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய பாணந்துறை அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணி டுலாஷ் உதயங்கவின் 96 ஓட்டங்கள் மற்றும் ஹஷான் ஜேம்ஸின் 59 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 309 ஓட்டங்களைக் குவித்தது.

தொடர்ந்து தமது 2ஆவது இன்னிங்ஸினைத் தொடர்ந்த பாணந்துறை விளையாட்டுக் கழக அணி 36 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தொல்வியைத் தழுவியது. பந்து வீச்சில் இந்தப் போட்டியில் சொஹான் ராங்கிக மொத்தமாக 9 விக்கெட்டுக்களையும் ப்ரநீத் ரத்னாயக 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 176/10 (46.4) சுரேஷ் பீரிஸ் 30, வினோத் பெரேரா 29, முஹமட் ரமீஸ் 26, சொஹான் ரங்கிக 5/52, ப்ரநீத் ரத்னாயக 3/44

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 309/10 (86.1) துலாஷ் உதயங்க 96, ஹஷான் ஜேம்ஸ் 59, ரொஸ்கொ தட்டில் 48, தனுஷ்க பண்டார 3/80, சசிந்து பெரேரா 3/43.

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 36/10 (13.3) ப்ரநீத் ரத்னாயக 5/36, சொஹான் ராங்கிக 4/00

முடிவு – விமானப்படை அணி இன்னிங்ஸ் மற்றும் 97 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


களுத்துறை நகர் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற களுத்துறை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி ரத்னாயக ஆட்டமிழக்காது பெற்ற 133 மற்றும் மதீஷ பெரேரா பெற்ற 122 ஓட்டங்களின் உதவியுடன் அவ்வணி 379 ஓட்டங்களை அடைந்தது.

பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) ஜனவரி 31ஆம் திகதி ஆரம்பமாகும்…..

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழக அணி இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. சானக விஜேசிங்ஹ ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 379/10 (112.5) ரத்னாயக 133*, மதீஷ பெரேரா 122,. கயான் சிரிசோம 7/115, கிரிஷான் அபேசூரிய 2/70

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 195/6 (59.5) சானக விஜேசிங்ஹ 81*, லசித் பெர்னாண்டோ 55, மதீஷ பெரேரா 2/39, ரவீந்து திலகரத்ன 2/65

இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறும்.


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல் இளையோர் விளையாட்டுக் கழகம்

குருநாகல் வெலகெதர மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குருநாகல் இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பொலிஸ் அணிக்கு வழங்கியது. இதன்படி பொலிஸ் அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காக  துடுப்பெடுத்தாடிய குருநாகல் இளையோர் அணி 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிமேஷ் விமுக்தி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது 2ஆவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடும் பொலிஸ் அணி இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 3 விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்களைப் பெற்று 226 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 270/10 (94.1) தினுஷ பெர்னாண்டோ 61, தரிந்து தில்ஷான் 52, சாமித் துசாந்த 37, லக்மால் டி சில்வா 38, கேஷான் விஜேரத்ன 5/37, துஷித டி சொய்சா 2/49.

குருநாகல் இளையோர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 156/10 (52.2) தனுஷ தர்மசிறி 67, ருவந்த ஏகனாயக 25, நிமேஷ் விமுக்தி 5/60, தரிந்து சிறிவர்தன 3/32.

பொலிஸ் விளையட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 112/3 (28) ஹசித டி சில்வா 41*, தரிந்து டில்ஷான் 26, தினுஷ பெர்னாண்டோ 26*

இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறும்.

சச்சித் பத்திரணவின் அதிரடி சதத்தால் CCC வலுவான நிலையில்

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் பருவகாலத்திற்கான உள்ளூர் பிரீமியர் லீக்……


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

வெலிசறை கடற்படை விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நீர்கொழும்பு அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை கடற்படை அணிக்கு வழங்கியது.

இதன்படி களமிறங்கிய கடற்படை அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது. குசல் எடுசூரிய ஆட்டமிழக்காது 121 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் நீர்கொழும்பு கிரிக்கெட் கழக அணியினர் இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களைப் பெற்றனர். பிரசன்ன ஜயமான்ன 67 ஓட்டங்களையும் அகீல் இன்ஹாம் 62 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம்(முதல் இன்னிங்ஸ்)-  342/10 (111.4) குசல் எடுசூரிய 121*, புத்திக்க ஹசரங்க 80, சுபுன் லீலாரத்ன 27, உமேக சதுரங்க 4/145, செஹான் வீரசிங்க்ஹ 2/57, ரோஷேன் பெர்னாண்டோ 3/68.

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்(முதல் இன்னிங்ஸ்) – 213/2 (75) பிரசன்ன ஜயமான்ன 67*, அகீல் இன்ஹாம் 62*, லசித் க்ருசஸ்புள்ளே 52.

இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறும்.