வெற்றிப் பாதையில் SSC, NCC மற்றும் தமிழ் யூனியன் அணிகள்

419
Premier Tier A

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான ஆறு போட்டிகள் இன்று இரண்டாவது தினமாக இடம்பெற்றன. இன்றைய தினமும் மழையின் குறுக்கீட்டினால் குறைந்தளவு ஓவர்களே வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SSC கழகம் எதிர் பதுரேலிய விளையாட்டுக் கழகம்

நேற்றைய தினம் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையிலிருந்த SSC அணி, இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடி 347 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இளம் வீரர் சம்மு அஷான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மற்றுமொரு இளம் வீரரான சரித் அசலங்க 66 ஓட்டங்களையும், தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வரும் சச்சித்ர சேனநாயக்க 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் அசத்திய அலங்கார அசங்க 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய பதுரேலியா விளையாட்டுக் கழகம், ஜெப்ரி வெண்டர்சேவின் சுழலை எதிர்கொள்ளத் திணறிய நிலையில் 143 ஓட்டங்களுக்கே சுருண்டது. அபாரமாக பந்து வீசிய வெண்டர்சே 44 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். துடுப்பாட்டத்தில் தனித்துப் போராடிய பதுரேலியா அணியின் ஷிரான் ரத்நாயக்க 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அதன்படி 204 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட SSC கழகம் எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது, பதுரேலியா விளையாட்டுக் கழகம் விக்கெட் இழப்பேதுமின்றி 32 ஓட்டங்களை பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்சை அதிரடியாக ஆரம்பித்த ஷெஹான் பெர்னாண்டோ 12 பந்துகளில் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 347 (92.5)சம்மு அஷான் 95, சரித் அசலங்க 66, சச்சித்ர சேனநாயக்க 62, அலங்கார அசங்க 6/126

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 143 (38.5) – ஷிரான் ரத்நாயக்க 51, ஜெப்ரி வெண்டர்சே 6/44

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 32/0 (4)ஷெஹான் பெர்னாண்டோ 28*


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

முதல் தினத்தின் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றிருந்த தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 314 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மனோஜ் சரத்சந்திர (57) மற்றும் தரங்க பரணவிதான (60) ஆகியோர் அரைச்சதங்கள் குவித்ததுடன், கித்ருவன் விதானகே மற்றும் தினுக் விக்ரமநாயக ஆகியோர் தலா 49 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அரைச்சதங்களை தவறவிட்டனர். பந்து வீச்சில் அசத்திய ஷஷ்ரிக்க புஸ்ஸேகொல்ல (5/102) மற்றும் மலித் டி சில்வா (4/66) ஆகியோர் தமக்கிடையே 9 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து களமிறங்கிய புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக 115 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் நிசல் பிரான்சிஸ்கோ அதிகபட்சமாக 45 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் தமிழ் யூனியன் அணியின் ரமித் ரம்புக்வெல்ல 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 314 (87.3) – தரங்க பரணவிதான 60, மனோஜ் சரத்சந்திர 57, கித்ருவன் விதானகே 49, தினுக் விக்ரமநாயக 49*, சித்தர கிம்ஹான் 46,  ஷஷ்ரிக்க புஸ்ஸேகொல்ல 2/7

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 115 (37.2) – நிசல் பிரான்சிஸ்கோ 45, ரமித் ரம்புக்வெல்ல 4/38


NCC கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

நேற்றைய தினம் 7 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களை பெற்றிருந்த NCC கழகம், எஞ்சலோ பெரேராவின் அபாரமான ஆட்டத்தின் காரணமாக தமது முதல் இன்னிங்சில் 370 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

கீழ்வரிசை வீரர்கள் சிறந்த பங்களிப்பை வழங்க, எஞ்சலோ பெரேரா ஆட்டமிழக்காது 139 ஓட்டங்களை விளாசினார். நேற்றைய தினம் சந்துன் வீரக்கொடி 110 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் ஷாலிக கருணாநாயக்க மற்றும் ரொஷான் ஜயதிஸ்ஸ ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த காலி கிரிக்கெட் கழகம் இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 7 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்று இக்கட்டான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் தமித ஹுனுகும்புர அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் அசத்திய சதுரங்க டி சில்வா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 370 (54.2) – எஞ்சலோ பெரேரா 139*, சந்துன் வீரக்கொடி 110, தரிந்து கௌஷால் 43, ஷாலிக கருணாநாயக்க 4/74, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/117

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 162/7 (58) – தமித ஹுனுகும்புர 66, யஷோத லங்கா 43, சதுரங்க டி சில்வா 4/66


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

இப்போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை குவித்திருந்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இன்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தொடக்க வீரர் இரோஷ் சமரசூரிய 85 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்தன 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் பிரமோத் மதுவந்த மற்றும் சச்சித்ர பெரேரா ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த சோனகர் விளையாட்டுக் கழகம், இன்றைய தினத்திற்காக போட்டி நிறுத்தப்படும் போது 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றிருந்தது. பபசர வடுகே அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். செரசன்ஸ் அணியின் சதுர ரந்துனு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 292 (80) – இரோஷ் சமரசூரிய 85, மிலிந்த சிறிவர்தன 50, சச்சித்ர பெரேரா 3/59, பிரமோத் மதுவந்த 3/88

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 175/8 (54) – பபசர வடுகே 52, சதுர ரந்துனு 3/37


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான பலப்பரீட்சையில் முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 228 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையிலிருந்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இன்றும் தொடர்ந்து ஆடிs 360 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆட்டமிழக்காது 119 ஓட்டங்களை பெற்றிருந்த சதீர சமரவிக்ரம இன்றைய தினம் ஓட்டமெதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். மேலும் ஹஷான் துமிந்து 72 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

சிறப்பாக பந்துவீசிய தினுக ஹெட்டியாரச்சி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய திலகரத்ன சம்பத் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய BRC கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்றிருந்தது. லசித் லக்ஷான் 48 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 360 (116.3) – சதீர சமரவிக்ரம 119, ஹஷான் துமிந்து 72, தினுக ஹெட்டியாரச்சி 6/115, திலகரத்ன சம்பத் 3/89

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 141/5 (38.4) – லசித் லக்ஷான் 48  


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

முதல் நாள் ஆட்டத்தில் வெறும் 38 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து 124 பெற்றிருந்த ராகம கிரிக்கெட் கழகம் இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது.

இன்றும் 36 ஓவர்களே வீசப்பட்டதால் அவ்வணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 பெற்றிருந்த நிலையில் இன்றைய தினத்தை நிறைவு செய்தது. நேற்றைய தினம் தொடக்க வீரர்களான உதார ஜயசுந்தர (50) மற்றும் லஹிரு மிலந்த (64) ஆகியோர் அரைச்சதங்கள் கடந்த நிலையில் 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். தற்போது லஹிரு திரிமான்ன (38*) மற்றும் ரொஷேன் சில்வா (30*) ஆகியோர் களத்திலுள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 209/3 (74) – லஹிரு மிலந்த 64, உதார ஜயசுந்தர 50, லஹிரு கமகே 2/54

நாளை இந்த போட்டிகளின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.