கடைசி வார பிரீமியர் லீக் போட்டிகளில் துறைமுக அதிகாரசபை, NCC வெற்றி

61
Premier League

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் கடைசி வாரத்தின் நான்கு சுப்பர் 8 போட்டிகளினதும் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (17) நடைபெற்றது.கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான கடைசியான பிரிமியர் லீக் சுப்பர் 8 போட்டியில் NCC அணி இன்னிங்ஸ் மற்றும் 143 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.  

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் மூன்றாவது நாளில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 491 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த கோல்ட்ஸ் அணி 348 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. சஹன் ஆரச்சிகே முதல்தர போட்டிகளில் தனது கன்னி சதத்தை பெற்று அந்த அணியின் தோல்வியை சற்று பிற்படுத்தினார்.

நான்கு நாள் போட்டியை இரண்டு நாட்களில் வென்ற BRC

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ராகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான நான்கு நாள் போட்டியை இரண்டு நாட்களில் முடித்துக் கொண்ட BRC அணி 8

பந்துவீச்சில் சச்சிந்த பீரிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி NCC அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 127 (35.1) – நிசல தாரக்க 25, கவீஷ்க அஞ்சுல 20, லசித் அம்புல்தெனிய 5/33, லஹிரு குமார 4/26

NCC (முதல் இன்னிங்ஸ்) – 618/9d (121.4) – லஹிரு உதார 157, பானுக்க ராஜபக்ஷ 134, அஞ்செலோ பெரேரா 129*, மஹேல உடவத்த 106, சாமிக்க கருணாரத்ன 54, பிரபாத் ஜயசூரிய 4/224, நிசல தாரக்க 3/100, ஹஷான் துமிந்து 2/39

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 348 (111.4) – சஹன் ஆரச்சிகே 116, பிரியமால் பெரேரா 70, ஹஷான் துமிந்து 37, லஹிரு குமார 2/83, சச்சிந்த பீரிஸ் 5/65, தரிந்து கௌஷால் 2/46

முடிவு – NCC அணி இன்னிங்ஸ் மற்றும் 143 ஓட்டங்களால் வெற்றி


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான கடைசி வார பிரீமியர் லீக் போட்டியில் இலங்கை துறைமுக அதிகாரசபை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி மூன்றாவது நாளுடனேயே முடிவுற்றது. இதில் நிர்ணயிக்கப்பட்ட 210 ஓட்ட வெற்றி இலக்கை இலங்கை துறைமுக அதிகாரசபை அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து எட்டியது. முதல் இன்னிங்சில் சதம் பெற்ற இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் கொம்ப்டன் இரண்டாவது இன்னிங்சில் 95 ஓட்டங்களைப் பெற்று சதத்தை தவறவிட்டார்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 311 (111) – அஷேன் பண்டார 87*, மின்ஹாஜ் ஜலீல் 56, அண்டி சொலமன்ஸ் 48, ஹர்ஷ குரே 41, கமிந்து கனிஷ்க 35, தனுக்க தபரே 20, சரித் ஜயம்பதி 3/43, சானக்க கோமசரு 3/96, மதுக லியனபதிரணகே 2/50

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 220 (58.2) – நிக் கொம்ப்டன் 103, கிஹான் ரூபசிங்க 38, இஷான் ரங்கன 34, மொஹமட் டில்ஷான் 4/51, ரனித் லியனாரச்சி 4/53

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 118 (39.2) – ரனித்த லியனாரச்சி 34, ஹர்ஷ குரே 29, சரித் ஜயம்பதி 5/33, சானக்க கோமசாரு 3/34

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 213/4 (55.3) – நிக் கொம்ப்டன் 95, இஷான் ரங்கன் 41, யொஹான் டி சில்வா 36, மொஹமட் டில்ஷாட் 1/48

முடிவு – இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC

பீரிமியர் லீக் A நிலை தொடரின் சம்பியன் அணியை தீர்மானிக்கும் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் நடப்பு சம்பியன் SSC அணிக்கு 540 என்ற இமாலய ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சகீபைப் போல மெதிவ்ஸ் இல்லாததும் எமக்கு இழப்புதான் – தனுஷ்க குணதிலக

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நிறைவடைந்திருக்கும், T-20 … இலங்கை அணிக்கு.

ஏற்கனவே சுப்பர் 8 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சிலாபம் மேரியன்ஸ் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற நிலையில் அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வெல்ல பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு ஷெஹான் ஜயசூரிய மீண்டும் ஒரு முறை தனது சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி 88 ஓட்டங்களை பெற்றார். முதல் இன்னிங்ஸில் சதம் பெற்ற அவர் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன் மூலம் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது சிலாபம் மேரியன்ஸ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 399 ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு மிகவும் கடினமான வெற்றி இலக்கொன்றை (540 ஓட்டங்கள்) நிர்ணயித்துள்ளது. போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 372 (103.5) – ஷெஹான் ஜயசூரிய 146, அஷேன் சில்வா 105, சச்சித்ர சேரசிங்க 30, ரசித் உபமால் 24, ருக்ஷான் ஷெஹான் 20*, அக்தாப் காதர் 4/79, சச்சித்ர சேனநாயக்க 4/103

SSC (முதல் இன்னிங்ஸ்) – 232 (66.2) – ஷம்மு அஷான் 72, சாமர கபுகெதர 63, கவிந்து குலசேகர 47, ஷெஹான் ஜயசூரிய 4/48, திக்ஷில டி சில்வா 3/27, மலிந்த புஷ்பகுமார 2/80

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 399 (105.3) – ஷெஹான் ஜயசூரிய 88, ருக்ஷான் ஷெஹான் 78, ரசித் உபமால் 88*, சச்சித்ர சேரசிங்க 37, ஓஷத பெர்னாண்டோ 31, தக்ஷில டி சில்வா 31, சச்சித்ர சேனநாயக்க 4/134, ஆகாஷ் சேனாரத்ன 4/72