இலங்கை மண்ணில் பிரகாசிக்கும் பாகிஸ்தானின் காஷிப் நவீத்

165

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான ப்ரீமியர் லீக் B நிலை தொடரின் 4 போட்டிகள் இன்று நிறைவுற்றன.

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக இராணுவப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விமானப்படை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 234 (59.1) – ராஜு கயஷான் 58, லக்ஷான் பெர்னாண்டோ 51, சொஹான் ரஞ்சிக 36, ரோஸ்கொ தட்டில் 33, நிலேஷ் விமுக்தி 5/84, சமொத் பியுமால் 2/54

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 302 (98.5) – சமித் துஷாந்த 121, நிலேஷ் விமுக்தி 61, தரிந்து தில்ஷான் 38, கமல் புஷ்பகுமார 28, சொஹான் ரஞ்சிக 5/46, ரோஸ்கோ தட்டில் 2/14

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 261/8d (65.3) – துலாஷ் உதயங்க 70, டி வீரரத்ன 61, ராஜு கயஷான் 45, ரோஸ்கோ தட்டில் 33,  நிமேஷ் விமுக்தி 4/89

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 127/6 (40) – சமித் துஷாந்த 46*, புத்திக்க சந்தருவன் 2/28, சொஹான் ரஞ்சிக 2/57

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

உமேக சதுரங்கவின் சுழலில் சிக்கிய களுத்துறை

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர விளையாட்டுக் கழகம்

கதிரான கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் நீர்கொழும்பு அணி வெற்றி பெற்றதுடன் முதலில் துடுப்பெடுத்தாடியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 221 (92.2) – பிரவீன் பெர்னாண்டோ 87, பிரசன்ஷன ஜயமான்ன 54, ரவீந்திர கருணாரத்ன 24, மதீஷ பெரேரா 5/47, எரங்க ரத்னாயக 2/12

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 193 (65.2) – சுரேஷ் நிரோஷன் 89, கீத் பெரேரா 30, நிலூஷன் நோனிஸ் 22, உமேக சதுரங்க 7/79, செஹான் வீரசிங்ஹ 3/57

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 206/8d (71) – செஹான் வீரசிங்ஹ 53*, பிரசன்ஷன ஜயமான்ன 37, பிரவீன் பெர்னாண்டோ 32, மதீஷ பெரேரா 4/95

களுத்துறை நகர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 234 (44) – நிபுன கமகே 52, கீத் பெரேரா 87, மதீஷ பெரேரா 30,  உமேக சதுரங்க 5/112

முடிவு – போட்டி சமநிலையில் (TIED) முடிவுற்றது.


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கடற்படை விளையாட்டுக் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாணந்துறை அணிக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 375 (92.1) – காஷிப் நவீத் 192, மாதவ சுகுரங்க 73, ஷஸ்ரிக புசேகொள்ள 31, சதுரங்க திக்குபுற 3/45, இஷான் அபேசெகர 3/96, சுதார தக்சின 3/108

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 444 (146.3) – சுபுன் லீலரத்ன 141, துஷான் ஹேமந்த 193, சதுரங்க திக்குபுற 24, முஹமட் ரமீஸ் 3/52, லசித் லக்ஷான் 3/70      

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) –  153/3 (33) – சகுரங்க பொன்சேகா 57, காஷிப் நவீத் 50*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இலங்கை அணியின் பின்னடைவுக்கு அசேல, மெதிவ்சின் உபாதையும் காரணம்

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகலை இளையோர் கிரிக்கெட் கழகம்

பனாகொடை இராணுவப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லங்கன் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 248 (83.1) – சானக ருவனசிரி 81, சஷேன் பெர்னாண்டோ 55, தினுஷ்க மாலன் 32, ரஜீவ் வீரசிங்ஹ 32, கேஷான் விஜேரத்ன 2/28, சிவகுமார் டிரோன் 2/44, ருவந்த ஏகநயக 2/51, துசித டி சொய்சா 2/62

குருநாகலை இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 297 (123.2) – தனுஷ்க தர்மசிறி 52, மலித் குரே 40, கேஷான் விஜேரத்ன 37, ருவந்த ஏகநயக 51, நவின் கவிகார 3/67, ரஜீவ் வீரசிங்க்ஹ 3/80

லங்கன் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 224/8 (61) – ரஜீவ வீரசிங்ஹ 54, நவீன் கவிகார 36, தினுஷ்க மாலன் 32, துஷித டி சொய்சா 2/55

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.