தொடர்ச்சியாக இரண்டாவது வாரமும் பந்துவீச்சில் அசத்தும் மொஹமட் ஷிராஷ்

903

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்பாட்டில் பிரிவு A கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான 6 போட்டிகளின், இரண்டாவது நாள் ஆட்டம் இன்றைய தினம் நிறைவுக்கு வந்திருந்தது.

இன்றைய போட்டிகளை பொருத்தவரை கொஷால் சில்வா, கவிந்து குலசேகர, அஷான் பிரியன்ஜன், வனிது ஹசரங்க, துஷான் விமுக்தி, லசித் குரூஸ்புல்லே, திக்ஷில டி சில்வா மற்றும்  சீகுகே பிரசன்ன ஆகியோர் துடுப்பாட்டத்தில் அசத்தியதுடன், மொஹமட் ஷிராஷ், சச்சித்ர பீரிஸ் மற்றும் நிமேஷ் விமுக்தி ஆகியோர் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்திருந்தனர்.

சகல துறையிலும் பிரகாசித்த செஹான் ஜயசூரிய; அஞ்செலோ பெரேராவுக்கு சதம்

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில்…

இதில் மொஹமட் சிராஷ் கடந்த வாரம் நடைபெற்ற பதுரெலிய கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான முதல் போட்டியிலும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செரசன்ஸ் விளையாட்டு கழகம் எதிர் SSC

செரசன்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் SSC அணி கௌஷால் சில்வா மற்றும் கவிந்து குலசேகர ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் ஊடாக இன்றைய ஆட்டநேர நிறைவில் 302 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டி சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 293 (88.1) – கமிந்து கனிஷ்க 95, சாலிய சமன் 81, தரிந்து ரத்நாயக்க 57/3, கசுன் மதுசங்க 53/2, சச்சித்ர சேனாநாயக்க 48/2

SSC – 302/5 (90) – கௌஷால் சில்வா 127, கவிந்து குலசேகர 76*, சாமிக எதிரிசிங்க 77/3


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் தலைவர் தலைவர் அஷான் பிரியன்ஜன் விளாசிய 161 ஓட்டங்கள் என்ற அபார ஓட்ட எண்ணிக்கையின் உதவியுடன் கொழும்பு கிரிக்கெட் கழக அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 367 ஓட்டங்களை குவித்துள்ளது.

போட்டி சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 225 (87.3) – விசாட் ரந்திக 68, நிசால தாரக 26, மலிந்த புஷ்பகுமார 86/6, அஷான் பிரியன்ஜன் 25/2

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 367 (87) – அஷான் பிரியன்ஜன் 161, வனிது ஹசரங்க 56, கவிஷ்க அஞ்சுல 28/3

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 17/2 (6.1)


இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கட் கழகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கட் கழகத்துக்கு எதிராக இந்த பருவகாலத்தின் முதல் போட்டியில் விளையாடிய இலங்கை இராணுவப்படை அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 462 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியதுடன், இலங்கை துறைமுக அதிகார சபை அணி 120 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

த்ரில்லர் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக்…

போட்டி சுருக்கம்

இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் – 462/9d (127.2) – துஷான் விமுக்தி 178, சீகுகே பிரசன்ன 89, லக்ஷான் எதிரிசிங்க 81, சமிந்த பண்டார 112/4, சானக கோமசாரு 132/3

இலங்கை துறைமுக அதிகாரசபை – 120/8 (47.2) – ப்ரிமோஷ் பெரேரா 28, துஷான் விமுக்தி 12/3, ஜனித் சில்வா 27/3


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்க MCG  மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நிமேஷ் விமுக்தியின் அபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் றாகம கிரிக்கெட் கழக அணி 246 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளதுடன்,  இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள சிலாபம் மேரியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டி சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்  – 281 (60.2) – ஓசத பெர்னாண்டோ 100, ஹர்ஷ குரே 95, அமில அபோன்சோ 86/5, ஷெஹான் நாணயகார 45/4

றாகம கிரிக்கெட் கழகம் – 246 (79.1) – சத்துர பீரிஸ் 42, அக்ஷு பெர்னாண்டோ 40,  நிமேஷ் விமுக்தி 76/6

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்  (இரண்டாவது இன்னிங்ஸ்) – 159/4 (37) – திக்ஷில டி சில்வா 85, அமில அபோன்சோ 68/4

Photos: Tamil Union C & AC v NCC | Major League Tier A Tournament 2018/19

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் NCC

NCC அணியின் 296 என்ற முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் அணி, வெறும் 184 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளதுடன், இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள NCC அணி விக்கெட்டிழப்பின்றி 84 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டி சுருக்கம்

NCC – 296 (83.2) – அஞ்செலோ பெரேரா 124, உபுல் தரங்க 37, சச்சித்ர சேரசிங்க 64/3

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 184 (68.5) – லஹிரு மிலந்த 35, சச்சிந்த பீரிஸ் 74/5

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 84/0 (23) – லஹிரு உதார 53*, மஹேல உடவத்த 28*

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 56

ஐ.சி.சியின் செவிப்புலனற்றோருக்கான…

BRC எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

இலங்கையின் முதற்தர கழகங்களுக்கான மேஜர் ப்ரீமியர் லீக் தொடரில் முதன்முறையாக விளையாடி வரும் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், தங்களது முதல் இன்னிங்ஸில் 258 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளதுடன், அபாரமாக பந்துவீசிய மொஹமட் ஷிராஷ் 86 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்

போட்டி சுருக்கம்

BRC – 221 (72.4) – ஹஷேன் ராமநாயக்க 66, தேஷான் டயஸ் 42, ஷெஹான் ஜெயசூரிய 56/4, உபுல் இந்திரசிரி 49/3

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 258 (86.4) – லசித் குரூஸ்புல்லே, செஹான் ஜயசூரிய 47*, மொஹமட் ஷிராஷ் 86/6

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 63/0 (16) – தேஷான் டயஸ் 32*, லசித் லக்ஷான் 31*

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<