டி20 போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மலிந்த

150

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் முதல் தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் டி20 லீக் தொடரின் மேலும் ஆறு போட்டிகள் இன்று (16) மாலை நடைபெற்றன.

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

பனாகொட மைதானத்தில் நடைபெற்றிருந்த இப்போட்டியில், 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியொன்றை கொழும்பு கிரிக்கெட் கழகம் சுவீகரித்துக் கொண்டது.

>>மேஜர் T20 லீக்கில் பிரகாசித்த சந்திமால், அகில மற்றும் சீகுகே<<

பந்துவீச்சில் கொழும்பு அணியின் மலிந்த புஷ்பகுமார 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதன்படி, டி20 போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்ட மலிந்த புஷ்பகுமார, முதல் தடவையாக ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 60 (14.2) – தரிந்து வீரசிங்க 15, சுபுன் மதுஷங்க 15, மலிந்த புஷ்பகுமார 5/13

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 61/1 (5) – டில்ஷான் முனவீர 31*, அஷhன் பிரியன்ஜன் 21*

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுக்களால் வெற்றி

BRC கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்த BRC கழகம் 6 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 65 (16.5) – டி. சூரவீர 15, பானுக்க ராஜபக்ஷ 3/18, டி.என் சம்பத் 2/09

BRC கழகம் – 68/4 (8.3) – லசித் லக்‌ஷான் 26, சுமேத திஸாநாயக்க 2/08

முடிவு – BRC கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>>பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் வரலாற்று சாதனை<<

களுத்துறை நகர கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இளம் வீரர் ஹர்ஷ குரேயின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் சிலாபம் மேரியன்ஸ் அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Photos: Chilaw Marians CC vs Kalutara TC | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 177/6 (20) – ஹர்ஷ குரே 51*, யசோத லங்கா 44, லக்‌ஷான் ஜயசிங்க 2/36, மதீஷ பெரேரா 2/15

களுத்துறை நகர கழகம் – 113/9 (20) – மதீஷ பெரேரா 32, வி. அமுகொட 31, கீத் பெரேரா 25*, நிம்சர அத்தரகல்ல 3/21, புலின தரங்க 3/26

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கழகம் 64 ஓட்டங்களால் வெற்றி

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் SSC

முதலாவது போட்டியில் சுப்பர் ஓவரினால் தோல்வியைத் தழுவிய SSC கழகத்துக்கு இரண்டாவது போட்டியிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

Photos: Moors SC vs SSC – Major T20 Tournament 2018/19

இப்போட்டியில் முதலில் துடுப்பாடி 143 ஓட்டங்களைப் பெற்ற SSC கழகத்தை டக்வத் லூவிஸ் முறைப்படி 8 ஓட்டங்களினால் சோனகர் கழகம் வீழ்த்தியது.

போட்டியின் சுருக்கம்

SSC – 143/9 (20) – சந்துன் வீரக்கொடி 45, தரிந்து ரத்னாயக்க 24, ஜெப்ரி வெண்டர்சே 22, அதீஷ திலன்சன 3/22, நிமந்த

சோனகர் விளையாட்டுக் கழகம் – 124/4 (17) – இரோஷ் சமரசூரிய 47*, சாமர சில்வா 34, சரித் குமாரசிங்க 25, ஜெப்ரி வெண்டர்சே 2/47

முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் டக்வத் லூவிஸ் முறைப்படி 8 ஓட்டங்களால் வெற்றி

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

இலங்கை துறைமுக அதிககார சபை அணிக்கு எதிரான போட்டியில், சுபேஷல ஜயதிலக்க பெற்றுக்கொண்ட அரைச்சதத்தின் உதவியுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் றாகம அணி த்ரில் வெற்றிபெற்றது.

>>முதல் இன்னிங்ஸ் வெற்றியினை சுவீகரித்த மடவளை மதீனா அணி<<

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 163/8 (20) – அதீஷ நாணயக்கார 65*, யொஹான் டி சில்வா 33, ப்ரிமோஷ் பெரேரா 28, ஜனித் லியனகே 2/12, அமில் அபோன்சோ 2/18, இஷான் ஜயரத்ன 2/37

றாகம கிரிக்கெட் கழகம் – 164/8 (20) – சுபேஷல ஜயதிலக்க 68, ரொஷேன் சில்வா 31, ஹஷான் விமர்ஷன 3/28

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

அதிக ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த இப்போட்டியில், சகலதுறையிலும் பிரகாசித்திருந்த தமிழ் யூனியன் கழகம், 7 ஓட்டங்களால் லங்கன் கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தியது.

Photos: Tamil Union C & AC vs Lankan CC | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 178/8 (20) – கித்துருவன் விதானகே 58, தினுக் விக்ரமாநாயக்க 38, கீத் குமார 2/30, சானக்க தேவிந்த 2/32, சந்துல வீரரத்ன 2/33

லங்கன் கிரிக்கெட் கழகம் – 171/7 (20) – எஸ். கங்கானங்கே 55*, சானக்க ருவன்சிறி 31, சன்ஜன டி சில்வா 22, ஜீவன் மெண்டிஸ் 2/31

முடிவு – தமிழ் யூனியன் கழகம் 7 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<