சரித் அசலங்கவின் சதத்தால் SSC வலுவான நிலையில்

196

சரித் அசலங்கவின் அபார சதத்தின் உதவியோடு கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜர் எமர்ஜின் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் SSC அணி முதல் இன்னிங்ஸில் வலுவான ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில் நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட தொடரின் இறுதிப் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (25) ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற SSC அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதன்படி சரித் அசலங்க தனது அணிக்கு துடுப்பாட்டத்தில் வலுச்சேர்த்து 115 ஓட்டங்களை குவித்தார். அதேபோன்று சந்துன் வீரக்கொடி (84) மற்றும் கவிந்து குலசேகர (67) அரைச்சதம் பெற்றனர். கோல்ட்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் மஹேஷ் தீக்ஷன 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

நான்காவது தடவையாக மகளிர் T20I உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம்

இதன்படி SSC அணி 385 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து கடைசி நேரத்தில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

நாளை போட்டியின் இரண்டாவது மற்றும் கடைசி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 385/8d (84.3) – சரித் அசலங்க 115, சந்துன் வீரக்கொடி 84, கவிந்து குலசேகர 67, கிரிஷான் சஞ்ஜுல 26*, மஹேஷ் தீக்ஷன 3/76, கவிஷ்க அஞ்சுல 2/60, சலன டி சில்வா 2/94

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 12/1 (2.3)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<