இராணுவ கழகத்தை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற சந்திமால்

100

இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) நடத்தப்படும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் தொடரின் நான்கு காலிறுதிப் போட்டிகள் சனிக்கிழமை (28) நடைபெற்றன. இதில் இராணுவ விளையாட்டுக் கழகம், NCC SSC மற்றும் சிலாபம் மேரியன்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டன.  

NCC எதிர் செரசன்ஸ்

கடைசி பந்துவரை பரபரப்பு நீடித்த போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக NCC அணி மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

நான்கு ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துடன் இலங்கை அணி அதிக போட்டிகள் கொண்ட…

NCC அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க 78 ஓட்டங்களை பெற்றதோடு மத்திய வரிசையில் சத்துரங்க டி சில்வா 40 பந்துகளில் 51 ஓட்டங்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது. 

NCC – 244/8 (50) – பெதும் நிஸ்ஸ்ங்க 78, சத்துரங்க டி சில்வா 51, மஹேல உடவத்த 41, சாலிய சமன் 4/41, ஹர்ஷ ராஜபக்ஷ 3/51 

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 241/7 (50) – சித்தாரா கிம்ஹான் 68, பிரமோத் மதுவந்த 62, சாலிய சமன் 24, சச்சிந்து கொலம்பகே 2/21, சி. குணசேக்கர 2/41

முடிவு – NCC அணி 3 ஓட்டங்களால் வெற்றி

Photos: NCC Vs Saracens SC | QF 2 | SLC Invitation Limited Over Tournament 2019/20

விமானப்படை விளையாட்டுக கழகம் எதிர் இராணுவ கிரிக்கெட் கழகம்

இரு படைகளின் போட்டியாக மாறிய ஆட்டத்தில் விமானப் படை அணியை 206 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய இராணுவ கழகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

கட்டுநாயக்கவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட விமானப்படை அணி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மத்திய வரிசையில் சுமிந்த லக்ஷான் மாத்திரமே அரைச்சதம் ஒன்றை பெற்றார். 

Photos: SLC Invitation Limited Over Tournament 2019/20 – QF 4 – Air Force SC Vs Army SC

வேகப்பந்து வீச்சாளர் ஹேஷான் ஹெட்டியாரச்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராணுவ கிரிக்கெட் கழகம் நெருக்கடி இன்றி 44.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. மத்திய வரிசையில் அனுபவ வீரர் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 69 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றார். 

டி20 போட்டிகளில் பந்துவீசத் தயாராகும் அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் காலத்துக்கு காலம் உருவாகின்ற…

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 206/8 (50) – சுமிந்த லக்ஷான் 63, மாதவ நிமேஷ் 47, உதயவன்ச பராக்ரம 26, ஹோஷான் ஹெட்டியாரச்சி 3/47, லஹிரு விஜேதுங்க 2/20

இராணுவ கிரிக்கெட் கழகம் – 207/5 (44.3) – தினேஷ் சந்திமால் 67*, லக்ஷான் எதிரிசிங்க 48, அசேல குணரத்ன 36, சுமின்த லக்ஷான் 2/42

முடிவு – இராணுவ கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி

சிலாபம் மேரியன்ஸ் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

இந்தியாவைச் சேர்ந்த சுமித் காதிகோகர் தனது கன்னி A தர போட்டியில் பெற்ற அபார சதத்தின் மூலம் பாணந்துறை விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் 130 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது. 

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டவீரராக வந்த காதிகோகர் 108 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றார். கமிந்து மெண்டிஸ் (63) மற்றும் அணித்தலைவர் ஷெஹான் ஜயசூரிய (88) ஆகியோரும் அரைச்சதம் பெற்றனர்.  

Photos: Panadura SC Vs Chilaw MCC | SLC Invitation Limited Over Tournament 2019/20 – QF-3

இதன் மூலம் சிலாபம் மேரியன்ஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்களை பெற்றது. 

பந்துவீச்சில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்திற்காக உமேஷ் கருணாரத்ன 6 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாணந்துறை விளையாட்டுக் கழகம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களுக்கு சுருண்டது. புலின தரங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பந்துவீச்சிலும் சோபித்த கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். 

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 315/9 (50) – சுமித் காதிகோகர் 100, ஷெஹான் ஜயசூரிய 88, கமிந்து மெண்டிஸ் 63, உமேஷ் கருணாரத்ன 6/67

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 185 (41.3) – ஹர்ஷ குரே 41, விஷ்வ சத்துரங்க 37, புலின தரங்க 4/16, கமிந்து மெண்டிஸ் 3/40, ஷெஹான் ஜயசூரிய 2/36 

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் 130 ஓட்டங்களால் வெற்றி

SSC எதிர் தமிழ் யூனியன்

பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் இரண்டிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய SSC அணி தமிழ் யூனியன் அணிக்கு எதிரான போட்டியில் 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

புதிய சுழல் பந்துவீச்சாளரை அணியில் இணைக்கும் அவுஸ்திரேலியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய…

கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்ப வரிசை வீரர்கள் சோபிக்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த SSC அணி 299 ஓட்டங்களை பெற்றது. எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் அணி 99 ஓட்டங்களுக்கே சுருண்டது. 

Photos: SSC Vs Tamil Union C & AC | QF-1 | SLC Invitation Limited Over Tournament 2019/20

SSC – 299/6 (50) – திமுத் கருணாரத்ன 70, சந்துன் வீரக்கொடி 62, சரித் அசலங்க 56, தம்மிக்க பிரசாத் 46*, சதிஷ் பத்திரணகே 2/29, ரமித் ரம்புக்வெல்ல 2/44

தமிழ் யூனியன் – 99 (24) – பிரசன்சன ஜயமான்ன 24, சச்சித்ர சேனநாயக்க 4/15, ஜெப்ரி வென்டர்சே 3/03, ஹிமேஷ் ராமநாயக்க 2/30

முடிவு – SSC கழகம் 200 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<