அஷேன் பண்டார கன்னி சதம்; இராணுவப்படைக்காக ஜொலித்த சந்திமால்

68

இலங்கை கிரிக்கெட் சபை, உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20 தொடரின் மூன்றாம் நாளில் 12 போட்டிகள் நிறைவடைந்திருந்தன. 

இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளில் இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமையினை வெளிப்படுத்தியிருந்தனர். இந்தப் பட்டியலில் முதல் இடம் செரசன்ஸ் அணியின் வலதுகை துடுப்பாட்ட வீரரான அஷேன் பண்டாரவுக்கு கிடைத்திருந்தது. அஷேன் பண்டார கட்டுநாயக்கவில் இடம்பெற்ற தமிழ் யூனியன் அணிக்கு எதிரான போட்டியில் T20 போட்டிகளில் தான் பெற்ற கன்னி சதத்தைப் பதிவு செய்தார். மொத்தமாக, 101 ஓட்டங்கள் பெற்ற அஷேன் பண்டார தமது தரப்பு தமிழ் யூனியன் வீரர்களுக்கு எதிராக 5 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெறவும் உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

செரசன்ஸ் அணிக்காக சகலதுறைகளிலும் அசத்திய மிலிந்த சிறிவர்தன

இலங்கை கிரிக்கெட் சபை உள்ளூர் கிரிக்கெட் அணிகள் இடையில்……

இதேநேரம், அஷேன் பண்டாரவின் சக அணி வீரரான மிலிந்த சிறிவர்தன இன்று இடம்பெற்ற போட்டியில் 54 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் அழைப்பு T20 தொடரில் அடுத்தடுத்து அரைச்சதங்கள் பதிவு செய்து தொடர்ச்சியாக ஜொலித்து வருகின்றார்.

மிலிந்த சிறிவர்தன தவிர இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமாலும் அரைச்சதம் (51) –  பெற்று இலங்கை இராணுவப்படை, விமானப்படை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியினை பதிவு செய்ய பங்களிப்புச் செய்திருந்தார். 

இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடியிருக்கும் மஹேல உடவத்தவும் தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. NCC அணிக்காக ஆடிய உடவத்த 69 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். 

துடுப்பாட்ட வீரர்கள் ஒருபுறமிருக்க சிலாபம் மேரியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான அசித்த பெர்னாந்து பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு வெறும் 8 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்திருந்தார். இதேவேளை, விமானப்படை அணியின் லசந்த ருக்மாலும் 5 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

மூன்றாம் நாள் போட்டிகளின் சுருக்கம்

குழு A

யுனிச்செலா விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

இடம் – பி.சரவணமுத்து மைதானம், கொழும்பு

யுனிச்செலா விளையாட்டுக் கழகம் – 63 (19.3) –  – பிரபாத் ஜயசூரிய 2/07, நிபுன் ரன்சிக்க 2/08, நிசல தாரக்க 2/18

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 64/5 (19) –  – சங்கீத் கூரே  21, தனுஷ்க ரணசிங்க 2/11

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட்  கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி 


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

இடம் – BRC மைதானம், கொழும்பு

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 158 (20) –  – துஷான் ஹேமன்த 33, ரமேஷ் மெண்டிஸ் 4/17, அனுக் பெர்னாந்து 2/18

சோனகர் கிரிக்கெட் கழகம் – 112 (18.1) – சரித்த குமாரசிங்க 53, புத்திக்க சஞ்சீவ 3/27, ஷெஹான் மதுஷங்க 2/10, மலித் டி சில்வா 2/17

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 46 ஓட்டங்களால் வெற்றி

Photos: Moors SC Vs Badureliya CC | SLC Invitation T20 Tournament 2019/20


பாணந்துறை கிரிக்கெட் அகடமி எதிர் காலி கிரிக்கெட் கழகம்

இடம் – BRC மைதானம், கொழும்பு

பாணந்துறை கிரிக்கெட் அகடமி – 127/7 (20) –  சஞ்சிக்க ரித்ம 38, மிதுன் ஜயவிக்ரம 2/22

காலி கிரிக்கெட் கழகம் – 128/5 (19.1) –  நிமேஷ் பெரேரா 44*, மன்சூர் அம்ஜட் 29

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

Photos: Galle CC Vs Panadura SC | SLC Invitation T20 Tournament 2019/20

இலங்கை – ஜிம்பாப்வே இடையிலான டெஸ்ட் இம்மாத இறுதியில்

தற்போது இந்தியாவுடன் T20 தொடரில் ஆடிவரும் இலங்கை…..


குழு B 

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம் 

இடம் – FTZ மைதானம், கட்டுநாயக்க

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 172/4 (20) –  மதுரங்க சொய்ஸா 68*, சுபுன் மதுஷங்க 52, சவிந்து பீரிஸ் 2/22

கடற்படை விளையாட்டுக் கழகம் – 111 (19) –  சமித்த ரங்க 25, சுபுன் மதுஷங்க 3/15, லஹிரு தியன்த 2/08, அசேல் சிகெரா 2/16

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 61 ஓட்டங்களால் வெற்றி


SSC எதிர் NCC 

இடம் – பி. சரவணமுத்து மைதானம், கொழும்பு

SSC – 122/9 (20) – சசித்ர சேனநாயக்க 39, சசிந்த பீரிஸ் 2/13

NCC – 123/3 (18.5) – மஹேல உடவத்த 69*, அஞ்செலோ பெரேரா 43

முடிவு – NCC 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

Photos: NCC Vs SSC – SLC Invitational T20 Tournament 2019/20


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 

இடம் – FTZ மைதானம், கட்டுநாயக்க

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 190/5 (20) – அஷேன் பண்டார 101*, மிலிந்த சிறிவர்தன 54, விமுக்தி பெரேரா 2/30, கசுன் மதுஷங்க 2/40

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 185/8 (20) – பிரசன்ன ஜயமன்ன 31, சாலிய சமன் 2/14

முடிவு – செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓட்டங்களால் வெற்றி


குழு C

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம் 

இடம் – NCC மைதானம், கொழும்பு

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 124/6 (20) –  தரிந்த விஜேசிங்க 39*, இன்சக்கா சிறிவர்தன 2/17, இஷான் அபயசேகர 2/21

களுத்துறை நகர கழகம் – 125/5 (18.4) –  அனுஷ்க பெரேரா

முடிவு – களுத்துறை நகர கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

Photos: Kurunegala Youth CC Vs Kalutara TC | SLC Invitational T20 Tournament 2019/20


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

இடம் – CCC மைதானம், கொழும்பு

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 152 (19.2) –  தினேஷ் சந்திமால் 51, லசந்த ருக்மால் 5/31, அசங்க லக்ஷான் 2/21, அரவிந்த ப்ரேமரத்ன 2/24

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 120 (20) –  சாமர பெர்னாந்து 45, துலின டில்ஷான் 3/03, துஷான் விமுக்தி 2/10

முடிவு – இராணுவப்படை விளையாட்டுக் கழகம்  32 ஓட்டங்களால் வெற்றி 

Photos: Air Force SC Vs Army SC | SLC Invitational T20 Tournament 2019/20

உபாதை காரணமாக இலங்கை தொடரை இழக்கும் ரோரி பேர்ன்ஸ்

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோரி…..


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 

இடம் – CCC மைதானம், கொழும்பு

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 133/7 (20) – புலின தரங்க 47*, மாதவ வர்ணபுர 2/13

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 95 (19) – பசிந்து லக்‌ஷங்க 40,  அசித்த பெர்னாந்து 6/08, நிமேஷ் விமுக்தி 2/23

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 38 ஓட்டங்களால் வெற்றி 

Photos – Chilaw Marians CC Vs Negombo CC | SLC Invitational T20 Tournament 2019/20


குழு D

BRC எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

இடம் – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மைதானம், கொழும்பு

BRC – 108/9 (20) – ஹஷேன் ராமநாயக்க 40, அமில அபொன்சோ 3/07

றாகம கிரிக்கெட் கழகம் – 109/5 (17.4) – நிஷான் மதுஷ்க 33, கெவின் கொத்திகொட 2/16

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட கிரிக்கெட் கழகம் 

இடம் – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

லங்கன் கிரிக்கெட் கழகம் – 136 (20) – ப்ரிமோஷ் பெரேரா 54, தமித்த சில்வா 45, சந்துல வீரரத்ன 4/26

நுகேகொட கிரிக்கெட் கழகம் – 119/6 (20) – ப்ரமோத் ஹெட்டிவத்த 47, தெனுவன் ராஜகருன 22

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 17 ஓட்டங்களால் வெற்றி 


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் 

இடம் – NCC மைதானம், கொழும்பு

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 143/7 (20) –  லசித் அபேய்ரத்ன 50*, சுபுன் கவிந்த 3/15, ரஜீவ வீரசிங்க 2/25

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 113/9 (20) –  யொஹான் டி சில்வா 46, நுவன் துஷார 3/19

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 30 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<