Home Tamil வனிந்து ஹசரங்கவின் அபார துடுப்பாட்டத்தால் சம்பியனாகியது CCC

வனிந்து ஹசரங்கவின் அபார துடுப்பாட்டத்தால் சம்பியனாகியது CCC

78

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20 தொடரில் இன்று (21) எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) அணி சம்பியனாகியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிரிக்கெட் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு வழங்கியது.

அழைப்பு T20 தொடரின் இறுதிப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ், கொழும்பு கிரிக்கெட் கழக அணிகள்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள்..

இதன்படி, களமிறங்கிய சிலாபம் மேரியன்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக லசித் க்ரூஸ்புள்ளே ஆட்டமிழந்தார். தங்களுடைய முதல் விக்கெட்டினை 9 ஓட்டங்களுக்கு சிலாபம் மேரியன்ஸ் அணி இழந்த போதிலும், அணித் தலைவர் செஹான் ஜயசூரிய மற்றும் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அணிக்கு மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுத்தந்தனர். 

செஹான் ஜயசூரிய மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 96 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுக்க, அந்த அணி 100 ஓட்டங்களை கடந்தது. இதில், கமிந்து மெண்டிஸ் 30 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். 

எனினும், அரைச் சதம் கடந்த செஹான் ஜயசூரிய அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தார். இவர் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாட ஒரு கட்டத்தில் சிலாபம் அணி 200 ஓட்டங்களையும் எட்டக்கூடிய நிலையில் இருந்தது.

எவ்வாறாயினும், அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, சிலாபம் மேரியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக அதிகபட்சமாக செஹான் ஜயசூரிய 52 பந்துகளுக்கு 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

Photos: Chilaw Marians CC vs CCC | SLC Invitation T20 Tournament 2019/20 | Final

கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பாக மலிந்த புஷ்பகுமார, லஹிரு கமகே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை பகிர்ந்துக்கொள்ள, வனிந்து ஹசரங்க மற்றும் நுவான் துஷார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழக அணி, ஆரம்பத்தில் தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், அணித் தலைவர் அசான் பிரியன்ஜன் உட்பட மூவர் ஆட்டமிழக்க, அவ்வணி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

இதன் பின்னர், களமிறங்கிய மினோத் பானுக கொழும்பு கிரிக்கெட் கழக அணிக்காக வேகமாக ஓட்டங்களை குவித்து அரைச் சதம் கடந்து ஆட்டமிழந்தார். இவரின் ஓட்டக்குவிப்பின் உதவியுடன் இறுதியாக களமிறங்கிய வனிந்து ஹசரங்க அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.

அதன்படி, இறுதி ஓவருக்கு 17 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், வனிந்து ஹசரங்க மற்றும் மானெல்கர் டி சில்வா ஆகியோரின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து கொழும்பு கிரிக்கெட் கழகம் வெற்றியிலக்கை அடைந்தது.

வனிந்து ஹசரங்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி 34 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, மினோத் பானுக 38 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில், புலின தரங்க அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் அடிப்படையில் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைினை தக்கவைத்த, கொழும்பு கிரிக்கெட் கழக அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.

Result


Colombo Cricket Club
165/6 (20)

Chilaw Marians Cricket Club
162/8 (20)

Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle c Ron Chandraguptha b Lahiru Gamage 6 6 1 0 100.00
Kamindu Mendis c Ashan Priyanjan b Nuwan Thushara 46 30 5 1 153.33
Shehan Jayasuriya c Malindu Maduranga b Malinda Pushpakumara 80 52 9 0 153.85
Thikshila de Silva c Wanidu Hasaranga b Malinda Pushpakumara 2 3 0 0 66.67
Pulina Tharanga b Wanidu Hasaranga 4 5 0 0 80.00
Sanoj Darshika b Lahiru Gamage 2 3 0 0 66.67
Rumesh Buddika run out (Lahiru Gamage) 9 10 0 0 90.00
Nimesh Vimukthi run out (Minod Bhanuka) 5 8 0 0 62.50
Chathuranga Kumara not out 6 2 0 1 300.00
Irosh Fernando not out 1 1 0 0 100.00


Extras 1 (b 0 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 162/8 (20 Overs, RR: 8.1)
Did not bat Asitha Fernando,

Fall of Wickets 1-9 (2.2) Lasith Croospulle, 2-105 (11.5) Kamindu Mendis, 3-110 (12.4) Thikshila de Silva, 4-122 (14.1) Pulina Tharanga, 5-139 (15.5) Sanoj Darshika, 6-143 (16.6) Shehan Jayasuriya, 7-155 (19.2) Rumesh Buddika, 8-155 (19.3) Nimesh Vimukthi,

Bowling O M R W Econ
Malinda Pushpakumara 4 0 27 2 6.75
Lahiru Gamage 4 0 30 2 7.50
Manelka De Silva 1 0 11 0 11.00
Ashan Priyanjan 4 0 31 0 7.75
Nuwan Thushara 2 0 17 1 8.50
Shalika Karunanayakke 2 0 15 0 7.50
Wanidu Hasaranga 3 0 31 1 10.33


Batsmen R B 4s 6s SR
Ron Chandraguptha b Nimesh Vimukthi 2 6 0 0 33.33
Malindu Maduranga lbw b Asitha Fernando 1 6 0 0 16.67
Minod Bhanuka c Thikshila de Silva b Pulina Tharanga 59 38 6 1 155.26
Ashan Priyanjan c Asitha Fernando b Thikshila de Silva 14 12 1 1 116.67
Lasith Abeyrathna c Pulina Tharanga b Kamindu Mendis 10 13 0 0 76.92
Shalika Karunanayakke lbw b Pulina Tharanga 0 1 0 0 0.00
Wanidu Hasaranga not out 60 34 6 1 176.47
Manelka De Silva not out 15 12 1 0 125.00


Extras 4 (b 0 , lb 2 , nb 0, w 2, pen 0)
Total 165/6 (20 Overs, RR: 8.25)
Did not bat Malinda Pushpakumara, Lahiru Gamage, Nuwan Thushara,

Fall of Wickets 1-4 (1.5) Ron Chandraguptha, 2-4 (2.1) Malindu Maduranga, 3-24 (4.4) Ashan Priyanjan, 4-74 (10.4) Lasith Abeyrathna, 5-82 (11.2) Shalika Karunanayakke, 6-96 (13.2) Minod Bhanuka,

Bowling O M R W Econ
Asitha Fernando 4 0 20 1 5.00
Nimesh Vimukthi 2 0 13 1 6.50
Thikshila de Silva 3 0 40 1 13.33
Shehan Jayasuriya 3 0 34 0 11.33
Kamindu Mendis 4 0 32 1 8.00
Pulina Tharanga 4 0 24 2 6.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<