சகல துறையிலும் பிரகாசித்த TN சம்பத்: மட்டக்களப்பு அணிக்கு இலகு வெற்றி

174
Inter District One Day Cricket

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் தொடரின் இன்று 7 போட்டிகள் நடைபெற்றன.

புத்தளம் எதிர் கேகாலை

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புத்தளம் மாவட்ட அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ஓட்டங்களை பதிவு செய்தது. சிறப்பாக துடுப்பாடிய திக்ஷீல டி சில்வா மற்றும் இசுறு உதான அரைச் சதம் பெற்ற அதேவேளை ருக்ஷான் பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களை குவித்தார்.

அதேநேரம் ஓட்டங்களை கட்டுப்படுத்திய இஷான் ஜயரத்ன 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் நுவன் குலசேகர 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதனையடுத்து, 253 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கேகாலை மாவட்ட அணி 43.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சிறப்பாக துடுப்பாடிய சதீர சமரவிக்கிரம 74 ஓட்டங்களையும் நிசல தாரக்க மற்றும் ப்ரிமல் பெரேரா ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 38, 49 ஓட்டங்களை பெற்று இலகுவாக வெற்றியை உறுதி செய்தனர். அதேநேரம் புத்தளம் மாவட்ட அணி சார்பாக பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ, செஹான் ஜயசூரிய மற்றும் திக்ஷீல டி சில்வா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

புத்தளம் மாவட்டம் – 252/8 (50) – திக்ஷீல டி சில்வா 59, இசுறு உதான 55, ருக்ஷான் பெர்னாண்டோ 39*, இஷான் ஜயரத்ன 3/46, நுவன் குலசேகர 2/36

கேகாலை மாவட்டம் – 256/7 (43.2) – சதீர சமரவிக்கிரம 74, நிசல தாரக 49*, ப்ரியமல் பெரேரா 38*, அவிஷ்க பெர்னாண்டோ 27, அசித பெர்னாண்டோ 2/25, செஹான் ஜயசூரிய 2/36, திக்ஷீல டி சில்வா 2/53

போட்டி முடிவு – கேகாலை மாவட்டம் மூன்று விக்கெட்டுகளால் வெற்றி


மட்டக்களப்பு எதிர் அம்பாறை

டி என் சம்பத்தின் அதிரடியாக பெற்றுக்கொண்ட 126 ஓட்டங்களில் உதவியுடன் ஓட்டங்களை குவித்த மட்டக்களப்பு அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களை பதிவு செய்தது. கடின இலக்கை நோக்கி துடுப்பாடிய அம்பாறை மாவட்டம் அதிகளவான அழுத்தத்தினை எதிர்கொண்டதனால் 36.4 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து  207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக சாலிய சமன் அதிகபட்ச ஓட்டங்களாக 65 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். அதேநேரம் சிறப்பாக பந்து வீசிய என்டி சாலமன், TN சம்பத், பானுக்க ராஜபக்ஷ மற்றும் ஹஷென் ராமநாயக்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

மட்டக்களப்பு மாவட்டம் – 290 (50) – டி என் சம்பத் 126, ருமேஷ் புத்திக்க 34, பானுக்க ராஜபக்ஷ 32, என்டி சாலமன் 29, சானக விஜேசிங்க 27, ஹஷென் ராமநாயக்க 20, அலங்கார அசங்க 3/38, சாலிய சமன் 3/64

அம்பாறை மாவட்டம் – 207 (36.4) – சாலிய சமன் 65, அலங்கார அசங்க 46, விஷ்வ விஜேரத்ன 29, மதீஷ பெரேரா 23, என்டி சாலமன் 2/16, TN சம்பத் 2/24, பானுக்க ராஜபக்ஷ 2/26, ஹஷென் ராமநாயக்க 2/42

போட்டி முடிவு – மட்டக்களப்பு மாவட்டம் 83 ஓட்டங்களால் வெற்றி


பதுளை எதிர் இரத்தினபுரி

கொழும்பு, SSC விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஷிரான் பெர்னாண்டோவின் அதிரடி பந்து வீச்சின் மூலம் பதுளை  மாவட்ட அணியை 237 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியிருந்த போதும் இரத்தினபுரி மாவட்ட துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காததால் 35 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பதுளை மாவட்ட அணி சார்பாக ஹிமாஷ லியனகே அதிகபட்ச ஓட்டங்களாக 60 ஓட்டங்களையும் சஞ்சிக்க ரித்ம ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைம் பதிவு செய்திருந்தனர். அதேநேரம் ஷிரான் பெர்னாண்டோ 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பதுளை மாவட்டம் – 237 (49.2) – ஹிமாஷ லியனகே 60, சஞ்சிக்க ரித்ம 51*, ஜனக சம்பத் பெரேரா 27, ஜனித் டி சில்வா 26, அஜந்த மெண்டிஸ் 21, ஷிரான் பெர்னாண்டோ 4/40, சரித் பெர்னாண்டோ 2/34, நவீன் கவிகார 2/41  

இரத்தினபுரி மாவட்டம் – 202 (46.4) – சஜித் திசாநாயக்க 46, தமித் பிரியதர்ஷன 44, சரித் பெர்னாண்டோ 21*, சீக்குகே பிரசன்ன 3/42, சஞ்சிக்க ரித்ம 3/43, ஜனக சம்பத் பெரேரா 2/14

போட்டி முடிவு – பதுளை மாவட்டம் 35 ஓட்டங்களால் வெற்றி


களுத்துறை எதிர் கொழும்பு

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில், கொழும்பு மாவட்டம், அதிரடி பந்து வீச்சின் மூலம் களுத்துறை அணியை 167 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி, ரொன் சந்திரகுப்த ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரை சதத்தின் மூலம் ஏழு விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றியீட்டியது.

அதிரடியாக பந்து வீசிய வனிது ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். களுத்துறை மாவட்டம் சார்பாக இறுதி வரை போராடிய கயான் சிரிசோம 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் தோல்வியினை தவிர்க்க முடியவில்லை.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை மாவட்டம் – 167 (36.5) – லசித் பெர்னாண்டோ, 35, மாதவ பெர்னாண்டோ 30, ஹசந்த பெர்னாண்டோ 29, வானிது ஹசரங்க 5/22, விஷ்வ பெர்னாண்டோ 3/38

கொழும்பு மாவட்டம் – 171/3 (33.1) – ரொன் சந்திரகுப்த 70*, அஷான் ப்ரியஞ்சன் 34*, மாதவ வர்ணபுர 33, மலிந்து மதுரங்க 23, கயான் சிரிசோம 3/58

போட்டி முடிவு – கொழும்பு மாவட்டம் 7 விக்கெட்டுகளால் வெற்றி


கிளிநொச்சி எதிர் யாழ்ப்பாணம்

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் சங்கீத் குரே 81 ஓட்டங்களை குவித்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் கிளிநொச்சி மாவட்டம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சிறப்பாக பந்து வீசிய ரமித் ரம்புக்வெல்ல 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய யாழ்ப்பாண மாவட்டம் தரங்க பரணவிதான ஆட்டமிழக்காமல் விளாசிய 79 ஓட்டங்களின் உதவியுடன் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 27.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

போட்டியின் சுருக்கம்

கிளிநொச்சி மாவட்டம் – 157 (43) – சங்கீத் குரே 81, ரமித் ரம்புக்வெல்ல 3/18, பிரவீண் மதுஷங்க 2/14, ஜீவன் மெண்டிஸ் 2/28, சாமிக்க கருணாரத்ன 2/37

யாழ்ப்பாண மாவட்டம் – 158/3 (27.1) தரங்க பரணவிதான 79*, வினுக் விக்ரமநாயக்க 38, சிதார கிம்ஹான் 32

போட்டி முடிவு – யாழ்ப்பாண மாவட்டம் 7 விக்கெட்டுகளால் வெற்றி


அனுராதபுரம் எதிர் மன்னார்

கொழும்பு NCC விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், மன்னார் மாவட்டம் உதார ஜயசுந்தரவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட 94 ஓட்டங்களின் உதவியுடன் அனுராதபுர மாவட்ட அணியை இலகுவாக 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனுராதபுரம் அணி சார்ப்பாக அதிக பட்ச ஓட்டங்களாக அதீஷ நாணயக்கார 54 ஓட்டங்களை பதிவு செய்ய ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

அதநேரம் சிறப்பாக பந்து வீசிய உதித் மதுஷான் 32 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

அனுராதபுரம் மாவட்டம் – 170 (43.2) – அதீஷ நாணயக்கார 54, நிபுன் கருணாநாயக்க 29, அகில் இன்ஹாம் 23, உதித் மதுஷான் 3/32, உதார ஜயசுந்தர 2/19, அமில அபோன்சோ 2/30, சஹன் நாணயக்கார 2/44

மன்னார் மாவட்டம் – 171/2 (36.1) – உதார ஜயசுந்தர 94, லஹிரு மிலந்த 53

போட்டி முடிவு – மன்னார் மாவட்டம் 8 விக்கெட்டுகளால் வெற்றி


காலி எதிர் மாத்தறை

பனாகொட இராணுவ மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் லஹிரு உதார ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 54 ஓட்டங்களின் உதவியுடன் மாத்தறை மாவட்டம் 9 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

காலி மாவட்டம் – 130 (27.1) – மின்ஹாஜ் ஜலில் 32, டிலான் குரே 20, அரவிந்த அக்குருகொட 3/10, ஷனகோகீத் சண்முகநாதன் 3/29, பர்வீஸ் மஹ்ருப் 2/20

மாத்தறை மாவட்டம் – 136/1 (17.3) – லஹிரு உதார 54*, அஞ்சேலோ பெரேரா 42*, ஷனகோகீத் சண்முகநாதன் 29

போட்டி முடிவு – மாத்தறை மாவட்டம் 9 விக்கெட்டுகளால் வெற்றி

Match Highlights