சில்வா மீது போட்டித்தடை விதித்தது சரியே – இலங்கை கிரிக்கெட் சபை ஆய்வுக்குழு

564

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் இடம்பெற்ற பாணந்துறை மற்றும் களுத்துறை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற  உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக கூறி அக்குற்றசாட்டிக்காக அப்போட்டியில் ஆடிய கழகங்களுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்த விடயம் கடந்த 48 மணி நேரமாக சமூக வலைத்தளங்களில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

களுத்துறை பெளதிக கலச்சார அணி மற்றும் பாணந்துறை விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டியில் இரண்டு அணிகளதும் செயற்பாடுகள் மூலம் முதலாவது நாளில் 8 விக்கெட்டுகளுக்கு (ஒரு ஓவருக்கு 3.85 என்ற ஓட்டவீத சராசரியுடன்) 362 ஓட்டங்களே குவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று போட்டியின் இரண்டாம் நாளில் 4 விக்கெட்டுகளுடன் (ஒரு ஓவருக்கு  3.83 என்ற ஓட்டவீத சராசரியுடன்) 207 ஓட்டங்களே பெறப்பட்டிருந்தது. எனினும் மழை குறுக்கீடு காணப்பட்ட போட்டியின் இறுதி நாளில் வழமைக்கு மாறாக வெறும் 59 ஓவர்களுக்கு 24 விக்கெட்டுகளுடன் 603 ஓட்டங்கள் குவிக்கப்பட்ட விடயம் போட்டியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் முதல்தரப் போட்டியொன்றில் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 165 ஓட்டங்களை 13.4 ஓவர்களில் மிகவும் வேகமாக பாணந்துறை அணி அடைந்தும் சந்தேகத்தை வலுவாக்கியது.

போட்டி மத்தியஸ்தர்களாலும், நடுவர்களாலும் உருவாக்கப்பட்ட போட்டிக் குற்றாச்சாட்டுகள் அடங்கிய அறிக்கைகளை (போட்டியின் மீது) துறைமுக அதிகாரசபை சந்தேகத்தை எழுப்பியதை தொடர்ந்து இரண்டு அணிகளதும் பயிற்றுவிப்பாளர்கள் உட்பட 27 பேருக்கு நாம் அனுப்பியிருந்தோம். எனினும் அனுப்பபட்ட  இந்த முறைப்பாட்டில் இரண்டு அணிகளதும் நிர்வாக உத்தியோகத்தர்கள் பற்றி எதுவும் அடங்கியிருக்கவில்லை. எமது சுயாதீன குழுவின் மூலம் நாம் இறுதியாக எடுத்த முடிவின்படி போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் கிரிக்கெட் விளையாட்டின் புனிதத் தன்மையை கலங்கப்படுத்தும் விதமாக செயற்பட்டிருந்தனர் என்பது ஊர்ஜிதம் ஆனது. ஆனால், பணத்தோடு சம்பந்தப்பட்ட ஆட்ட நிர்ணய சதிகளுக்கோ அல்லது வேறொரு குற்றத்திற்கோ எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.”

என இப்போட்டி விசாரணைகள் பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் தலைமை அதிகாரி பந்துல திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

இலங்கை அணிக்காக இறுதியாக 2011ஆம் ஆண்டு விளையாடிய  நன்மதிப்பை கொண்ட அனுபவமிக்க வீரர்களில் ஒருவரும், பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் இணை பயிற்றுவிப்பாளருமான சாமர சில்வா,  களுத்துறை பெளதிக கலச்சார அணியின் தலைவர் மனோஜ் தேசப்பிரிய உடன் இணைந்து (பாணந்துறை அணியினை தலைமை தாங்கியமைக்காக) இந்த போட்டியின் மூலம் எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளால் போட்டித் தடையைப் பெற்றுள்ளார்.

சாமர சில்வாவுக்கு 2 வருடகால போட்டித் தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு சகல..

எமக்கு வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவர் (சாமர சில்வா) தவறு இடம்பெற்றதாக கூறப்படும் போட்டியின் மூன்றாம் நாளில் அணித் தலைவருடயை அறிக்கையில் கையொப்பம் இடுவதற்காக மைதானத்தில் காணப்பட்டிருக்கவில்லை. த்தோடு நேற்று சில அறிவுறுத்தல்களினால் நாம் அவர் சார்பாக எந்தவொரு குற்றத்தையும் பிடிக்கவில்லை. இருந்தபோதிலும் ஏற்கனவே கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக நாம் அவரிடம் எங்களது விசாரணைகளை மேற்கொள்ளும் போது ஏனைய வீரர்கள் போன்று சமமாகவே நடந்து கொண்டோம். த்தோடு நாங்கள் போட்டியின் மூன்றாம் நாளின் விளையாட்டை மாத்திரம் இங்கு கவனத்தில் எடுத்திருக்கவில்லை. மூன்று நாட்கள் கொண்ட போட்டியொன்றுக்கு சாமர சில்வாவே தலைவர், நாங்கள் போட்டியைப் பற்றி முழுமையாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தோம். த்தோடு போட்டித் தடையைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு வீரரும் பயிற்றுவிப்பாளரும் தமக்குரிய அத்தடையை இலங்கை கிரிக்கெட் சபையிடம் மீள்பரிசிலனை  செய்து கொள்ள முடியும்.“

என இப்போட்டி தொடர்பான குற்றாச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அசேல ரேகாவ கூறியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது குறித்த போட்டியின் முடிவை இரத்து செய்துள்ளதோடு இச்சம்பவத்தின் மூலம் ஏற்பட்ட திருப்தியற்ற தன்மைக்காக  இரண்டு கழகங்களுக்கும் ஐந்து இலட்சம் ரூபா அபாரதமும் விதித்துள்ளது. மேலும் போட்டியின் முடிவு இரத்து செய்யப்பட்ட காரணத்தினால் இப்போட்டி மூலம் கிடைத்த புள்ளிகள் இரண்டை  பாணந்துறை விளையாட்டுக் கழகம் இழந்துள்ளது. இதனால் தொடரின் புள்ளி அட்டவணையில் முதலிடத்தில் காணப்பட்ட பாணந்துறை அணி இரண்டாம் இடத்திற்கு போகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் தற்போது தொடரின் புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் அடுத்த பருவகாலத்திற்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பிரிவு A கழகமாக தரமுயர்த்தப்படும் சந்தர்ப்பத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாமர சில்வா போட்டித் தடையைப்  பெற்றிருப்பினும் அவருக்கு கிரிக்கெட் வீரர்களிடத்தில் ஆதரவு பெருகிவருகின்றது. இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மஹேல ஜயவர்த்தன தனது ட்விட்டரில்,

ஆட்ட நிர்ணயத்தில் பங்கேற்காது போட்டியில் இருந்து விலகி சென்ற ஒருவருக்கு இரண்டு வருடங்கள் தடைவிதிப்பது எப்படி நியாயமாகும். சாமர நான் விளையாடிய போது காணப்பட்ட வீரர்களில் மிகவும் நேர்மையானவர். இவ்வாறான ஒரு சம்பவத்தில் கழகத்தின் உத்தியோகபூர்வ உறுப்பினர் எவராவது பங்கேற்று இருந்தால் அவருக்கு வாழ்நாள் தடைவிதித்து நாம் எல்லோருக்கும் உதாரணமாக அமைந்திருக்கலாம்என தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

அதோடு சாமர சில்வாவின் சக அணி உறுப்பினர்களில் ஒருவரான ரஸ்ஸல் ஆர்னல்ட் நான் சாமர சில்வாவை நினைத்து கவலை அடைகின்றேன். அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதையை எவ்வாறு வெளிப்படுத்துவது எனத்தெரியவில்லை. இதனால் நான் தற்போது ஒரு சமநிலையற்ற தன்மையில் இருப்பதாகவும் உணர்கின்றேன்“  என தனது ட்விட்டரில் பதிவிட்டு கவலையை வெளிக்காட்டியிருந்தார்.