தில்ஷான் முனவீரவின் அதிரடி பந்துவீச்சினால் கொழும்பு மாவட்ட அணிக்கு இலகு வெற்றி

401
dilshan munaveera

இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் நடாத்தப்படும் மாவட்ட அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆறு போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன.

கொழும்பு எதிர் கம்பஹா

கொழும்பு CCC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பாடிய கொழும்பு மாவட்ட அணி அஷான் பிரியஞ்சன் (68) மற்றும் லஹிரு மதுஷங்க (51*) ஆகியோரின் அரைச்சதங்களுடன் எதிரணிக்கு வெற்றி இலக்காக 279 ஓட்டங்களை நிர்ணயித்தது.

பின்னர் தில்ஷான் முனவீரவின் அதிரடி சுழல் பந்துவீச்சின் மூலம் கம்பஹா அணி வெறும் 48  ஓட்டங்களிற்குள் மட்டுப்படுத்தப்பட கொழும்பு அணி அபார வெற்றியினை இப்போட்டியில் பெற்றுக்கொண்டது.

தில்ஷான் முனவீர முன்னதாக பெறுமதிவாய்ந்த 41 ஓட்டங்களையும் கொழும்பு அணிக்கு பெற்றுத் தந்தார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு மாவட்டம் – 278/6 (50) – அஷன் பிரியஞ்சன் 68, லஹிரு மதுஷங்க 51*, வனிது ஹஸரங்க 46, தில்ஷான் முனவீர 41, மாதவ வர்ணபுர 30, நிஷான் பீரிஸ் 2/57

கம்பஹா மாவட்டம் – 48 (22.3) – ஷெஹான் அனுருத்த 22, தில்ஷான் முனவீர 6/09, சசித் பதிரண 3/10

போட்டி முடிவு – கொழும்பு மாவட்டம் 230 ஓட்டங்களால் வெற்றி


புத்தளம் எதிர் குருநாகல்

கட்டுநாயக்க FTZ மைதானத்தில் நிறைவுற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த புத்தள மாவட்ட அணியினர் முதலில் துடுப்பாடி சசித்ர சேரசிங்க (91), இலங்கை அணியில் தென்னாபிரிக்க அணியுடனான T-20 தொடரில் அறிமுகமாயிருந்த திக்ஷில டி சில்வா (84) மற்றும் சகலதுறை வீரர் ஷெஹான் ஜயசூரிய ஆகியோர் சிறப்பான ஆட்டத்துடன் எதிரணிக்கு வெற்றி இலக்காக 336 ஓட்டங்களை தீர்மானித்தனர்.

இதனைப்பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய குருநாகல் மாவட்ட அணி புத்தளம் மாவட்ட அணியின் சுழல் பந்துவீச்சாளர் மலிந்து புஷ்பகுமாரவின் சிறப்பாட்டத்தினால், 156 ஓட்டங்களை மாத்திரம் குவித்து படுதோல்வியடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புத்தளம் மாவட்டம் – 335 (47.2) – சசித்ர சேரசிங்க 91, திக்ஷில டி சில்வா 84, ஷெஹான் ஜயசூரிய 83, இசுரு உதான 34, தர்ஷன மஹவத்த 3/39, அனுருத்த ராஜபக்‌ஷ 2/48

குருநாகல் மாவட்டம் – 156 (33.2) – ருவந்த ஏக்கநாயக்க 64, அனுருத்த ராஜபக்ஷ 44, மலிந்த புஷ்பகுமார 4/68, அரோஷ ஜனோத் 2/08

போட்டி முடிவு – புத்தளம் மாவட்டம் 179 ஓட்டங்களால் வெற்றி


யாழ்ப்பாணம் எதிர் வவுனியா

கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய யாழ்ப்பாண மாவட்ட அணி, தரங்க பரனவிதான பெற்றுக்கொண்ட அபார சதத்துடன் 318 ஓட்டங்களை 50 ஓவர்கள் நிறைவில் பெற்றுக்கொண்டனர்.

இதில் வவுனியா மாவட்ட அணியினை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த பொலிஸ் கழக வீரர் மஹேஷ் பிரியதர்ஷன 5 விக்கெட்டுகளை சரித்திருந்தார்.

வெற்றி இலக்கினை எட்டுவதற்கு மைதானம் விரைந்த வவுனியா மாவட்டம் ஜீவன் மெண்டிசின் சுழலால் நிலைகுலைந்து 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களால் இப்போட்டியில் தோல்வியினை தழுவியது.

சிறப்பாகச் செயற்பட்டிருந்த ஜீவன் மெண்டிஸ் 41 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுகளைச் சுருட்டி யாழ்ப்பாண மாவட்டத்தின் வெற்றியினை உறுதிப்படுத்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாண மாவட்டம் – 318/8 (50) – தரங்க பரனவிதான 101, ஹரித் மதுவந்த 57, சித்தார கிம்ஹான் 55, ஜீவன் மெண்டிஸ் 32, மஹேஷ் பிரியதர்ஷன 5/54

வவுனியா மாவட்டம் – 156 (33.2) – சமித் துஷாந்த 68, தரிந்து தில்ஷான் 31, ஜீவன் மெண்டிஸ் 5/41

போட்டி முடிவு – யாழ்ப்பாண மாவட்டம் 162 ஓட்டங்களால் வெற்றி


திருகோணமலை எதிர் அம்பாறை

BRC மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில், பதுரேலிய கழக அணியின் வீரரும் இலங்கை கனிஷ்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த ஷெஹான் பெர்னாந்துவின் திறமையான ஆட்டத்தினால், அம்பாறை மாவட்ட அணி 4 விக்கெட்டுகளால் திருகோணமலை மாவட்ட அணியினை வீழ்த்தியது.

இதில், ஷெஹான் பெர்னாந்து மொத்தமாக 85 ஓட்டங்களினை அம்பாறை அணிக்காக குவித்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

திருகோணமலை மாவட்டம் – 197 (45.5) – அச்சிர ஹிரங்க 49, திமுத் வரப்பிட்டிய 35, லஹிரு லக்மால் 25, அலங்கார அசங்க 3/33,  துவிந்து திலகரட்ன 3/36

அம்பாறை மாவட்டம் – 199/6 (36.5) – ஷெஹான் பெர்னாந்து 85, சொஹான் ரங்கிக்க 4/28

போட்டி முடிவு – அம்பாறை மாவட்டம் 4 விக்கெட்டுகளால் வெற்றி


மாத்தளை எதிர் கண்டி

வெலிசர கடற்படை மைதானத்தில் தொடங்கியிருந்த மத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியிருந்த கண்டி அணி மாத்தளை மாவட்ட அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பெற்றுக்கொண்டது.

கண்டி அணி சார்பாக பந்து வீச்சில் பிரகாசித்திருந்த ஜெப்ரி வன்டர்சேய் மூன்று விக்கெட்டுகளையும் சசித்ர சேனநாயக்க, திசர பெரேரா மற்றும் தசுன் சானக்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

மாத்தளை மாவட்டம் – 122 (37.1) – புத்திக்க ஹஸரங்க 53, ஜெப்ரி வன்டர்சேய் 3/31, திசர பெரேரா 2/18, சசித்ர சேனநாயக்க 2/15, தசுன் சாணக்க 2/15

கண்டி மாவட்டம் – 121/1 (21.1) – மினோத் பாணுக்க 70*

போட்டி முடிவு – கண்டி மாவட்டம் 9 விக்கெட்டுகளால் வெற்றி


மன்னார் எதிர் பொலன்னறுவை

சர்ரேய் கிராம மைதானத்தில் தொடர்ந்த இப்போட்டியில உதார ஜயசுந்தர மற்றும் இலங்கை அணி வீரர் லஹிருதிரிமன்னஆகியோரின் அபார சதத்துடன் பொலன்னறுவை மாவட்டத்திற்கு மன்னார் மாவட்டம் அதிர்ச்சி அளித்தது.

முதலில் துடுப்பாடிய பொலன்னறுவை நிர்ணயித்த 219 ஓட்டங்கள் என்கிற வெற்றியிலக்கினை, ஆட்டமிழக்காது உதார ஜயசுந்தரபெற்றுக்கொண்ட 100 ஓட்டங்களாலும் இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் லஹிரு திரிமன்ன ஆட்டமிழக்காமல்பெற்றுக்கொண்ட 103 ஓட்டங்களினாலும் இலங்கை அணி அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

பொலன்னறுவை மாவட்டம் – 218/9 (50) தரிந்து சிறிவர்த்தன 49, நிப்புன கமகே 54, யோஹான் டி சில்வா 42, சத்துர பீரிஸ் 2/23

மன்னார் மாவட்டம் – 219/1 (36.2) லஹிரு திரிமன்ன 103*, உதார ஜயசுந்தர 100*

போட்டி முடிவு மன்னார் 9 விக்கெட்டுக்களால் வெற்றி