இலங்கைக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு

1821

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிக்கான இந்திய குழாமில் யுவராஜ் சிங், மொஹமட் ஷமி, ரவிசந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய வீரர்கள் இணைக்கப்படவில்லை.

மனீஷ் பாண்டே, ஷர்துல் தாகுர், யுஸ்வன்த்ரா சஹல், அக்சர் படேல் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் 15 பேர் கொண்ட இந்திய குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் விளையாடும் ஒரே ஒரு டி20 போட்டி செப்டெம்பர் 6 ஆம் திகதி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின்போது உபாதைக்கு உள்ளான மனீஷ் பாண்டே தேசிய அணியில் இருந்து விலகி இருந்தார். எனினும் லிஸ்ட் A கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக திறமையைக் காட்டியிருந்தார். இந்த மாத ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த முக்கோண தொடரில் இந்திய A அணிக்கு தலைமை வகித்து அணியை வெற்றிபெறச் செய்தார். அவர் ஐந்து இன்னிங்சுகளிலும் 307 ஓட்டங்களை குவித்தார்.

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான அஷ்வின், ஜடேஜா, ஷமி மற்றும் உமேஷ் ஆகியோருக்கு பதில் மாற்று வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு போட்டிகளில் வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்கவேண்டும் – வாஸ்

இலங்கை கிரிக்கெட் (SLC) உள்நாட்டு போட்டிகளில் 2016/17 இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 15 பந்துவீச்சாளர்களில் 14 பேர் …

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ஜஸ்பிரிட் பும்ராஹ் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ரோஹித் ஷர்மாவுக்கு உப தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய கே.எல் ராகுல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார். இதனால் ரிஷாப் பான்ட் மற்றும் டினேஷ் கார்த்திக் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 35 வயதான யுவராஜ் சிங் இந்திய அணியில் தனது இடத்தை படிப்படியாக நழுவவிட்டு வருகிறார். 2019 உலகக் கிண்ணத்திற்கு புதிய மத்திய வரிசை ஒன்றை அமைக்க இந்திய தேர்வுக் குழுவினர் தயாராகி இருப்பதாகவே இந்த தேர்வு காட்டுகிறது. சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 32 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்றது தொடக்கம் யுவராஜ் சிங் விளையாடிய ஆறு இன்னிங்சுகளிலும் ஒரு அரைச் சதத்தைக் கூடப் பெறவில்லை. அவர் விளையாடிய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மிக அண்மைய மூன்று இன்னிங்சுகளிலும் மொத்தம் 57 ஓட்டங்களையே பெற்றார்.

இந்திய குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா (உப தலைவர்), கே.எல் ராகுல், மனிஷ் பாண்டே, அஜிங்கியா ரஹானே, எம்.எஸ் தோனி, கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, அக்சர் படேல், யுஸ்வன்திரா சஹல், ஷர்துல் தாகுர், புவ்னேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ராஹ்