ஆசிய விளையாட்டு விழாவில் முதல் வெற்றியை பதிவுசெய்த இலங்கை ஹொக்கி அணி

132

ஆசிய விளையாட்டு விழாவில் தனது 3 ஆவது போட்டியில் ஹொங்கொங் அணியை சந்தித்த இலங்கை அணி 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் தமது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

இரண்டு அணிகளும் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்ற நிலையில், இரண்டு அணிகளும் முதலாவது புள்ளியை பெற்றுக்கொள்ள கடுமையாக போராடியதை காணக்கூடியதாக இருந்தது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் என முன்னரே எதிர்பார்க்கப்பட்ட போதும், ஹொங்கொங் அணி இலங்கை அணிக்கு சவாலாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது கால்பகுதி ஆட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இலங்கை அணி ஆரம்பம் முதலே அழுத்தம் கொடுத்து வந்தது. அதன் பலனாக 7 ஆவது நிமிடத்தில் சந்தருவன் ப்ரியலங்க முதல் கோல் அடித்து இலங்கை அணிக்கு போட்டியில் முன்னிலையை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியால் முதல் கால்பகுதியில் மேலதிக கோல் போட வாய்ப்புக்கிடைக்கவில்லை.

ஆசிய விளையாட்டில் இலங்கை பளுதூக்கல் வீரர்களுக்கு ஏமாற்றம்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பேர்க்கில் நடைபெற்று வருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு..

இரண்டாவது கால்பகுதியில் பல முயற்சிகளின் பின்னர், 26 ஆவது நிமிடத்தில் பெனால்டி கோர்னர் மூலமாக இலங்கை அணி தனது இரண்டாவது கோலை அடித்து அசத்தியது. இம்முறை ரத்நாயக்க இலங்கை அணி சார்பாக கோல் அடித்தார். இதன் மூலம் இலங்கை அணி முதல் பாதி முடிவின் பொழுது 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் காணப்பட்டது.

முதல் பாதி: இலங்கை 2 – 0 ஹொங் கொங்

மூன்றாவது கால் பகுதியில் இரண்டு அணிகளாலும் எந்த ஒரு கோலையும் போட முடியவில்லை. முதல் பாதியில் தாம் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு ஹொங்கொங் அணி இலங்கை அணிக்கு சவால் கொடுத்து வந்தது.

இறுதிக் கால் பகுதியில் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கை அணி கொடுத்த அழுத்தம் காரணமாக 51 ஆவது நிமிடத்தில் தமது மூன்றாவது கோலை அடித்தது. சந்தருவன் ப்ரியலங்க இலங்கை அணி சார்பாக தனது இரண்டாவது கோலை அடித்து இலங்கை அணியை 3 கோல்களால் முன்னிலைக்கு அழைத்து சென்றார்.

எனினும் இரண்டாம் பாதியில் சிறந்த விளையாட்டை வெளிக்காட்டிய ஹொங்கொங் அணி அதற்கான பலனை 54 ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொண்டது. பிலிக்ஸ் சி ஹிம் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிடாமல் கோல் அடித்தார்.

ஆசிய விளையாட்டு விழா நீச்சலில் இலங்கை கடைசி நேரத்தில் தகுதி நீக்கம்

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங்கில் இடம்பெற்றுவரும் 18 ஆவது ஆசிய…

போட்டியை விட்டுக்கொடுக்காத இலங்கை அணி 55 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. இலங்கை அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைக்கப்பெற லஹிரு கிஹான் மூலம் தமது 4 ஆவது கோலை அடித்தது. இதன் மூலம் 2018 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

முழு நேரம்: இலங்கை 4 – 1 ஹொங்கொங்

இலங்கை அணி அடுத்து 26 ஆம் திகதி இந்தோனேஷிய அணியை சந்திக்கவுள்ளதுடன், 28 ஆம் திகதி ஆசிய ஜாம்பவானான இந்திய அணியுடன் மோதவுள்ளது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க