லாஹூர் T-20 அணிக்கான பரிந்துரை விளையாட்டு அமைச்சரால் நிராகரிப்பு

775
SL Sports Ministry

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் T-20 சர்வதேச போட்டிகள் மற்றும் லாஹூரில் நடைபெறவுள்ள ஒரு T-20 போட்டிக்கு வெவ்வேறு இலங்கை அணிகளை தேர்வு செய்யும் கோரிக்கையை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு நிராகரித்துள்ளது. இந்த தகவலை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர Cricbuzz இணையத்தளத்திற்கு புதனன்று (18) உறுதி செய்துள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்த கோரிக்கையை முன்வைத்ததாக ஜயசேகர Cricbuzz க்கு தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது ஆடிவரும் இலங்கை ஒரு நாள் குழாமில் மலிங்க சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலகு வெற்றியுடன் இலங்கையுடனான ஒரு நாள் தொடர் பாகிஸ்தான் வசம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு…

ஐக்கிய அரபு இராச்சிய போட்டிகளுக்கு மற்றும் லாஹூரின் ஒரு போட்டிக்கு என இரண்டு அணிகள் இருக்க வேண்டும் என்று லசித் என்னிடம் கூறினார். ஆனால் அது சாத்தியமற்றது. குறிப்பிட்ட போட்டிகளுக்கு என்று வீரர்களை தேர்வு செய்வது நியாயமற்றது என்று ஜயசேகர Cricbuzz க்கு தெரிவித்துள்ளார்.

தற்போதைய இரு தரப்பு போட்டித் தொடரின் கடைசிப் போட்டிக்காக லாஹூருக்கு பயணிப்பது குறித்து தமது தயக்கத்தை வெளியிடும் வகையில் 40 ஒப்பந்த வீரர்களும் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு கடிதம் ஒன்றை வழங்கி இருந்தனர். எனினும், இந்த மூன்று போட்டிகளுக்கும் ஒரே அணியே தேர்வு செய்யப்படும் என்று சுமதிபால Cricbuzz க்கு குறிப்பிட்டிருந்தார். இதன்படி லாஹூர் போட்டியை புறக்கணிக்கும் வீரர்கள் ஒட்டு மொத்த T-20  தொடரிலும் ஆடும் தகுதியை இழந்துவிடுகின்றனர்.   

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து விளையாட்டுகளுக்குமான அணிகளுக்கு இறுதியான ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் விளையாட்டு அமைச்சரிடமே உள்ளது. இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த முடிவுக்கு ஆதரவு அளித்திருக்கும் நிலையில் லாஹூர் போட்டியை புறக்கணிப்பது தொடர்பில் வீரர்களுக்கு சிறிய தேர்வு மாத்திரமே உள்ளது.

இலங்கை அணியின் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரு T-20 போட்டிகளும் அபூதாபியில் நடைபெறவிருப்பதோடு தொடர்ந்து கடைசிப் போட்டியை லாஹூரில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் .சி.சியிடம் இருந்து அனைத்து அனுமதிகளை பெற்றுவிட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை என்னிடம் அறிவித்துள்ளது. அரச தலைவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) உறுதி அளித்துள்ளது. எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். நான் கூட லாஹூர் போட்டியை பார்க்கச் செல்ல விரும்புகிறேன் என்று ஜயசேகர குறிப்பிட்டார்.

லாஹூர் பயணிப்பதற்கு தயக்கம் காட்டும் ஒரே வீரர் மாலிங்கவல்ல. இலங்கை ஒருநாள் அணித் தலைவர் உபுல் தரங்க உள்ளிட்ட மேலும் பல வீரர்களும் அங்கு செல்வதற்கு தமது விருப்பமின்மையை வெளியிட்டுள்ளனர்.  

தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆடும் ஒரு நாள் குழாத்தில் இருக்கும் திசர பெரேரா தவிர பெரும்பாலான வீரர்கள் லாஹூர் பயணிப்பதற்கு தமது விருப்பமின்மையை வெளியிட்டிருந்தனர். எவ்வாறாயினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்ட பின்னர் ஏழு வீரர்கள் லாஹூர் பயணிக்க இணங்கியுள்ளனர்.

இலங்கை ‘A’ அணியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக்க மற்றும் வினின்து ஹசரங்கவுடன் தற்போது கொழும்பு திரும்பி இருக்கும் T-20 போட்டிகளில் இலங்கை அணிக்கு தொடர்ச்சியாக ஆடும் டில்ஷான் முனவீர, அஷான் பிரயன்ஜன் மற்றும் இசுரு உதான ஆகிய வீரர்கள் லாஹூர் செல்ல விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தானுடனான T-20 தொடரில் இருந்து விலகும் உபுல் தரங்க

இந்த மாத இறுதியில் பாகிஸ்தானின் லாஹூர் நகரில் நடைபெற ஏற்பாடு..

இலங்கை கிரிக்கெட் சபையின் பல அதிகாரிகளும் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருப்பதோடு ஒக்டோபர் 20ஆம் திகதி இலங்கை குழாமை அறிவிக்கும் முன்னர் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளனர்.   

இதேவேளை, இலங்கை அணியின் உதவிப் பணியாளர்கள் இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்பதில் தமது திருப்தியை வெளியிட்டிருப்பதாக தெரியவருகிறது. தலைமை பயிற்சியாளர் நிக் போதாஸ் சுற்றுப் பயணம் குறித்து சில கவலைகளை வெளியிட்டுள்ளார்.  

லாஹூரில் 2009 மார்ச் மாதம் இலங்கை அணியினர் சென்ற பஸ் வண்டி மீது நடாத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் ஒருசில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளே இடம்பெற்றுள்ளன. எனினும் லாஹூரில் பாகிஸ்தான் சுப்பர் லீக் 2 இன் இறுதிப் போட்டி மற்றும் உலக பதினொருவர் அணிக்கு எதிரான மூன்று T-20 போட்டிகள் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகளை நடாத்துவதற்கான வாய்ப்பு வலுவடைந்துள்ளது

>> மேலும் பல சுவையான கிரிக்கெட் செய்திகளைப் பார்வையிட <<