எமக்கு சிறந்த ஆரம்பம் மாத்திரம் போதாது – மிக்கி ஆத்தர்

75

தலைமைப் பயிற்சியாளரான மிக்கி ஆத்தரின் ஆளுகையில் இலங்கை கிரிக்கெட் அணி முழுமையாக வந்த பின்னர், இலங்கை விளையாடும் முதல் சர்வதேச தொடராக இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான T20 தொடர் அமைகின்றது. 

இந்தியாவுடனான 3ஆவது டி20யிலிருந்து இசுரு உதான விலகல்

இந்தியாவுக்கு எதிராக நாளை (10) நடைபெறவுள்ள ………

இந்த T20 தொடரின் முதல் போட்டி குவஹாத்தியில் மைதான ஈரலிப்பு காரணமாக கைவிடப்பட, இந்தூரில் இடம்பெற்ற இரண்டாவது  போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் தோல்வியினைத் தழுவியது. 

இலங்கை அணியின் தோல்வி காரணமாக இந்திய கிரிக்கெட் அணி  இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. 

இவ்வாறான நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து மிக்கி ஆத்தர் தனது கருத்துக்களை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்திருந்தார். 

T20 போட்டிகளில் இலங்கை அணியின் தோல்விக்கு பிரதான காரணமாக இலங்கை வீரர்களின் துடுப்பாட்டத்தை குறிப்பிட்ட மிக்கி ஆத்தர், இலங்கை வீரர்கள் தாம் காட்டும் ஆரம்பத்தினை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்ததோடு யாராவது ஒரு துடுப்பாட்ட வீரர் இலங்கை அணிக்காக சிறந்த துடுப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். 

”எங்களது துடுப்பாட்ட வீரர்கள் சிலர் சிறந்த ஆரம்பத்தைப் பெற்ற போதிலும், அந்த ஆரம்பம் மட்டும் போதாது.”

”எங்களுக்காக யாராவது ஒரு வீரர் 60 அல்லது 70 அல்லது 80 ஓட்டங்களைப் பெற வேண்டும். அப்போதே, எங்களுக்கு சிறப்பான பயணம் ஒன்றினைத் தொடர முடியும். இது (இலங்கை அணி) அனுபவம் குறைந்த துடுப்பாட்டத் தொகுதியாக இருக்கின்றது. எமது சராசரி என்னவோ அதனைப் பாருங்கள், குறித்த சராசரியினையே நாம் கடந்த இரவில் பெற்றிருக்கின்றோம்.” 

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியினை முன்னேற்ற பயிற்சியாளராக தான் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருப்பது பற்றியும் மிக்கி ஆத்தர் கருத்து வெளியிட்டிருந்தார்.

”பயிற்சியாளர் குழாத்தினைச் சேர்ந்தவர்களாகவும், வீரர்களாகவும் நாம் போட்டித் திட்டங்களில் மிகவும் கடுமையான வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது. அதோடு, பெரிய கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில் அவதானமாக இருக்க வேண்டி இருக்கின்றது. நடைபெற்ற போட்டியில் நாங்கள் 49 பந்துகளுக்கு (Dot Balls) ஓட்டங்கள் எதனையும் பெறவில்லை என்று நினைக்கின்றேன். ஒரு சிறந்த அணி 25 பந்துகளுக்கே பொதுவாக ஓட்டங்கள் பெறாமல் இருக்கும். இப்படியான விடயங்களிலேயே நாம் இன்னும் வேலை செய்ய வேண்டி இருக்கின்றது.”

இன்னும் கதைத்திருந்த மிக்கி ஆத்தர் இந்திய அணிக்கு இரண்டாவது போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி போட்டி முழுவதும் கவனத்துடன் செயற்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். 

இலங்கை – ஜிம்பாப்வே இடையிலான டெஸ்ட் இம்மாத இறுதியில்

தற்போது இந்தியாவுடன் T20 தொடரில் ஆடிவரும் ,…..

”எதிர்பார்த்த நேரத்திற்குள் இலங்கை கிரிக்கெட் அணி நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான போட்டி அவதானத்தினையே வெளிப்படுத்தியிருந்தது.”  

“நீங்கள் எங்கள் வீரர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்களிடம் ஒரு சிறப்பான தன்மை இருக்கின்றது. அதாவது, அவர்களிடம் அனைத்துவிதமான திறமைகளும் இருக்கின்றது. ஆனால், அவர்களுக்கு அடுத்த துடுப்பாட்ட வீரருக்கு வாய்ப்பினைக் கொடுப்பது சிறிய கஷ்டம். உங்களுக்கு அடுத்த துடுப்பாட்ட வீரருக்கு வாய்ப்பினை கொடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் பந்தினை அடிக்க முற்படுவீர்கள். இப்படியாக நீங்கள் செய்யும் போது இந்தியா உங்களை அழுத்தத்திற்குள் உள்ளாக்கி தவறுகளையும் செய்ய வைத்திருந்தது.” என்றார். 

தவறுகள் செய்கின்ற போதிலும், மிக்கி ஆத்தர் இலங்கை கிரிக்கெட் அணி மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 

”இலங்கை அணியினைப் பொறுத்தவரை இது இளம் வீரர்களுடன் உருவாக்கப்பட்ட ஒரு தொகுதியாக இருக்கின்றது. இந்த தொகுதி மிகவும் திறமை கொண்டதாக காணப்படுகின்றது.”

இலங்கை – இந்திய அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டி நாளை (10) புனே நகரில் இடம்பெறுகின்றது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<