பாகிஸ்தான் ‘ஏ’ அணி 120 ஓட்டங்கள் முன்னிலையில்

1049
Udara and Roshen hit half-centuries for Sri Lanka ‘A’

இலங்கை ‘ஏ’ இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. அதில் பாகிஸ்தான் ‘ஏ’ அணியோடு விளையாடிய 4 நாட்கள் கொண்ட 1ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. தற்போது இலங்கை ‘ஏ’ அணி பாகிஸ்தான் ‘ஏ’ அணியோடு 4 நாட்கள் கொண்ட 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது.

இந்தப் போட்டி நேற்று வர்செஸ்டர் மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கைஅணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை ‘ஏ’  அணி 250/10 (69.5)

ரொஷேன் சில்வா – 57
உதார ஜயசுந்தர – 53
அஷான் பிரியன்ஜன் – 36
நிரோஷன் திக்வெல்ல – 35
மிர் ஹம்சா – 62/4
ஹசன் அலி  – 70/3

பாகிஸ்தான் ‘ஏ’ அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 370 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சவுத் ஷகீல் – 86
முஹமத் ஹசன் – 57*
முஹமத் நவாஸ் – 52
சதப் கான் – 48
ஜாஹிட் அலி – 43
தனஞ்ஜய டி சில்வா – 28/2
விஷ்வ பெர்னாண்டோ – 73/2

பாகிஸ்தான் ‘ஏ’ அணி 3 விக்கட்கள் கையிருப்பில்  இருக்க 120 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரவுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்