ஜோன் டாபர்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பம்

128
Young Athletes to be presented with certificates of achievement at the Junior Tarbet

இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஒழுங்கு செய்யும் 2017ஆம் ஆண்டுக்கான சார் ஜோன் டாபர்ட் பாடசாலை மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன.

இந்த சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அகில இலங்கை ரீதியில் 7000 க்கும் அதிகமான மெய்வலுனர் வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளதொடு, போட்டிகள் மூன்று சுற்றுக்களாக நடைபெற உள்ளன.

ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை குழாமில் 22 பேர்

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ள..

எதிர்காலத்தில் சிறந்த மெய்வல்லுனர் வீரர்களை உருவாக்கும் நோக்கிலேயே இப்போட்டிகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், முதலாவது கட்டம் பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கடந்த ஜூன் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தன. வட மத்திய மற்றும் மேல் மாகாணங்களை சேர்ந்த பாடசாலை மெய்வல்லுனர் வீர வீராங்கனைகள் இதில் பங்குபற்றினர்.

இரண்டாம் கட்டப் போட்டிகள் ஜூன் 30ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஹங்வெல்ல ரோயல் கல்லூரியில் நடைபெறவுள்ள நிலையில், தென் மற்றும் மேல் மாகாணங்களை சேர்ந்த மெய்வல்லுனர் வீர வீராங்கனைகள் அதில் பங்குபற்றவுள்ளனர்.

மூன்றாவதும் இறுதியுமான கட்டப் போட்டிகள் நாவலப்பிடிய, ஜயதிலக்க மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்த இறுதிக் கட்டப் போட்டிகளுக்காக ஊவா, சபரகமுவ மற்றும் மத்திய மாகாண பாடசாலைகளை சேர்ந்த மெய்வல்லுனர் வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

இளையோருக்கான சார் ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் போட்டிகள் அனைத்தும் 12,13,14 மற்றும் 15 வயதின் கீழ் பிரிவுகளில் நடைபெறவுள்ள அதேநேரம், இறுதிப் போட்டிகள் கண்டி போகம்பர மைதானத்தில் நடைபெறவுள்ளன.

அத்துடன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 16, 18 மற்றும் 20 வயதின் கீழ் பிரிவினர் பங்கு கொள்ளும் மூத்தோருக்கான மெய்வல்லுனர் போட்டிகள் எதிர்வரும் ஜூலை நான்காம் திகதி முதல் ஆறாம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளன.

இனிதே நிறைவுற்ற இவ்வருடத்திற்கான ஒலிம்பிக் தின நிகழ்வுகள்

ஒவ்வொரு வருடமும் ஜூன் 23ஆம் திகதியில் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது…

இப்போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் செயலாளர் திரு. வெதகெதர, ”திறமைகளை வெளிப்படுத்தும் மெய்வல்லுனர் வீர வீராங்கனைகளுக்கு அவர்கள் வெளிப்படுத்தும் திறமைகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. வழங்கப்படும் இந்த சான்றிதழ்கள், அவர்கள் வெளிப்படுத்திய திறமைகளுக்கு மதிப்பு வாய்ந்த அங்கீகாரமாக இருக்கும். அதேவேளை எதிர்காலத்தில் அவர்களுக்கு விருப்பமான வேறு போட்டிகளில் பங்குபற்றும் பொழுது இந்த சான்றிதழ் அங்கீகாரம் பெற்ற ஆவணமாக கருதப்படும்” என்று தெரிவித்தார்.

இப்போட்டிகளுக்கு அனுசரணை வழங்கும் வரையறுக்கப்பட்ட சிலோன் பிஸ்கட் தனியார் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் நிபுல் டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ”இந்நிகழ்வின் ஒரு பங்காளராக இருப்பது குறித்து நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம். அத்துடன், ரிட்ஸ்பரி சார்பாக இந்த இளம் வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களின் சிறந்த திறமைகள் வெளிக்கொண்டு வருவதற்கு அனுசரணை வழங்குவதில் பெருமை கொள்கின்றோம்” எனத் தெரிவித்தார்.