பந்துவீச்சில் மிரட்டிய அந்தோனியார், றிச்மண்ட கல்லூரி அணிகள்

74

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவு – 1  பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இரண்டு நாட்கள் கொண்ட முதல் தர கிரிக்கெட் தொடரில் இன்று (17) இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

அரைச் சதங்கள் மூன்றுடன் ஆதிக்கம் செலுத்திய மலியதேவ கல்லூரி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்கு……

இதில் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரிக்கு எதிரான போட்டியில் திலும் சுதீரவின் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் றிச்மண்ட கல்லூரி அணியும், கல்ஹார சேனாரத்ன மற்றும் நிம்னக ஜயதிலக்கவின் 5 விக்கெட்டுக்கள் உதவியுடன் மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரிக்கு எதிரான போட்டியில் கண்டி புனித அந்தோனியார் கல்லூரி அணியும் முன்னிலை பெற்றன.

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை எதிர் றிச்மண்ட் கல்லூரி, காலி

வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று (16) ஆரம்பமாகிய இப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அந்தோனியார் கல்லூரி அணியினர், றிச்மண்ட் அணியின் பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 66 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.  

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடிய றிச்மண்ட் கல்லூரி அணி, தவீஷ அபிஷேக் ஆட்டமிழக்காது பெற்ற 74 ஓட்டங்கள் உதவியுடன் 4 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.  

இதன்படி, 102 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பெடுத்தாடிய புனித அந்தோனியார் கல்லூரி அணியினர் 87 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

தேசிய அணி வீரர்களின் பங்களிப்போடு மாஸ் யுனிச்செலா, ஹேய்லஸ் அணிகளுக்கு வெற்றி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு பிரிவு….

முதல் இன்னிங்ஸில் வத்தளை அந்தோனியார் கல்லூரி அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இடதுகை சுழற்பந்து வீச்சாளரான திலும் சதீர, 2ஆவது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அணிக்கு அதிக கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற றிச்மண்ட் கல்லூரி அதற்கான புள்ளிகளை பெற்றுக் கெண்டது.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 66/10 (30.5) – அரின்த பசிந்து 19, அம்ஷி டி சில்வா 3/14, திலும் சதீர 4/23, சுகீத் நிம்னத 2/12

றிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 168/4d (20) – தவீஷ அபிஷேக் 74*, ஆதித்ய சிறிவர்தன 33, திலும் சுதீர 22

புனித அந்தோனியார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 87/6 (45) – பெதும் விஹங்க 24, கவிஷ்க துலன்ஜன 24, திலும் சுதீர 3/33, சமத் தில்சர 2/19

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.  


புனித செபெஸ்டியன் கல்லூரி, மொறட்டுவை எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி

மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புனித செபெஸ்டியன் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி அவ்வணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய துனித் ஜயதுங்க 77 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் வலதுகை சுழற்பந்து வீச்சாளரான கல்ஹார சேனாரத்ன 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை அந்தோனியார் கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அந்தோனியார் கல்லூரி அணி, நவோத்ய விஜயகுமாரவின் அரைச் சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 29 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரி அணியினர், எதிரணியின் அபார பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 78 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பந்துவீசசில் அந்தோனியோர் கல்லூரி அணிக்காக இடதுகை சுழற்பந்து வீச்சாளரான நிம்னக ஜயதிலக்க 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார்.

எனினும், அந்தோனியார் கல்லூரிக்கு 49 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், போதியளவு வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செபெஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 178/10 (54.4) – துனித் ஜயதுங்க 77, சுகித பிரசன்ன 36, நுவனிந்து பெர்னாண்டோ 21, கல்ஹார சேனாரத்ன 5/58, அசித வன்னியநாயக்க 2/27, நிம்னக ஜயதிலக்க 2/44

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 207/7d (73) – நவோத்ய விஜயகுமார 53, கிஹான் அச்சித 30, தயான் பங்கஜா 34, கல்ஹார சேனாரத்ன 22, தாஷிக் பெரேரா 2/33, ததுல டி சில்வா 2/25

புனித செபெஸ்டியன் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 78/10 (26.4) – வினூஜ ரணசிங்க 29, லஹிரு பெர்னாண்டோ 22*, சசித் ஹிருதுக 2/06, நிம்னக ஜயதிலக்க 5/32, கல்ஹார சேனாரத்ன 3/26

முடிவு போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.