விஷ்வ சதுரங்க மற்றும் டிலங்க மதுரங்கவின் அபார துடுப்பாட்டம் மற்றும் கௌமல் நாணயக்கரவின் அதிரடி பந்து வீச்சின் மூலமும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வெனப்புவ

முதல் நாளாக D குழுவில் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி கதிரான கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பண்டாரநாயக்க கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த வகையில் அவ்வணி சசிரி அதிகாரியின் 58 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பதிவு செய்தது. சிறப்பாக பந்து வீசிய நிபுன் தன்ஞ்சய 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜோசப் வாஸ் கல்லூரி, அறோஷ மதுஷானின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலான் பிரதீப ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ஓட்டங்களை பெற்று 69 ஓட்டங்களால் பின்னிலையடைந்த நிலையில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (முதல் இன்னிங்ஸ்): 158 (57.5) – சசிரி அதிகாரி 58, சிசித மதநாயக்க 32, நிபுன் தனஞ்சய 5/45, ஷெஹார ரணதுங்க 2/49

புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னபுவ (முதல் இன்னிங்ஸ்): 89/9 (39) –  திலான் பிரதீப 30*, கிரிஷான் அப்புஹாமி 18, அறோஷ மதுஷான் 5/26


தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய எதிர் புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை

தர்மபால கல்லூரி பெற்ற 182 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய வத்தளை, அந்தோனியர் கல்லூரி அவிஷ்க தரிந்து பெற்ற 143 ஓட்டங்களின் உதவியுடன் முதல் இன்னிங்சுக்காக 336 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு 154 ஓட்டங்களால் முதல் இன்னிங்க்சில் முன்னிலை வகித்தது. ஓட்டங்களை மட்டுப்படுத்திய சமிந்து சமரசிங்க 94 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து, 154 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய தர்மபால கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 160 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது. சிறப்பாக துடுப்பாடிய அவிஷ்க ஹசரிந்த 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (முதல் இன்னிங்ஸ்): 182 (36.3) – துலாஜ் எகொடகே 44, தரிந்து சந்தருவன் 26, சந்த்ர கவீஷ 3/20, ஷனில் நிதுஷ 3/22

புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை (முதல் இன்னிங்ஸ்): 336 (108.2) – அவிஷ்க தரிந்து 143, கவிந்து மதுக 70, செனத் ஜோயல் 26, யசிந்து ரவீஷ 27, சமிந்து சமரசிங்க 4/94, தில்ஷான் டி சில்வா 2/102

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (இரண்டாம் இன்னிங்ஸ்): 160/5 (36) – அவிஷ்க ஹசரிந்த 78, கன்ஷ்ச்க ஜயசுந்தர 34*, கவிந்து மதுப 2/32, ரஷ்மிக்க மேவான் 2/39

போட்டி முடிவு: புனித அந்தோனியர் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை பெற்றுக்கொண்டது.


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் இசிபதன கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி அஸ்கிரிய மைதானத்தில் ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சிறப்பாக துடுப்பாடிய பூர்ண வனசேகற 52 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார். அதேநேரம் தியாகராஜா பானுகோபன் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார். லிசுற வீனத் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 238/7 (79) – பூர்ண வனசேகற 52, சானுக்க பண்டார 46, ஹிமங்க சூரியபொல 34, தியாகராஜா பானுகோபன் 40*, ஹசித போயகொட 21, லிசுற வீனத் 3/53, லஹிரு வீரரத்ன 2/34


றோயல் கல்லூரி, கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவ

றோயல் கல்லூரி பெற்றுக்கொண்ட 137 ஓட்டங்களிக்கு பதிலாக தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, விஷ்வ சதுரங்க மற்றும் திலங்க மதுரங்கவின் அதிரடி சதங்களுடன் முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, 185 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

சிறப்பாக துடுப்பாடிய விஷ்வ சதுரங்க 104 ஓட்டங்களையும், திலங்க மதுரங்க ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களையும் அணி சார்பாக பெற்றுக்கொண்டனர். அதேநேரம், ஹிமேஷ் ராமநாயக்க 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மிகவும் நெருக்கடியான நிலையில் களமிறங்கிய றோயல் கல்லூரி, கூடிய அழுத்தத்தின் மத்தியில் 45.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

இரண்டாவது இன்னிங்க்சில் சிறப்பாக பந்து வீசிய கௌமல் நாணயக்கர 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 137/8d (34) – பசிந்து சூரியபண்டார 47, ரோணுக ஜயவர்தன 46, லசிந்து நாணயக்கார 26, கௌமல் நாணயக்கர 3/18, திலான் நிமேஷ் 3/33

பிரின்ஸ் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 322/9d (57.5) – விஷ்வ சதுரங்க 104, டிலங்க மதுரங்க 101*, திலான் நிமேஷ் 38, அவிந்து பெர்னாண்டோ 39, சதுன் பெர்னாண்டோ 21, ஹிமேஷ் ராமநாயக்க 5/83, ஹெலித விதானகே 3/50

றோயல் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 131 (45.4) – கவிந்து மதரசிங்க 40, பசிந்து சூரியபண்டார 23, ஹெலித விதானகே 23, கௌமல் நாணயக்கர 4/25, சவிந்து பீரிஸ் 2/58

போட்டி முடிவு: இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்களால் பிரின்ஸ் வேல்ஸ் கல்லூரிக்கு வெற்றி


றிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

றிச்மண்ட் கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட 321 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய கண்டி, தர்மராஜ கல்லூரி திலங்க உதேஷன மற்றும் சந்துன் மெண்டிஸின் அதிரடி பந்து வீச்சில் 151 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து 170 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில், மீண்டும் துடுப்பாட களமிறங்கிய அவ்வணி 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 7 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. சிறப்பாக துடுப்பாடிய தேஷான் குணசிங்க 62 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம் பந்து வீச்சில் அதிரடி காட்டிய சந்துன் மெண்டிஸ் 65 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்டங்களை மட்டுப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து வெற்றி பெற இலகுவான 8 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய றிச்மண்ட் கல்லூரி விக்கெட் இழப்பின்றி 3.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

றிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 321 (63.5) – அவிந்து தீக்ஷன 122, தனஞ்சய லக்ஷான் 61, சம்மிகர ஹேவகே  25, வினுஜ கிரியல்ல 24, கிஹான் விதாரண 8/124, தேஷான் குணசிங்க 2/53

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 151 (42.3) – சசிந்த சேனாநாயக்க 51, திலங்க உதேஷன 5/37, சந்துன் மெண்டிஸ் 4/53, அவிந்து தீக்ஷன 1/27

தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்): 177 (56.2) – தேஷான் குணசிங்க 62, நிவந்த ஹேரத் 32, சந்துன் மெண்டிஸ் 6/65

றிச்மன்ட் கல்லூரி, காலி (இரண்டாம் இன்னிங்ஸ்): 8/0 (3.3)

போட்டி முடிவு: 10 விக்கெட்டுகளால் றிச்மண்ட் கல்லூரிக்கு வெற்றி