இன்று நடைபெற்ற றிச்மண்ட் கல்லூரி, காலி மற்றும் தர்மராஜ கல்லூரி, கண்டி அணிகளுக்கிடையிலான போட்டியில் அவிந்து தீக்ஷன மற்றும் சந்துன் மெண்டிஸின்  சிறப்பான ஆட்டத்தின் மூலம் றிச்மண்ட் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றியை சுவீகரித்தது.

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய எதிர் புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை

இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்கள் கொண்ட போட்டி பன்னிபிட்டிய, தர்மபால கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது.  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மபால கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி, 36.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய துலாஜ் எகொடகே 44 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார். சந்திர கவீஷ மற்றும் ஷனில் நிதுஷ ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனையடுத்து, தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய அந்தோனியர் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேரம் நிறைவின் போது 43 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் 172 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் அவிஷ்க தரிந்து ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார். அந்தவகையில் அந்தோனியர் கல்லூரி 5 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (முதல் இன்னிங்ஸ்): 167 (36.3) – துலாஜ் எகொடகே 44, தரிந்து சந்தருவன் 26, சந்திர கவீஷ 3/20, ஷனில் நிதுஷ 3/22

புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை (முதல் இன்னிங்ஸ்): 172/5 (43) – அவிஷ்க தரிந்து 73*, செனத் ஜோயல் 26, யசிந்து ரவீஷ 27


அனுராதாபுரம் மத்திய கல்லூரி எதிர் மொறட்டு கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்த போட்டி இறுதி நாளான இன்று வெற்றி தோல்வியின்றி முடிவுற்ற போதிலும் அனுராதபுரம் மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை தனதாக்கிக் கொண்டது.

66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இன்றைய தினம் களமிறங்கிய மொறட்டு கல்லூரி முதல் இன்னின்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய செஹான் ஜீவந்த 77 ஓட்டங்களை பதிவு செய்தார். அதே நேரம் ஓட்டங்களை மட்டுப்படுத்திய தனஞ்சய தம்மித 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய அனுராதபுரம் மத்திய கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 169 ஒட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

அனுராதபுரம் மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 270/9d (70.2) – சச்சின் ரன்திம 93, தில்ஷான் லக்க்ஷித 56*, சித்ரக ஹிரந்த 32, ரவிந்த பிரபாஷ்வர 24, ரவிந்து செத்சர 23, சித்தும் நிலுமிந்த 21, ரஷான் கவிஷ்க 4/93, ஜனித் செவ்மித் 3/48

மொறட்டு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 261 (86.2) – ஷெஹான் ஜீவந்த 77, மதுஷான் துல்ஷன் 53, ஷீடா சொய்சா 35, ஜனித் செவ்மித் 26, தனஞ்சய தம்மித 5/48, ஸ்ரீ சந்திரரத்ன 5/79

அனுராதபுரம் மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 169/7 (35) – சச்சின் ரன்திம 34, ரவிந்து செத்சர 36, சதரு மதுஷான் 21, விஷ்மித தனஞ்சய 23*, ரஷான் கவிஷ்க 3/72, அஷான் அத்திடிய 2/26

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை அனுராதபுரம் மத்திய கல்லூரி பெற்றுக்கொண்டது.


றோயல் கல்லூரி, கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவ

B குழுவில் இடம் பெற்றிருந்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி கொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் வேல்ஸ் கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கிய றோயல் கல்லூரி 34 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றிந்த வேளை ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. சிறப்பாக பந்து வீசிய கௌமல் நாணயக்கர மற்றும் திலான் நிமேஷ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனையடுத்து, முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய பிரின்ஸ் வேல்ஸ் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ஓட்டங்களை பெற்றிருந்தது. நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 137/8d (34) – பசிந்து சூரியபண்டார 47, ரோணுக்க ஜயவர்தன 46, லசிந்து நாணயக்கார 26, கௌமல் நாணயக்கர 3/18, திலான் நிமேஷ் 3/33

பிரின்ஸ் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 307/6 (53) – விஷ்வ சதுரங்க 104, டிலங்க மதுரங்க 87*, திலான் நிமேஷ் 38, அவிந்து  பெர்னாண்டோ 39, சதுன் பெர்னாண்டோ 21, ஹிமேஷ் ராமநாயக்க 5/75


றிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

றிச்மண்ட் கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட 321 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய கண்டி, தர்மராஜ கல்லூரி திலங்க உதேஷன மற்றும் சந்துன் மெண்டிஸின் அதிரடி பந்து வீச்சில் 151 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து 170 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில், மீண்டும் துடுப்பாட களமிறங்கிய அவ்வணி 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 7 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. சிறப்பாக துடுப்பாடிய தேஷான் குணசிங்க 62 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம் பந்து வீச்சில் அதிரடி காட்டிய சந்துன் மெண்டிஸ் 65 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்டங்களை மட்டுப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து வெற்றி பெற இலகுவான 8 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய றிச்மண்ட் கல்லூரி விக்கெட் இழப்பின்றி 3.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

றிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 321 (63.5) – அவிந்து தீக்ஷன 122, தனஞ்சய லக்ஷான் 61, சம்மிகர ஹேவகே  25, வினுஜ கிரியல்ல 24, கிஹான் விதாரண 8/124, தேஷான் குணசிங்க 2/53

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 151 (42.3) – சசிந்த சேனாநாயக்க 51, திலங்க உதேஷன 5/37, சந்துன் மெண்டிஸ் 4/53, அவிந்து தீக்ஷன 1/27

தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்): 177 (56.2) – தேஷான் குணசிங்க 62, நிவந்த ஹேரத் 32, சந்துன் மெண்டிஸ் 6/65

றிச்மன்ட் கல்லூரி, காலி (இரண்டாம் இன்னிங்ஸ்): 8/0 (3.3)

போட்டி முடிவு: 10 விக்கெட்டுகளால் றிச்மண்ட் கல்லூரிக்கு வெற்றி