அதிரடி பந்துவீச்சு மூலம் லும்பினி கல்லூரி இலகு வெற்றி

110

சிங்கர் அனுசரணையில் இடம்பெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகள் இன்று (03) நிறைவடைந்தன. எனினும் புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் றோயல் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி சீரற்ற காலநிலையால் 32.1 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சமநிலையில் முடிந்தது. எஞ்சிய இரண்டு போட்டிகளின் விபரம் வருமாறும்,

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் லும்பினி கல்லூரி, கொழும்பு

லும்புனி கல்லூரியின் அதிரடி பந்துவீச்சு மூலம் ஜனாதிபதி கல்லூரிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

சுழல் பந்துவீச்சு மூலம் இங்கிலாந்தை வீழ்த்த திட்டமிட்டுள்ள இலங்கை

ஒருநாள் மற்றும் T20 தொடர்களின் தோல்விகளை விடுத்து, டெஸ்ட் தொடர் என்ற வகையில் பார்க்கும் போது, இரண்டு அணிகளும்……

கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஜனாதிபதி  கல்லூரி 67 ஓட்டங்களுக்கே சுருண்டது. ரவிஷ்க விஜேசிறி 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த லும்பினி கல்லூரியாலும் 113 ஓட்டங்களையே பெற முடிந்தது. எனினும் ஜனாதிபதி கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸிலும் வெறுமனே 76 ஓட்டங்களுக்கு சுருண்டது. விஜேசிறி மீண்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பிரபாத் மதுசங்க 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 30 ஓட்ட வெற்றி இலக்கை லுப்பினி கல்லூரி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலகுவாக எட்டியது.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 67 (25.1) – இரங்க ஹஷான் 16, ரவிஷ்க விஜேசிறி 5/08, சிதும் திசாநாயக்க 2/18

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 113 (31.3) – சிவிந்து பிரபாஷன 39, துஷான பெர்னாண்டோ 22, பிரபாத் மதுஷங்க 22, கசுந்த மாலிந்த 3/16, தஷிக்க நிர்மால் 2/17, நுரான் பெரேரா 2/25

ஜனாதிபதி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 76 (25) – பிரபாத் மதுஷங்க 6/25, ரவிஷ்க விஜேசிறி 4/32

லும்பினி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 31/3 (3.3) – ரவிஷ்க விஜேசிறி 19, தஷிக்க நிர்மால் 2/11

முடிவு – லும்பினி கல்லூரி 7 விக்கெட்டுகளால் வெற்றி


தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய எதிர் மஹிந்த கல்லூரி, காலி

தர்மபால கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளினதும் நிதானமான ஆட்டம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.

இலங்கை கிரிக்கெட்டினால் 225 பாடசாலைகளுக்கு லெதர் பந்துகள் விநியோகம்

நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 225 பாடசாலைகளுக்கு 8 மில்லியன்…….

இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தர்மபால கல்லூரி முதல் இன்னிங்ஸில் 66.5 ஓவர்களில் 137 ஓட்டங்களை பெற்றதோடு மஹிந்த கல்லூரியும் மந்தமாக துடுப்பெடுத்தாடி 61 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்தது.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 137 (66.5) – சஞ்சன லங்கா 44, சமிந்து சமரசிங்க 23, குஷான் மதூஷ 6/51, கவீஷ விமுக்தி 2/20

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 168/6 (61) – வினுர துல்சர 61, ஹன்சக்க வலிஹிந்த 44, அஷேன் கண்டம்பி 26, டில்ஷான் டி சில்வா 3/26

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு