இறுதிப் போட்டியின் முதல் நாளில் புனித ஜோசப் வீரர்கள் ஆதிக்கம்

116

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெறும் 19 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு ஒன்று (டிவிஷன் – I)  பாடசாலை அணிகளுக்கான இரண்டு நாட்கள் கொண்ட “சிங்கர் கிண்ண” கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான (2017/18) இறுதிப் போட்டி இன்று (8) கொல்ட்ஸ் மைதானத்தில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையில்  ஆரம்பமாகியது.

மெண்டிஸின் சகலதுறை ஆட்டத்தால் இரண்டாவது முறை சம்பியனானது ரிச்மண்ட்

சதுன் மெண்டிஸின் அதிரடி பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தின் மூலம் புனித பேதுரு கல்லூரிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

தீர்மானமிக்க இந்த இறுதிப் போட்டியின் முதல் நாளுக்கான ஆட்டம் முழுவதிலும் புனித ஜோசப் கல்லூரி ஆதிக்கத்தினை காட்டியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் கல்லூரியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து, முதல் இன்னிங்சுக்காக 82.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வலுவான 300 ஓட்டங்களினை குவித்திருந்தனர்.

இதில் ஜோசப் கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பாக அணித்தலைவர் ஜெஹான் டேனியல் 142 பந்துகளுக்கு 86 ஓட்டங்களினை குவித்து சிறப்பாக செயற்பட்டிருந்தார். டேனியல் தனது துடுப்பாட்ட இன்னிங்சில் நான்கு அபார சிக்ஸர்களும், நான்கு பெளண்டரிகளினையும் விளாசியிருந்தார்.

மேலும், துனித் வெல்லால்கேயும் 42 ஓட்டங்களுடன் புனித ஜோசப் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தார். இவர்கள் தவிர ரெவான் கெல்லி (39) மற்றும் லக்ஷான் கமகே (35*) ஆகியோர் புனித ஜோசப் கல்லூரிக்கு துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஏனைய வீரர்களாக காணப்படுகின்றனர்.

மறுமுனையில் திரித்துவ கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் திசரு டில்ஷான் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததுடன், திரித்துவக் கல்லூரியின் அணித்தலைவர் ஹசித்த பொயகொட மற்றும் கவிஷ்க செனதீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

திரித்துவக் கல்லூரியுடனான இறுதிப் போட்டிக்கு புனித ஜோசப் கல்லூரி தகுதி

புனித ஜோசப் கல்லூரியின் உப தலைவர் நிபுன் சுமனசிங்கவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியோடு மஹாநாம கல்லூரியை வீழ்த்திய கொழும்பு புனித ஜோசப் கல்லூரி 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று (டிவிஷன் 1) தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த கண்டி திரித்துவக் கல்லூரி அணியினர் முதல் நாள் ஆட்ட நிறைவின் போது, 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றனர்.

இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தினை நோக்குகின்ற போது, இந்தப் போட்டி நாளைய இரண்டாம் நாளில் சமநிலை அடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருக்கின்றது. இதன்படி, முதல் இன்னிங்ஸை அடிப்படையாக வைத்தே இந்தப் பருவகாலத்திற்கான சிங்கர் கிண்ணத்தின் சம்பியன் யார்? என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.  

எனவே, ஆட்டத்தின் இரண்டாம் நாளில் (09) திரித்துவக் கல்லூரி அணியினர் புனித ஜோசப் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் (300) மொத்த ஓட்டங்களை தாண்ட வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றனர்.

முதல் நாள் போட்டியின் சுருக்கம்

Insert the score cards here

ஆட்டத்தின் இரண்டாம் மற்றும் இறுதி நாள் நாளை (8) தொடரும்