நவீன் குணவர்தனவின் அதிரடி பந்து வீச்சினால் தர்ஸ்டன் கல்லூரிக்கு 6 விக்கெட்டுகளால் வெற்றி

138
U19 Cricket - Feb 7th

இன்று மொத்தமாக நடைபெற்ற 8 போட்டிகளில் நான்கு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றதுடன், தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு மற்றும் புனித ஜோசப் வாஸ் கல்லூரி வெற்றியை சுவீகரித்தன. அதே நேரம் இரண்டு போட்டிகள் இரண்டாம் நாளாக நாளை தொடர்ந்தும் நடைபெறவுள்ளன.

றிச்மன்ட் கல்லூரி, காலி எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி    

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினம் கண்டி, லேக் வீவ் மைதானத்தில் ஆரம்பித்த நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற றிச்மண்ட் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி அவிந்து தீக்ஷன மற்றும் தனஞ்சய லக்ஷான்  ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சிறப்பாக துடுப்பாடிய அவிந்து தீக்ஷன 122 ஓட்டங்களையும் தனஞ்சய லக்ஷான்  61 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். அதே நேரம் ஓட்டங்களை மட்டுப்படுத்திய கிஹான் விதாரண 124 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய தர்மராஜ கல்லூரி, 7 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களை மாத்திரமே பெற்று நெருக்கடியான சூழ்நிலையில் நிலையில் உள்ளது. சிறப்பாக பந்துவீசிய திலங்க உதேஷன 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

றிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 321 (63.5) – அவிந்து தீக்ஷன 122, தனஞ்சய லக்ஷான் 61, சம்மிகர ஹேவகே 25, வினுஜ கிரியல்ல 24, கிஹான் விதாரண 8/124, தேஷான் குணசிங்க 2/53

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 84 / 7 (27) – திலங்க உதேஷன 4/20, சந்துன் மெண்டிஸ் 2/25


மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

கொழும்பு, வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மஹாநாம கல்லூரி முதல் இன்னிங்சில் 6௦ ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடையும் நிலையில் இருந்த போதும் இரண்டாம் இன்னிங்சில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி போட்டியினை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது.

மஹாநாம கல்லூரி சார்பாக இரண்டாவது இன்னிங்சுக்காக சிறப்பாக துடுப்பாடிய மலிந்து மதுரங்க மற்றும் ஹெஷான் ஹெட்டியாராச்சி  அரைச் சதம் கடந்து முறையே 71, 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு 209 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய வெஸ்லி கல்லூரி 86 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்:

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 60 (15.5) – பிஷான் மெண்டிஸ் 20, ருசிக்க தங்கல 5/38, சகுந்த லியனகே 3/0

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 153 (70.3) – ருசிக்க தங்கல 37, சமோத் அதுலமுதலாளி 28, ஜேசன் டி சில்வா 27, ஹஷான் சந்தீப 6/63

மஹாநாம கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்க்ஸ்): 302/8d (70.3) –  மலிந்து மதுரங்க 71, ஹெஷான் ஹெட்டியாராச்சி 64, பிஷான் மெண்டிஸ் 48, பத்தும் பொத்தேஜூ 42, கவிந்து முனசிங்க 28, முஹம்மத் உபைதுல்லா 3/61

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்க்ஸ்): 86/7 (29) – திசுரக அக்மீமன 22, ஹஷான் சந்தீப 5/49

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. வெஸ்லி கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி.


ஸாஹிரா கல்லூரி, கொழும்பு எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி  

கம்பளை, விக்ரமபாகு மைதானத்தில் இரண்டாம் நாளாக நடைபெற்ற போட்டியில் சாஹிரா கல்லூரி முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட 279 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய புனித சில்வெஸ்டர் கல்லூரி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய நதீர பாலசூரிய ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார். அதே நேரம் பந்துவீச்சில் முஹம்மத் மஹதி 72 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய சாஹிரா கல்லூரி விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்:

சாஹிரா கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 279 (63.4) – சஜித் சமீர 114, முஹம்மத் ஷாஹதுல்லா 50, மஞ்சித் ராஜபக்ஷ 3/48, மனுஜா பெரேரா 2/28, துசித் டி சொய்சா 2/45

புனித சில்வெஸ்டர் கல்லூரி,கண்டி (முதல் இன்னிங்ஸ்): 282/9d (107.4) – நதீர  பாலசூரிய 76*, கனிஷ்க ஜயசேகர 38, அபிஷேக் இசுரங்க 32, மஞ்சித் ராஜபக்ச 29, முஹம்மத் ரிசா 28, முஹம்மத் மஹதி 4/72, அஹமத் ஆதில் 3/13, ஹஷ்மி ஹொசைன் 2/38

சாஹிரா கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 32/0 (13)

போட்டி முடிவு : போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


அனுராதாபுரம் மத்திய கல்லூரி எதிர் மொறட்டு கல்லூரி

C குழுவில் முதல் சுற்றுக்காக இன்றைய தினம் ஆரம்பித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய அனுராதபுரம் மத்திய கல்லூரி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

சச்சின் ரந்திம மற்றும் தில்ஷான் லக்க்ஷித முறையே 93, 56 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். அதே நேரம் ஓட்டங்களை மட்டுப்படுத்திய ரஷான் கவிஷ்க 93 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய மொறட்டு கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் உள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

அனுராதபுரம் மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 270/9d (70.2) – சச்சின் ரந்திம 93, தில்ஷான் லக்க்ஷித 56*, சித்ரக ஹிரந்த 32, ரவிந்த பிரபாஷ்வர 24, ரவிந்து செத்சர 23, சித்தும் நிலுமிந்த 21, ரஷான் கவிஷ்க 4/93, ஜனித் செவ்மித் 3/48

மொறட்டு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 66/3 (24) – ஷீடா சொய்சா 35, மதுரங்க ஸ்ரீசந்திரரத்ன 3/16


ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

ஜனாதிபதி கல்லூரி முதல் இன்னிங்சுக்காக குவித்த 201 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி தனது சொந்த மண்ணில் தினெத் மதுராவலவின் அற்புதமான துடுப்பாட்டத்தின் மூலம் 342 ஓட்டங்களை பெற்று 141 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக்கொண்டது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜனாதிபதி கல்லூரி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போதிய நேரமின்மை காரணமாக ஆட்டம் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்:

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (முதல் இன்னிங்ஸ்): 201 (59.2) – P C விக்ரமசூரிய 57*, ஹஷான் பிரியதர்ஷன 26, கசுன் மலிங்க 31, கனிந்து தேவ்மின 28, ஹவின் பெரேரா 4/44, ஹரீன் குரே 2/47, ருச்சிர ஏக்கநாயக்க 2/27

புனித  ஜோசப் கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 342/6d (70.4) – தினெத் மதுராவல 102, தினெத் ஜயக்கொடி 68, ஷேவோன் பொன்சேகா 58*, பஹன் பெரேரா 45, அவிஷ்க பெர்னாண்டோ 34, கேமரூன் துருகே 20, P C விக்கிரமசூரிய 3/73

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (இரண்டாம் இன்னிங்ஸ்): 225/9 (66) – கனிந்து தேவ்மின 87, சலக பண்டார 24, தினெத் ஜயக்கொடி 2/65, ஹரின் குரே 3/48, நிபுன் சுமன்சிங்க 2/26

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. புனித ஜோசப் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


டி.எஸ் சேனநாயக்க கல்லூரி எதிர் குருகுல கல்லூரி, களனி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதல் இன்னிங்சில் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி பெற்ற 216 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய குருகுல கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்று 3 ஓட்டங்களால் பின்னிலை அடைந்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி 157 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது.

போட்டியின் சுருக்கம்:

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 216 (68.1) – விஹான் குணசேகர 104, பசிந்து சானக 30, டேனியல் கீதாஞ்சன 22*, லகிந்து அரோஷ  4/43, எம் டி நவீந்திர 4/37

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்): 213 (73.3) – அசிந்த மல்ஷான் 59, பத்தும் மகேஷ் 41, தேஷான் மலிந்த 25 , பிருதுவி ருசர 21, முத்தித லக்க்ஷான்  5/63, விஹான் குணசேகர 2/39

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 157/5 (52) – விஹான் குணசேகர 56, பசிந்து சானக 40*, டொரின் பிட்டிகல 29

போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. டி.எஸ்.சேனநாயக்க கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி.


டி மெசனொட் கல்லூரி கந்தான எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னபுவ

வென்னபுவ, ஆல்பர்ட் பீரிஸ் மைதானத்தில் இறுதி நாளாக இடம் பெற்ற இந்த போட்டி ஷெஹார ரணதுங்கவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் வென்னபுவ, புனித ஜோசப் வாஸ் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

அதே நேரம் பந்து வீச்சில் அதிரடி காட்டிய தனஞ்சய பெரேரா 55 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்தார்.

போட்டியின் சுருக்கம்:

டி மெசனொட் கல்லூரி, கந்தான (முதல் இன்னிங்ஸ்): 140 (41.4) – மிதில கீத் 30, சானக்க ப்ரிஷான் 2/21, ஷெஹார ரணதுங்க 2/21, தனஞ்சய பெரேரா 2/40

புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னபுவ (முதல் இன்னிங்ஸ்): 286 (64,3) ஷெஹார ரணதுங்க 95, அஞ்சன ருக்மால் 40, சந்தருவன் பெர்னாண்டோ 35, தனுஷ்க நிரஞ்சன 35, யோஹான் பீரிஸ் 31, மிதில கீத் 3/35, தினெத்  பெர்னாண்டோ 2/45, தேஷான் பெர்னாண்டோ 2/71

டி மெசனொட் கல்லூரி, கந்தான (இரண்டாம் இன்னிங்ஸ்): 203 (64.4) – ரோஷித செனவிரத்ன 51, பிரவீண் பொன்சேகா 30, இரோஷ் டி சில்வா 24, தனஞ்சய பெரேரா 8/55

புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னபுவ (இரண்டாம் இன்னிங்ஸ்): 58/2 (11) – சந்தருவன் பெர்னாண்டோ 25*

போட்டி முடிவு – புனித ஜோசப் வாஸ் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி.


நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு    

இவ்விரு அணிகளுகிடையிலான போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி நவீன் குணவர்தனவின் அதிரடி பந்து வீச்சின் மூலம் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்று 29 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. அந்த வகையில் இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய நாலந்த கல்லூரி நவீன் குணவர்தனவின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய நவீன் குணவர்தன இந்த போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து 53 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்தது. கசுன் அபேரத்ன ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார்.

போட்டியின் சுருக்கம்:

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 138 (40.2) – மலிங்க அமரசிங்க 34, கலன கதிரியாராச்சி 31*, கசுன் சந்தருவன் 21, சரண நாணயக்கார 5/51, நவீன் குணவர்தன 4/31

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 167 (58.3) – கசுன் அபேரத்ன 35, இமேஷ் விரங்க 34, நவோத் சமரகோன் 33, பிரகீஷ மென்டிஸ் 28, உமேக்ச டில்ஷான் 3/48, அசேல் குலதுங்க 2/33, கலன பெரேரா 2/34, மலிங்க அமரசிங்க 2/32

நாலந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 110 (40) – கசுன் சந்தருவன் 36, கலன கதிரியாராச்சி 27, நவீன் குணவர்தன 6/34 , ஜனுஷ்க பெர்னாண்டோ 3/30

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 82/4 (23.4) – கசுன் அபேரத்ன 48*, அசேல குலதுங்க 2/25, உமேக்ச டில்ஷான் 2/46

போட்டி முடிவு – தர்ஸ்டன் கல்லூரி 6 விக்கெட்டுகளால் வெற்றி.