பிரவீன் நிமேஷின் அதிரடி பந்து வீச்சினால் 10 விக்கெட்டுகளால் குருகுல கல்லூரிக்கு வெற்றி

163
SINGER U19 DIV I

களனி, குருகுல கல்லூரிக்கும் கண்டி, புனித சில்வஸ்டர் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற இந்த போட்டியில், பிரவீன் நிமேஷின் அதிரடி பந்து வீச்சின் மூலம் குருகுல கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் பிரவீன் நிமேஷின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்ட கண்டி சில்வஸ்டர் கல்லூரி 48 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய குருகுல கல்லூரி அசிந்த மல்ஷானின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 247 ஓட்டங்களை பெற்று 199 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

அதனை தொடர்ந்து, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக, குறித்த ஓட்ட இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய கண்டி சில்வஸ்டர் கல்லூரி, இறுதிவரை போராடி 204 ஓட்டங்களை மாத்திரமே பெற்று வெறும் 7 ஓட்டங்களை குருகுல கல்லூரிக்கு வெற்றி இலக்காக நியமித்தது. இரண்டாம் இன்னிங்சில சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மனுஜ பெரேரா 79 ஓட்டங்களை பதிவு செய்தார்.

எனினும், மீண்டுமொருமுறை அதிரடியாக பந்து வீசிய பிரவீன் நிமேஷ் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்டங்களை மட்டுப்படுத்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய குருகுல கல்லூரி, வெறும் நான்கு பந்துகளில் 8 ஓட்டங்களை விளாசி வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம் :

புனித சில்வஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 48 (30.3) – பிரவீன் நிமேஷ் 3/15, மலிந்து விதுரங்க 3/16

குருகுல கல்லூரி, களனி: 247 (56.3) – அசிந்த மல்ஷான் 69, தெஷான் மலிந்த 41, பிருதுவி ருசர 31, மனுஜ பெரேரா  4/65

புனித சில்வஸ்டர் கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்): 204 (96.2) – மனுஜ பெரேரா 79, மஞ்சித் ராஜபக்ச 28, பிரவீன் நிமேஷ் 4/62, H சமித் 2/21

குருகுல கல்லூரி, களனி (இரண்டாம் இன்னிங்ஸ்): 8/0 (0.4)

போட்டி முடிவு : களனி, குருக்குல கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி.