தினன்ஜய பிரேமரத்னவின் அதிரடி சதத்தால் மலியதேவ கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

199
U19 Cricket

19 வயதுக்கு உட்டபட்ட சிங்கர் கிண்ண டிவிஷன் I முதல் சுற்றுக்காக இன்றைய தினம் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் ஆரம்பித்த நிலையிலும், இரண்டாவது நாளாக நடைபெற்ற ஒரு போட்டியில் மலியதேவ கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த நிலையில் நிறைவுற்றது.

தர்மசோக கல்லூரி எதிர்புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி – முதலாம் நாள்

இவ்விரு கல்லூரிகளும் C குழுவில் முதல் சுற்றுக்காக மோதிக்கொண்ட இந்த போட்டியில் முதலாவதாக துடுப்பாடக் களமிறங்கிய தர்மசோக கல்லூரியை நிம்சார அதரகல்ல மற்றும் மனுஜ பெரேரா ஆகியோரின் நேர்த்தியான பந்து வீச்சில் 61 ஓவர்களுக்குள் 209 ஓட்டங்களுக்கு வீழ்த்தினர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவீஷ் குமார  60 ஓட்டங்களையும், கசுன் மதுரங்க 58 ஓட்டங்களையும் பெற்றதோடு ஓட்ட எண்ணிகையை 209 ஓட்டங்களுக்கு உயர்த்தினர், புனித சில்வெஸ்டர் கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய நிம்சார அதரகல்ல மற்றும் மனுஜ பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய புனித சில்வெஸ்டர் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 82 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்துள்ளது. மஞ்சித் ராஜ்பக்‌ஷ ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம் :

தர்மசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதல் இன்னிங்ஸ்): 209 (61) – கவீஷ் குமார 60, கசுன் மதுரங்க 58, தினுக தில்ஷான் 26, நிம்சார அதரகல்ல 3/38, மனுஜ பெரேரா 3/18, உசிந்து நிஸ்ஸங்க 2/17

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 82/4 (28) – மஞ்சித்  ராஜபக்ஷ 23*


அனுராதபுர மத்திய மகா வித்தியாலயம் எதிர் குருகுல கல்லூரி, களனி  – முதலாம் நாள்

C குழுவில், முதலாவது சுற்றுக்காக மோதிக்கொண்ட இவ்விரு கல்லூரிகளுக்கிடையிலான இந்த போட்டியில் முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அனுராதபுர மத்திய மகா வித்தியாலயம் சார்பாக H. சச்சின் 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் குருகுல கல்லூரி சார்பாக ப்ருத்திவி ருசர 4 விக்கெட்டுகளையும்பிரவீன் நிமேஷ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து துடுப்பாடக் களமிறங்கிய குருகுல கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது தேஷான் மலிந்த மற்றும் உதார ரவிந்து ஆகியோரின் அரை சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம் :

அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்): 169 (49.2) – எச் சச்சின் 69, தனஞ்சய ஷம்மிக 28, பிரவீண் நிமேஷ் 3/44, ப்ருத்திவி ருசர 4/38

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்): 209/6 (50) – தேஷான் மலிந்த 52, ப்ருத்திவி ருசர 28, தெனிர நயதரு 24, உதார ரவிந்து 57*, ரவிந்த பிரபாஷ்வற 2/64, மதுரங்க ஸ்ரீ சந்திரரத்ன 2/78

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி – இரண்டாம் நாள்

மலியதேவ கல்லூரிமைதானத்தில், D குழுவில் முதல் சுற்றுக்காக மோதிக்கொண்ட இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய ஜோசப் வாஸ் கல்லூரி மதுஷான் ரணதுங்கவின் சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஜோசப் வாஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்த சஞ்சீவ பிரியதர்ஷன மற்றும் தமித் சில்வா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து சொந்த மண்ணில் களமிறங்கிய மலியதேவ கல்லூரி, முதலாம் நாள் ஆட்ட முடிவின் போது சிறப்பாக துடுப்பாடி இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இன்று இரண்டாவது நாளுக்காக தொடர்ந்து துடுப்பாடிய மலியதேவ கல்லூரி, 90.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 320 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. மலியதேவ கல்லூரி சார்பாக தினன்ஜய பிரேமரத்ன 141 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் புனித ஜோசப் வாஸ் கல்லூரி சார்பாக மதுஷான் ரணதுங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

115 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய வென்னப்புவ, புனித ஜோசப் வாஸ் கல்லூரி 38 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்து போட்டி சமநிலையில் முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம் :

புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ (முதல் இன்னிங்ஸ்): 205 (63.1) – மதுஷான் ரணதுங்க 100, யொஹான் பீரிஸ் 30, சஞ்ஜீவன் பிரியதர்ஷன 3/46, தமித சில்வா 3/42, கலன இலங்ககோன் 2/10

மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்): 320/9d (90.2) –  தினன்ஜய பிரேமரத்ன 141, தில்ஷான் கொல்லுரே 24, துலாஜ் ரணதுங்க 44, மதுஷான் ரணதுங்க 5/83, தனஞ்சய பெரேரா 2/87

புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ (இரண்டாவது இன்னிங்ஸ்): 124/5 (38) – அஞ்சன ருக்மல் 20*, கிஹான் அபேரத்ன 26, சஞ்ஜீவன் பிரியதர்ஷன 2/12

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. மலியதேவ கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி