ஆறு ஓட்டங்களுக்கு சுருண்ட பாடசாலை அணி

1043
Kalana Perera

சிங்கர் அனுசரணையில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகள் இன்று (31) நிறைவடைந்தன. இதில் கேகாலை புனித மேரிஸ் கல்லூரி வெறுமனே 6 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

புனித தோமியர் கல்லூரி, கல்கிசை எதிர் புனித மேரிஸ் கல்லூரி, கேகாலை

கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ஓட்டங்களில் ஒன்றாக வெறுமனே 6 ஓட்டங்களுக்கு சுருண்ட புனித மேரிஸ் கல்லூரி, புனித தோமியர் கல்லூரியுடனான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 233 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய புனித செபஸ்டியன் கல்லூரி

சிங்கர் அனுசரணையில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு..

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் புனித தோமியர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. மத்திய வரிசையில் வந்த உமயங்க சுவாரிஸ் ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித மேரிஸ் கல்லூரி மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 72 ஓட்டங்களுக்கு சுருண்டது. எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை திக்குமுக்காடச் செய்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் கலன பெரேரா 17 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை சுருட்டினார்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸுக்கு பலோ ஓன் முறையில் மீண்டும் துடுப்பாடிய புனித மேரிஸ் அணியை கலன பெரேரா மீண்டும் ஒருமுறை சிதறடித்தார். முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் 3 ஆவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளையும் பின்னர் ஆறாவது ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி எதிரணியை தலைதூக்க விடவில்லை.

மறுபுறும் புனித மேரிஸ் அணி வீரர்கள் மைதானத்திற்கு வந்து ஓட்டம் இன்றியே அடுத்தடுத்து வெளியேறினர். மத்திய வரிசையில் வி.எம். பிரதிஹார மாத்திரமே 36 பந்துகளுக்கு முகம் கொடுத்து 2 ஓட்டங்களை பெற்றார். ஏனைய வீரர்கள் அனைவரும் டக் அவுட் ஆகினர். இதனால் புனித மேரிஸ் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 10.5 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் நான்கு ஓட்டங்கள் வைட் பந்து மூலம் கிடைத்தவையாகும்.

நுவன் சொய்சா மீது ஐ.சி.சி. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு

ஐ.சி.சி.யின் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை மீறி இருப்பதாக இலங்கை…

அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய கலன பெரேரா ஒரு ஓட்டத்திற்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்தப் போட்டியில் அவர் மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 311/8d (64.3) – உமயங்க சுவாரிஸ் 107*, ஷாலின் டி சில்வா 66, சிதார ஹபுஇன்ன 47, டியோன் பெர்னாண்டோ 46, கலன பெரேரா 25, ஹிரான் பியகம 4/85, சினெத் வீரசூரிய 3/102

புனித மேரிஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 72 (23) – பசன் வலிசிங்க 34*, கலன பெரேரா 8/17

புனித மேரிஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – F/O 6 (10.5) – கலன பெரேரா 8/01

முடிவு புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 233 ஓட்டங்களால் வெற்றி


ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு

மத்தேகொட, சபியர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் பரஸ்பரம் நெருக்கடி கொடுத்தபோதும் சீரற்ற காலநிலையும் போட்டியில் தாக்கம் செலுத்த ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஜனாதிபதி கல்லூரியின் 7 விக்கெட்டுகளை சமத் யட்டவர வீழ்த்த அந்த அணி 120 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இளம் வீரர் பத்தும் நிசங்கவுக்கு ஆபத்தில்லை

கொழும்பு, NCC மைதானத்தில் இன்று (31) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும்..

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த டி.எஸ். சேனநாயக்க கல்லூரி 209 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக ஆடிய ஜனாதிபதி கல்லூரி ஆட்டநேர முடிவில் 115 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 120 (37.1) – இரங்க ஹஷான் 44, சமத் யட்டவர 7/30, முதித் லக்ஷான் 2/14

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 209 (43.1) – அமித் தாபரே 64, பசிந்து ஆதித்ய 42, சன்தரு விக்ரமரத்ன 23, தஷிக்க நிர்மால் 4/53, தினித் நெலும்தெனிய 3/41

ஜனாதிபதி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 115/4 (37.1) – தஷிக நிர்மால் 43, இரங்க ஹஷான் 43*, சமத் யட்டவர 3/29

முடிவு போட்டி சமநிலையில் முடிவு  


ராகுல கல்லூரி, மாத்தறை எதிர் தேவபத்திராஜா கல்லூரி, ரத்கம

கொடிகமுவ உயன்வத்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சுதீர வீரரத்ன (133) மற்றும் ஜீவக்க ஷஷினின் (124*) சதத்தின் உதவியோடு வலுவான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தேவபத்திராஜா கல்லூரி போட்டியை சமநிலையில் முடித்தது.

சிங்கர் நிறுவன அணிக்கு எதிராக எக்ஸ்போ லங்கா இலகு வெற்றி

பிரிவு B வர்த்தக நிறுவன அணிகள் இடையே நடைபெற்று வரும் ஒரு நாள் லீக் கிரிக்கெட்…

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ராகுல கல்லூரி 9 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை எடுத்த நிலையில் தேவபத்திராஜா கல்லூரி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ராகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 230/9d (81.5) – சஹன் பண்டார 59, பினர சன்கித் 39, லகிந்து சமோத்ய 32, பதும் முதுசங்க 3/51, சுதீர வீரரத்ன 2/17, இருஷக்க திமிர 2/46

தேவபதிராஜா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 307/3 (75.5) – சுதீர வீரரத்ன 133, ஜீவக்க ஷஷின் 124*, ஹிருக்ஷ திமிர 25,

முடிவுபோட்டி சமநிலையில் முடிவு