புனித செபஸ்தியன் கல்லூரி, கட்டுனேறிய எதிர் புனித மரியார் கல்லூரி, கேகாலை

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி புனித செபஸ்தியன் கல்லூரியில் முதல் நாளாக ஆரம்பித்த நிலையில், முதலில் துடுப்பாடிய செபஸ்தியன் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக நிமேஷ் தனஞ்சய கூடிய ஓட்டங்களாக 36 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை கயான் சந்திரசிறி 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித மரியார் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 142 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நிலையில் மேலும் 33 ஓட்டங்களால் பின்னிலையுற்று காணப்படுகிறது. சிறப்பாக துடுபாடிய கஜித கொட்டுவெகொட மற்றும் டி எஸ் குமார ஆட்டமிழக்காமல் முறையே 67, 35 ஓட்டங்களை பெற்று களத்தில் இருக்கின்றனர்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்தியன் கல்லூரி, கட்டுனேறிய (முதல் இன்னிங்ஸ்): 175 (51.4) – நிமேஷ் தனஞ்சய 36, ஷெசான் உதார 34, கயான் சந்திரசிறி 4/35, மதுஷான் உடகே 3/59, நிர்மல் பெர்னாண்டோ 2/11

புனித மரியார்  கல்லூரி, கேகாலை (முதல் இன்னிங்ஸ்): 142/4 (41) – கஜித கொட்டுவெகொட 67*, டி எஸ் குமார 35*


தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் றோயல் கல்லூரி, கொழும்பு

இரண்டாம் நாளாக நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி, வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

தர்மராஜ கல்லூரி முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட 111 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய றோயல் கல்லூரி ஹெலித விதானகே பெற்றுக்கொண்ட 66 ஓட்டங்களின் உதவியுடன் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 210 ஓட்டங்களை பெற்று 99 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

அதனையடுத்து இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய தர்மராஜ கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களை பெற்ற நிலையில் போதிய நேரமின்மை காரணமாக போட்டி சமநிலையில் நிறைவுற்றது .தேஷான் குணசிங்க கூடிய ஓட்டங்களாக 52 ஓட்டங்களை பதிவு செய்தார்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 111 (46.3) – துலாஜ் விஜயகோன் 35, சாமக்க எதிரிசிங்க 2/17, ஹெலித விதானகே 4/29

றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 210/6d (43.4) – ஹெலித விதானகே 66, கவிந்து மதரசிங்க 54, ஜனித் சந்தீப 34*, பசிந்து சூரியபண்டார 22, நவீந்த தில்ஷான் 2/51, தேஷான் குணசிங்க 2/35

தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்): 193 (53.1) – தேஷான் குணசிங்க 52, கசுன் குணவர்தன 37, சசிந்த சேனாநாயக்க 32, கிஹான் விதாரண 23, கணித் சந்தீப 5/57, யுவீன் ஹேரத் 2/54


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் மஹாநாம கல்லூரி, கொழும்பு

நீர்கொழும்பு கதிரான கிரிக்கெட் மைதானத்தில் முதல் நாளாக ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, ரவிந்து பெர்னாண்டோ அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட 106 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய மஹாநாம கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களை பெற்ற நிலையில் மிகவும் வலுவான நிலையில் உள்ளது. கவிந்து முனசிங்க ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

போட்டிடின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 211 (52.5) – ரவிந்து பெர்னாண்டோ 106, சசிந்து கொலம்பகே 44, நிதுக்க வெலிகள 4/54, ஹெஷான் ஹெட்டியாராச்சி 2/25, ஹஷான் சந்தீப 2/64

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 96/1 (35) – கவிந்து முனசிங்க 59*, தினுக்க ரூபசிங்க 23*


மஹிந்த கல்லூரி, காலி எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு

காலி மஹிந்த கல்லூரி மைதானத்தில் முதல் நாளாக ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் சொந்த மண்ணில் முதலில் துடுப்பாடிய மஹிந்த கல்லூரி, ரவீந்து ஹன்சிக பெற்றுக்கொண்ட 151 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 292 ஓட்டங்களை பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்  

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 292/5 (95) – ரவீந்து ஹன்சிக 151, வினுர விரஞ்சித் 53, மலிங்க அமரசேன 3/37


சில்வஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவ

மொரட்டுவ செபஸ்தியன் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பித்த இந்தப் போட்டியில் சில்வஸ்டர் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சிறப்பாக பந்து வீசிய நுவனிது பெர்னாண்டோ 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து, தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய புனித செபஸ்தியன்  கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளுக்கு 82 ஓட்டங்களை பெற்றுள்ளது. சிறப்பக துடுப்பாடிய அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

சில்வஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 173 (75.2) – மாந்தித் ராஜபக்ஷ 51*, சந்துல ஜயக்கொடி 27, நுவனிது பெர்னாண்டோ 5/54, ஆசேர் வர்ணகுலசூரிய 2/07

புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 87/2 (18) – அவிஷ்க பெர்னாண்டோ 60*


வித்தியார்த்த கல்லூரி, கண்டி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி

முதல் நாளாக ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய வித்தியார்த்த கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சச்சித ப்ரியமல் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார். அதேநேரம் சிறப்பாக பந்து வீசிய ரங்கன ரத்னாயக்க 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய கிங்ஸ்வூட் கல்லூரி இற்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

வித்தியார்த்த கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 162 (66) – சச்சித ப்ரியமல் 45*, ரவிஷ்க்க உபானந்த 37, ஜனித் தென்னகோன் 2/35, ரங்கன ரத்னாயக்க 3/25, யசோத கவிந்த 2/09

கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 123/3 (29) – அவிஷ்க சந்திரசிறி 68*, அமில ஜயவீர 21


ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

இரண்டாம் நாளாக நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ரிச்மண்ட் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட 85 ஓட்டங்களுக்கு பதிலாக துடுப்பாடிய தர்ஸ்டன் கல்லூரி 141 ஓட்டங்களை பெற்று 56 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

அதனையடுத்து இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி 26 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்று வெறும் 30 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்த வகையில் களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து குறித்த இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 85 (28.3) – தனஞ்சய லக்‌ஷான் 28, சரண நாணயக்கார 5/31, துஷால் மதுஷங்க 2/08, நிபுன் லக்ஷான் 2/24

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 141 (42.1) – யெஷான் விக்ரமாராச்சி 35, இமேஷ் விரங்க 33, சரண நாணயக்கார 31, அவிந்து தீக்ஷன 2/33, திலங்க உதேஷன 6/38

ரிச்மண்ட் கல்லூரி, காலி (இரண்டாம் இன்னிங்ஸ்): 89 (26) – கமிந்து  மென்டிஸ் 26, நவீன் குணவர்தன 6/31, துஷால் மதுஷங்க 2/11

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 34/2 (9) – இமேஷ் விரங்க 24*

போட்டி முடிவு: தர்ஸ்டன் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி