சில்வெஸ்டர், திரித்துவக் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு

124

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் கண்டியின் பிரபல பாடசாலைகளான திரித்துவ மற்றும் புனித சில்வெஸ்டர் கல்லூரி அணிகளுக்கு இடையில் இன்று (22) நிறைவுக்கு வந்த மரபுரீதியான போட்டி சமநிலை அடைந்தது.

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நேற்று (21) ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித சில்வெஸ்டர் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடியிருந்த சில்வெஸ்டர் கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 88 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது. 

ஒரே ஒரு வெற்றி அடுத்தடுத்த போட்டிகளின் முடிவை மாற்றிவிடும் – டிக்வெல்ல நம்பிக்கை

இலங்கை அணி தற்போதுள்ள நிலையில்…

பந்துவீச்சில் திரித்துவக் கல்லூரி அணியின் வலதுகை வேகப் பந்துவீச்சாளரான ருவின் பீரிஸ் 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த திரித்துவக் கல்லூரி அணி, புபுது பண்டாரவின் அரைச் சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.

சில்வெஸ்டர் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் பசன் ஹெட்டியாரச்சி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நிஷாந்த இந்திரஜித் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித சில்வெஸ்டர கல்லூரி 3 விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது. இதன் போது புனித சில்வெஸ்டர் கல்லூரி சார்பில் களத்தில் இருந்த சந்துல ஜயகொடி 25 ஓட்டங்களையும், மனோகரன் பவிதரன் 17 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 88 (42.5) – மனோகரன் பவிதரன் 28, ருவன் பீரிஸ் 6/40

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 166/8d (40) – புபுது பண்டார 88, உமைல் ரைஸான் 27, சானுக்க குமாரசிங்க 21, பசன் ஹெட்டியாரச்சி 3/20, நிஷாந்த இந்திரஜித் 3/35

புனித சில்வெஸ்டர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 62/3 (33) – சந்துல ஜயகொடி 25*, மனோகரன் பவிதரன் 17*, அவிஷ்க சேனாதீர 2/14

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க