சீதக்க, ருசிரவின் அரைச்சதங்களினால் செர்வேஷியஸ் கல்லூரிக்கு இலகு வெற்றி

59

சிங்கர் அனுசரணையில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகள் இன்று (08) நிறைவடைந்தன.

இதில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில் மாத்தறை புனித செர்வேஷியஸ் கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவுசெய்திருந்ததுடன், கொழும்பு லும்பினி மற்றும் காலி புனித அலோசியஸ் கல்லூரி அணிகளுக்களுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

அதிரடி பந்துவீச்சு மூலம் லும்பினி கல்லூரி இலகு வெற்றி

சிங்கர் அனுசரணையில் இடம்பெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு /p>

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித செர்வேஷியஸ் கல்லூரி, மாத்தறை

மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் இன்று நிறைவுக்கு வந்த இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புனித செர்வேஷியஸ் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மாரிஸ்டெல்லா கல்லூரி அணி, ரவிந்து பெர்னாண்டோவின் (85) அரைச்சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களுகளைப் பெற்றது.

பந்துவீச்சில் செர்வேஷியஸ் கல்லூரியின் பசிந்து மனுப்ரிய 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், சஷிக்க துல்ஷான் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடிய மாத்தறை வீரர்கள், 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சீதக்க தெனுவன் 57 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்க்க, பந்துவீச்சில் ரவிந்து பெர்னாண்டோ 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பின்னர் 51 ஓட்டங்களுடன் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மாரிஸ் ஸ்டெல்லா அணி, மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து 149 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த செர்வேஷியஸ் கல்லூரி அணி, ருசிர லக்வின் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட அரைச்சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அதிகபட்சட்சமாக ருசிர லக்வின் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும், சஷிக்க துல்ஷான் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 173/10 (60.5) – ரவிந்து பெர்னாண்டோ 85, திலின பெரேரா 28, பசிந்து மனுப்ரிய 4/16, சஷிக்க துல்ஷான் 3/55, சரித் ஹர்ஷன 2/15

செர்வேஷியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 122/10 (45) – சீதக்க தெனுவன் 57, ரவிந்து பெர்னாண்டோ 4/33, அஷான் பெர்னாண்டோ 2/02, அவீஷ கேஷான் 2/17, பசிந்து ஷெட்டி 2/28

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 97/10 (28.4) – ரவிந்து பெர்னாண்டோ 35, கெவின் பெரேரா 31, மதீஷ மதுஷான் 2/14, ருவிந்த ரோச்சன 2/14

செர்வேஷியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 149/5 (46.5) – ருசிர லக்வின் 54* சஷிக்க துல்ஷான் 45, ரவிந்து பெர்னாண்டோ 2/61

போட்டி முடிவு செர்வேஷியஸ் கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி


லும்பினி கல்லூரி, கொழும்பு எதிர் புனித அலோசியஸ் கல்லூரி, காலி

கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் நிறைவுக்கு வந்த இந்தப் போட்டி சீரற்ற காலநிலையால் சமநிலையானது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அலோசியஸ் கல்லூரி அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் அலோசியஸ் கல்லூரி சார்பாக மதுஷ்க சமித் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், சதுன் மதுஷன்க 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியருந்தனர்.

இதனையடுத்த தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய அலோசியஸ் கல்லூரி அணியினர் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்ற போது, போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் இரண்டாம் நாளின் ஆட்ட நேரம் முடிவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது.

இங்கிலாந்துடனான 2ஆவது டெஸ்ட்டில் மாற்றமில்லை: இலங்கை கிரிக்கெட்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 130/10 (51) – பசிந்து பமோதித்த 49, எஷான் ஹசங்க 25*, சிதும் திஸாநாயக்க 23, மதுஷ்க ஸ்மித் 5/40, சதுன் மதுஷங்க 4/55

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 133/8 (51) – ஓமல் சந்தீப் 42, கவிந்து தில்ஹார 22, சிதும் திஸாநாயக்க 3/16, யசிரு யுகத் 2/26, ரவிஷ்க விஜேசிறி 2/52

போட்டி முடிவு போட்டி சமநிலையில் முடிவுற்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க