புத்திலவின் அபாரப் பந்து வீச்சினால் புனித அலோசியஸ் கல்லூரி இலகு வெற்றி

353
Singer cup - St. Aloysius College vs President's College

இந்த பருவகாலத்திற்கான 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் காலி புனித அலோசியஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் கொழும்பு ஜனாதிபதிக் கல்லூரியினை வீழ்த்தியுள்ளது.  

காலி சர்வதேச மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் புனித அலோசியஸ் கல்லூரி அணியின் தலைவர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று ஜனாதிபதிக் கல்லூரியினை முதலில் துடுப்பாடப் பணித்திருந்தார்.  

திமுத் கருணாரத்னவின் சிறப்பாட்டத்தினால் ஜோன் கீல்ஸ் இலகு வெற்றி

இன்றைய நாளில் பிரிவு A (டிவிஷன் A) வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது. மாஸ் யுனிச்செல்லா…

இதன்படி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதிக் கல்லூரியின் வீரர்களை இலங்கை கனிஷ்ட அணியின் இடது கை சுழல் வீரர் ஹரீன் புத்தில நிலைகுலையச் செய்ய, வெறும் 111 ஓட்டங்களிற்குள் அவ்வணி சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

அபாரமாக செயற்பட்ட ஹரீன் புத்தில 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.  துடுப்பாட்டத்தில் தர்ஷிக நிமல் மாத்திரம் தனித்துப் போராடி 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சினை தொடங்கிய புனித அலோசியஸ் கல்லூரியில் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்திய நிரஞ்ச சஞ்சன சதம் கடந்து 178 பந்துகளிற்கு 124 ஓட்டங்களை குவித்துக்கொண்டார். அதோடு முன்னர் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஹரீன் புத்திலவும் அரைச் சதம் தாண்டினார். இவர்களின் ஆட்டங்களினால் வலுவடைந்த புனித அலோசியஸ் கல்லூரி 63.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களினை பெற்றிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நல்லதொரு மொத்த ஓட்ட எண்ணிக்கையினை எதிர்பார்த்து களமிறங்கிய ஜனாதிபதி கல்லூரி வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் இன்னிங்ஸ் போல் இம்முறையும் பந்து வீச்சில் மிரட்டியிருந்த ஹரீன் புத்திலவின் அபார சுழலினால் 50 ஓவர்களை கூட சந்திக்க முடியாத ஜனாதிபதிக் கல்லூரி வீரர்கள் 149 ஓட்டங்களுடன் சுருண்டனர். வியக்கத்தக்க வகையில் மீண்டும் செயற்பட்டிருந்த ஹரீன் புத்தில வெறும் 59 ஓட்டங்களிற்கு ஜனாதிபதிக் கல்லூரியின் 8 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தகுதியான எட்டு கிரிக்கெட் ஆளுமைகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி என்பது அண்மைய காலங்களில் கிரிக்கெட் உலகில் விரும்பப்படாத ஒரு பொறுப்பாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் கடந்த 7…

ஜனாதிபதிக் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்சினையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 6 ஓட்டங்களினை பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய புனித அலோசியஸ் கல்லூரி வீரர்கள் இரண்டு ஓவர்களில் எந்தவித விக்கெட்டுக்களையும் பறிகொடுக்காது போட்டியின் வெற்றியாளர்களாக மாறினர்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதிக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 111 (41.1) – தஷிக நிர்மல் 52, ஹரீன் புத்தில 5/27

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 254/8d (63.3) – ரவிந்து சஞ்சன 124, ஹரீன் புத்தில 58, அஷான் பண்டார 39, இரங்க ஹஷான் 3/42, விமுக்தி லங்கா 2/24, தினேத் தமிந்து 2/68  

ஜனாதிபதிக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 148 (49.3) – கலிந்து தேவ்மின 56,  இரங்க ஹஷன் 27, ஹரீன் புத்தில, ரவிந்து சஞ்சன 2/36

புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 6/0 (2)

போட்டி முடிவுபுனித அலோசியஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி