இந்திய டெஸ்ட் குழாமில் முதன்முறையாக இடம்பிடித்த சுப்மான் கில்

63
espncricinfo

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் இன்று (12) அறிவிக்கப்பட்டுள்ளது. 

இளையோர் ஆசியக் கிண்ணத்தில் தோல்வி காணாத அணியாக இந்தியா

இலங்கையில் இடம்பெற்று வரும் இளையோர்….

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாபிரிக்க அணி முறையே மூன்று T20I போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் முதலில் T20I போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் சபை டெஸ்ட் தொடருக்கான குழாத்தை முதலாவதாக வெளியிட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த குழாத்தின் படி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த அணியிலிருந்து ஒரு மாற்றம் மாத்திரமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கே.எல்.ராஹுலுக்கு பதிலாக சுப்மான் கில் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

கே.எல்.ராஹுல் கடந்த வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் கடந்திருந்தாலும், அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் பிரகாசிக்க தவறியிருந்தார். குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 38 மற்றும் 44 ஓட்டங்களை இவர் பெற்றிருந்தாலும், அதன் பின்னர் குறைந்த ஓட்டங்களையே பெற்றிருந்தார். 

கே.எல்.ராஹுலின் மோசமான துடுப்பாட்ட வெளிப்படுத்தல்களின் காரணமாக முதல் முறையாக இந்திய டெஸ்ட் குழாத்துக்குள் சுப்மான் கில் அழைக்கப்பட்டுள்ளார். இவர் தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிரான போட்டியில் 90 மற்றும் 5 என்ற ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இந்திய டெஸ்ட் குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளார். அதுமாத்திரமின்றி, 14 முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 72.15 என்ற ஓட்ட சராசரியில் 1,443 ஓட்டங்களை பெற்றுள்ளார்.  

இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஜஸ்ப்ரிட் பும்ரா முதன்முறையாக தனது சொந்த நாட்டில் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடவுள்ளார். அத்துடன், விக்கெட் காப்பாளர்களாக ரிஷப் பண்ட் மற்றும் விரிதிமன் சஹா ஆகியோரும் இந்த குழாமில் பெயரிடப்பட்டுள்ளதுடன், முதல் நிலை விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக ரிஷப் பண்ட் செயற்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்திய அணியில் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட வேண்டும் என கருத்துக்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், இம்முறை தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படுவார் என இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.

முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் செல்லாமைக்கு இந்தியா காரணமா? – பதில் கூறும் ஹரின்

இலங்கை அணியின் முன்னணி கிரிக்கெட்….

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, செட்டேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், விரிதிமன் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் சமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, இசாந் சர்மா, சுப்மான் கில்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<