உபாதைக்குள்ளான ஷிகர் தவான் அணியில் இருந்து விலக மாட்டார்

423
GettyImage

உபாதைக்குள்ளாகியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் தொடர்ந்தும் இந்திய அணியில் நீடிப்பார் எனவும், எந்த வீரரும் புதிதாக குழாமில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார் எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்துள்ளது.  

12ஆவது .சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் வீரர்களுடைய உபாதை ஒரு அணிக்கும் அதனுடைய முகாமைக்கும் மிகவும் சவாலான ஒன்றாக மாறியிருக்கின்றது.  

உலகக் கிண்ணத்திலிருந்து முழுமையாக விலகும் நிலையில் ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்பத் ………..

உலகக் கிண்ணம் ஆரம்பமாகிய காலப்பகுதியிலிருந்து ஒவ்வொரு அணிகளிலிருந்தும் மிக முக்கியமான வீரர்கள் உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இதில் சில வீரர்கள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டு பதில் வீரர்கள் அழைக்கப்பட்ட நிலையிலும், சில வீரர்கள் தொடர்ந்தும் குழாமில் நீடிக்கின்ற வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு நீடிப்பதற்கான காரணம் உபாதைக்குள்ளான நிலையில் வீரர் ஒருவர் குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டால், பின்னர் அவர் உபாதையிலிருந்து மீண்டால் எக்காரணம் கொண்டும் அவரால் மீண்டும் அணியில் இணைய முடியாது என்பதாகும். இலங்கை அணியிலிருந்து அவிஷ்க பெர்ணான்டோவிற்கு பதிலாக மாற்று வீரர் எவரும் அழைக்கப்படாமைக்கும் காரணம் இதுவேயாகும்.    

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழை (09) நடைபெற்ற இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 14ஆவது லீக் போட்டியின் போது இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் உபாதைக்குள்ளாகியிருந்தார்.

எதிரணியின் வேகப் பந்துவீச்சாளரான நெதன் கோல்டர் நைல் வீசிய பௌண்ஸர் பந்து தவானின் கைவிரலை தாக்கியது. முதலுதவி சிகிச்சையின் பின்னர் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய தவான் பின்னர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை.

ஸ்டோய்னிஸை இழக்கும் நிலையில் உள்ளதா அவுஸ்திரேலியா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற ……..

இந்நிலையில், நேற்று (11) தவானுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது மூன்று வாரங்கள் தவானுக்கு ஓய்வு தேவை என்கின்ற முடிவு கிடைத்தது. இதனை தொடந்து ஷிகர் தவான் உலகக் கிண்ண தொடரிலிருந்து முழுமையாக விலகும் நிலை ஏற்படும் எனவும், அவருக்குப் பதிலாக ரிஷாப் பண்ட் அல்லது அம்பத்தி ராயுடு உலகக் கிண்ண இந்திய குழாமில் இணைவார் எனவும் பரவலான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. மேலும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வியும் இரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஷிகர் தவான் தொடர்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது மகிழ்ச்சியான புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

ஷிகர் தவான் தொடர்ந்தும் இங்கிலாந்தில் இந்திய அணியுடனேயே தங்கியிருந்து தனக்கான சிகிச்சைகளை பெறுவார். எங்களது மருத்துவக்குழு அடுத்த சில நாட்களுக்கு அவருக்காக சிகிச்சைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளது. தவான் விரைவில் குணமடைவார். மாற்று வீரர் எவரும் தற்போது குழாமில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேஷார்ட்டின் உலகக் கிண்ண கனவை சிதைத்ததா ஆப்கானிஸ்தான்?

தனது உடற்தகுதி சிறப்பாக இருக்கும் …………..

இந்நிலையில் உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி அடுத்து நாளை (13) பங்கேற்கவுள்ள நியூஸிலாந்து அணியுடனான போட்டியிலும், அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (16) பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் தவான் விளையாடமாட்டார் என்பது உறுதியாக தெரிவிக்கப்படுகின்றது.   

மேலும், அடுத்த இரு போட்டிகளுக்கும் ரோஹிட் சர்மாவுடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக கே.எல் ராகுல் களமிறங்கி, தவானின் வெற்றிடத்திற்கு ரவீந்திர ஜடேஜா நிரப்பப்படுவார் என நம்பப்படுகின்றது.

33 வயதுடைய ஷிகர் தவான் இதுவரையில் 130 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,480 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 17 சதங்களும், 27 அரைச் சதங்களும் உள்ளடங்கும்.   

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<