வொட்சனின் அதிரடியால் சென்னைக்கு மீண்டும் முதலிடம்

121
iplt20.com

ஐ.பி.எல். தொடரில் தங்களது சொந்த மைதானத்தில் தொடர் வெற்றிகளை குவித்து வரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நேற்று (23) நடைபெற்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஷேன் வொட்சனின் அதிரடி துடுப்பாட்டத்தின் ஊடாக வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

ஐ.பி.எல் அரங்கில் இரட்டை சாதனை படைத்த டோனி

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணியுடனான லீக் ஆட்டத்தில் சென்னை…

எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியானது, இந்த பருவாகலத்தின் குறித்த மைதானத்தில் நடைபெற்ற ஏனைய போட்டிகளை விட சற்று மாற்றத்துக்கு உள்ளாகியிருந்தது. இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும், ஓட்டங்களை பெறுவதற்கு கடினமாகவும் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று சாதகமாக அமைந்திருந்தது. இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி, மனிஷ் பாண்டே மற்றும் டேவிட் வோர்னரின் சிறப்பான துடுப்பாட்டங்களின் உதவியுடன் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

கேன் வில்லியம்சனுக்கு பதிலாக அணிக்குள் வந்த மனிஷ் பாண்டே ஆரம்பம் முதல் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவர் ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 83 ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் டேவிட் வோர்னர் தனது பங்கிற்கு 45 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சென்னை மைதானத்தை பொருத்தவரை, மிகவும் கடினமான ஓட்ட இலக்கை நோக்கி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பத்தில் ஓட்டவேகம் குறைவாக இருந்த போதும், சந்தீப் சர்மாவின் ஓவரில் ஆரம்பமாகிய சுரேஷ் ரெய்னாவின் அதிரடியுடன் போட்டி சூடுபிடித்தது.

சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, ஷேன் வொட்சனின் அதிரடி ஆரம்பமானது. ஹைதரபாத் அணியின் பந்து வீச்சாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிய இவர், இந்த பருவகாலத்தில் தனது முதலாவது அரைச்சதத்தை பதிவுசெய்ததுடன், வேகமாக ஓட்டங்களை குவித்தார். 53 பந்துகளில் 96 ஓட்டங்களை குவித்த இவர், துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்டார்.

மும்பை அணியுடன் இணையும் தென்னாபிரிக்க வீரர்

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அல்ஷாரி…

எவ்வாறாயினும், வெற்றியிலக்கை நெருங்கியிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, கேதர் ஜாதவ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரின் நிதான ஆட்டங்களால் வெற்றியை பதிவுசெய்தது. போட்டியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை பின்தள்ளி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலித்தை பிடித்துள்ளதுடன், ப்ளே-ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட தக்கவைத்துள்ளது.

போட்டி சுருக்கம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 175/3 (20), மனிஷ் பாண்டே 83 (49), டேவிட் வோர்னர் 57 (45), ஹர்பஜன் சிங் 39/2

சென்னை சுப்பர் கிங்ஸ் – 176/4 (19.5), ஷேன் வொட்சன் 96 (53), சுரேஷ் ரெய்னா 38 (24), புவனேஷ்வர் குமார் 18/1

முடிவு – சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<