மஹேல பயிற்றுவிக்கும் அணியில் ஷேன் வொட்சன்

1937
©AFP

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் (PBL) மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பாளராக செயற்படும் குல்னா டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.    

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் விதிமுறைப்படி அணியொன்று வீரர்கள் வரைவில் இடம்பெறாத இரண்டு வெளிநாட்டு வீரர்களை நேரடியாக தங்களது அணியில் இணைத்துக்கொள்ள முடியும். அதன் அடிப்படையில் குல்னா டைட்டன்ஸ் அணி ஷேன் வொட்சனை அணியில் இணைத்துள்ளது.

தனது பதவியில் நீடிக்கப்போவிதில்லை என்கிறார் இன்சமாம் உல் ஹக்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும்…..

இம்முறை பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், முதன்முறையாக இந்த தொடரில் பங்கேற்கும் ஷேன் வொட்சன் முழுத் தொடரிலும் விளையாடுவார் என்பதை குல்னா டைட்டன்ஸ் அணி உறுதிப்படுத்தியுள்ளது. 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரராக இருந்த ஷேன் வொட்சன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து, T20 லீக் போட்டிகளில் மாத்திரம் பங்கேற்று வந்தார். இறுதியாக பிக்பேஷ் லீக் தொடரிலிருந்தும் ஓய்வுபெறுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்த இவர், வெளிநாட்டு லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்திருந்தார்.  

அதன் அடிப்படையில் இறுதியாக இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வொட்சன், தற்போது பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளார். வொட்சன் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிட்ட குல்னா டைட்டன்ஸ் அணியின் முகாமைத்துவ பணிப்பாளர் கசி இனாம் அஹமட்,

ஷேன் வொட்சனை அணியில் இணைத்துள்ளமை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுபவ வீரரான வொட்சன், தனது சொந்த நாட்டுக்காகவும், தான் விளையாடிய அணிகளுக்காகவும் நிறைய கிண்ணங்களை வென்றுக்கொடுத்துள்ளார். அவரது வெற்றிக்கான மனநிலை மற்றும் அனுபவம் அணிக்கு மிக முக்கியமாகும். அத்துடன் கிண்ணத்துக்கான எமது கடின உழைப்புக்கு அவரது இணைவு மிகச்சிறந்ததாக அமையும்” என்றார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மஹேலவும் விண்ணப்பிப்பாரா?

இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன, இந்திய அணியின் ……….

அதேநேரம், குல்னா டைட்டன்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டுள்ள ஷேன் வொட்சன், தன்னால் முடிந்த விடயங்களை அணிக்காக செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 “பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ளமை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் விளையாட வேண்டும் என எதிர்பார்த்திருந்தேன். இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன், குல்னா டைட்டன்ஸ் அணி மிகச்சிறந்த அணி முகாமைத்துவத்தையும், குழாத்தையும் கொண்டுள்ளது. அதனால், இம்முறை கிண்ணத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<