மைதானத்தில் முரண்பட்ட ரபாடா, சர்மா மற்றும் வொட்சன்

786
Image Courtesy -,cricket.com.au

ஐ.பி.எல். தொடரில் இம்முறை ஒவ்வொரு நாளும் சுவாரஷ்ய விடயங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. நேற்று முன்தினம் அஸ்வினின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஜோஸ் பட்லரின் ஆட்டமிழப்பு சூடுபிடித்திருந்த நிலையில், நேற்று (26) டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் இசான்த் சர்மா, காகிஸோ ரபாடா மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வொட்சன் ஆகியோருக்கு இடையிலான வாய்த்தர்க்கம் சூடுபிடித்திருந்தது.

ஜோஸ் பட்லருக்கு சச்சித்ரவை ஞாபகப்படுத்திய அஷ்வின்

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்..

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஷேன் வொட்சனின் அதிரடியான ஆரம்பத்தின் காரணமாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இந்தப் போட்டியின் முடிவை விடவும் இசான்த் சர்மா, காகிஸோ ரபாடா மற்றும் ஷேன் வொட்சன் ஆகியோரது வாய்த்தர்க்கம் அதிகமாக பேசப்பட்டது. எனினும், போட்டியின் போது முரண்பட்டுக்கொண்ட இவர்கள், போட்டி முடிந்த பின்னர் ஒற்றுமையாகிய காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

டெல்லி அணியின் இரண்டாவது ஓவரில், இசான்த் சர்மா சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முதலாவது விக்கெட்டை வீழ்த்திய பின்னர், ஆக்ரோஷமான முறையில் அதனைக் கொண்டாடினார். இதன்போது, இசான்த் சர்மா மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய வொட்சனை பார்த்து ஏதோ கூறினார். பின்னர், இருவரும் நெருக்கமாக சென்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட, வொட்சன் சிரித்தவாறு இசான்த் சர்மாவிடம் பதில் கூறினார். இசான் சர்மா தொடர்ந்தும் சண்டையிடும் வகையில் வொட்சனிடம் செல்ல, டெல்லி அணியின் தலைவர் சிரேயாஷ் ஐயர் அவரை அழைத்துச்சென்றார்.

IPL இல் ஆட மாலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அனுமதி

தற்பொழுது நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்)..

பின்னர், வொட்சன் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்துக்கொண்டிருந்தார். இதன் போது பந்து வீச அழைக்கப்பட்ட காகிஸோ ரபாடா வொட்சனுடன் முரண்பட ஆரம்பித்தார். வொட்சன் ஓட்டம் ஒன்றினை பெற முற்பட்ட போது, ரபாடா, அவருக்கு (வொட்சனுக்கு) குறுக்கே செல்வது போன்று அருகில் சென்றார். பந்தை வீசிவிட்டு மீண்டும் ரபாடா செல்ல, வொட்சன் குறுக்கே மறைந்து அவரிடம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். வொட்சன் சற்று கோபமடைய, ரபாடா நடுவரிடம் கலந்துரையாடி விட்டு, புன்னகையுடன் பந்து வீச சென்றார்.

 

இவ்வாறு, வொட்சன் ஆட்டமிழக்கும் வரையில் சிறிய வாய்த்தர்க்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. எவ்வாறாயினும், போட்டியில் சென்னை அணி வெற்றியீட்டிய பின்னர் டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் ரிக்கி பொண்டிங், ரபாடா மற்றும் வொட்சன் ஆகியோர் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், தங்களுடைய பிரச்சினைகளை மைதானத்தில் வைத்து நிறைவுசெய்துக்கொண்டனர். போட்டியின் போது எவ்வளவு முரண்பாடுகள் ஏற்பட்டாலும், அவை போட்டி முடியும் வரைதான் என்ற விடயத்துக்கு இவர்களின் இந்த செயற்பாடு ஒரு உதாரணமாக மாறியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

டெல்லி கெப்பிட்டல்ஸ் – 147/6 (20), சிக்கர் தவான் 51 (47), ரிஷாப் பாண்ட் 25 (13), டுவைன் பிராவோ 33/3, இம்ரான் தாஹிர் 20/1, ரவீந்திர ஜடேஜா 23/1

சென்னை சுப்பர் கிங்ஸ் – 150/4 (19.4), ஷேன் வொட்சன் 44 (26), சுரேஷ் ரெய்னா 30 (16), மகேந்திரசிங் டோனி 32 (35), அமித் மிஸ்ரா 20/2, காகிஸோ ரபாடா 26/1, இசான்த் சர்மா 28/1

முடிவு – சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<