16 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கான தெரிவு இம்மாத இறுதியில்

661
Selections for AFC U16 Championship qualifiers

ஆசிய கால்பந்து சம்மேளத்தின் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான இலங்கை தேசிய அணியைத் தெரிவு செய்வதற்கான வீரர்கள் தெரிவு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் நடாத்தப்படும் இந்த வீரர்கள் தெரிவு, இம்மாதம் (மே) 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பு சிட்டி கால்பந்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

16 வயதின் கீழ் ஆசிய கால்பந்து தகுதிகாண் தொடரில் இலங்கை அணி

குறித்த தெரிவில் 2002ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் பிறந்த வீரர்கள், நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் கலந்துகொள்ளலாம். தெரிவில் பங்குகொள்ள வேண்டிய பிரதேசங்களை கால்பந்து சம்மேளனம் இரண்டு நாட்களுக்கு பிரித்து வழங்கியுள்ளது.

மே மாதம் 27ஆம் திகதி காலை 7.30 மணி –  சிட்டி கால்பந்து மைதானம்

வட மாகாணம் – யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, வலிகாமம், மன்னார், பருத்தித்துறை

கிழக்கு மாகாணம் – திருகோணமலை, மூதூர், கிண்ணியா, குச்சவெளி, மட்டக்களப்பு, அம்பாறை, காத்தான்குடி

மத்திய மாகாணம் – கண்டி, கம்பளை, நாவலப்பிட்டிய, மாத்தளை, பதுளை, பண்டாரவளை, ஹட்டன், நுவரெலியா, பிபிலை, மொனறாகலை

வட மத்திய / வட மேற்கு – அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், சிலாபம், வென்னப்புவ, குருநாகல், கேகாலை

மே மாதம் 28ஆம் திகதி காலை 7.30 மணி –  சிட்டி கால்பந்து மைதானம்

தென் மாகாணம் – அம்பலாங்கொடை, காலி, மாத்தறை, அம்பாந்தொட்டை, கதிர்காமம், தங்கல்லை, அவிஸ்ஸாவலை, இரத்தினபுரி

மேல் மாகாணம் – நீர்கொழும்பு, ஜா எல, கந்தானை, வத்தளை, கம்பஹா, களனி, கிரிபத்கொடை, கொழும்பு, கோட்டை, ரத்மலானை, மொறட்டுவை, பாணந்துறை, களுத்துறை, பேருவளை

மினி உலகக் கிண்ண சம்பியன்களாக முடிசூடிய இலங்கை மற்றும் அமெரிக்க அணிகள்

நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றுப் போட்டியில் உஸ்பகிஸ்தான், சவுதி அரேபியா, ஜோர்தான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் இலங்கை அணி குழு A யில் அங்கம் வகிக்கின்றது.

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் போட்டிகளில் உஸ்பகிஸ்தான் 5ஆவது இடத்தையும், சவுதி அரேபியா 11ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இடம்பெறும் போட்டித் தொடரில், ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதல் இடத்தைப் பெறும் 10 அணிகளும், அதிக புள்ளிகளுடன் குழு நிலையில் இரண்டாவது இடத்தைப் பெறும் 5 அணிகளும் போட்டியை நடாத்தும் நாடுகளின் அணிகளுடன் இணைந்து இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும்.