பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டிகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

122
Schools Rugby Matches Postponed

கடந்த வாரம் நடைபெற்ற கலகலப்பு சம்பவங்களைக் கருத்திற் கொண்டு இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு பைசர் முஸ்தபா அவர்கள் உடன்படிக்கை ஒன்றை உருவாக்கியிருந்தார். இந்த உடன்படிக்கை அனைத்து பாடசாலைகளுக்கும் சென்றடைகின்றவரையிலும் பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டிகள் எதுவும் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் சிங்கர் பாடசாலை ரக்பி தொடரின் மிகவும் மோசமான வாரமாக அமைந்திருந்தது. குறித்த போட்டிகளின் போது பார்வையாளர்கள் போட்டிகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் மோசமான நடத்தைகளையும் வெளிக்காட்டியிருந்தனர்.

கடந்த வாரம் வெஸ்லி கல்லூரிக்கும் றோயல் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியிலும், மலியதேவ கல்லூரிக்கும் புனித தோமியர் கல்லூரிக்கும் இடையிலான போட்டியிலும், டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கும் விஞ்ஞான கல்லூரிக்கும் இடையிலான போட்டிகளின் போது முழு நேரத்தின் பின்னரே இந்த கலகலப்பு சம்பவங்கள் உருவாகியிருந்தன.

கண்டி கழகத்தின் எழுவர் ரக்பி பயிற்றுனராக பாஸில் மரிஜா நியமனம்

இந்த சம்பவங்களை கருத்திற் கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் பாடசாலை ரக்பி போட்டிகளுக்கான நடுவர்களை வழங்க வேண்டாம் என இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கத்திற்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

“இது பாடசாலை ரக்பி போட்டிகளை பிரதிநிதித்துவம் செய்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். நான் இலங்கை ரக்பி சம்மேளத்துடனும், ரக்பி நடுவர்கள் சங்கத்துடனும் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருந்தேன். இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி எந்தவொரு நடுவரும் நடைபெற்று வருகின்ற பாடசாலை ரக்பி தொடர்களுக்காக வழங்கப்படமாட்டார்கள். அப்படி நடுவர்கள் வழங்கப்பட வேண்டும் எனில், இலங்கை ரக்பி சம்மேளனம், இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்கம், கல்வி அமைச்சு மற்றும் பாடசாலை அதிகாரசபை போன்ற அமைப்புக்கள் இந்த விடயத்தை கலந்தாலோசித்து விளையாட்டில் ஒழுக்கத்தை உறுதி செய்ய வேண்டும்“ என விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி, இந்த வாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிங்கர் பாடசாலைகள் ரக்பி தொடர் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இந்த விடயம் தொடர்பாக இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்கத்தின் செயலாளர் நிரோத விஜேராம ThePapare.com இற்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“பாடசாலைகளுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர், அமைச்சரின் அறிவுரைக்கு அமைய இந்த லீக் தொடரின் அனைத்துப் போட்டிகளும் பிற்போடப்பட்டிருக்கின்றது. நாங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் சந்தித்து விடயங்களை கலந்துரையாடவிருக்கின்றோம்.“

பாடசாலை ரக்பி தொடரில் கிண்ணத்துக்கான போட்டிகளும், பிளேட் (Plate) தொடரும் போவ்ல் (Bowl), ஷீல்ட் (Shield)  தொடர், டிவிஷன் – II தொடரின் போட்டிகளும் இந்த வாரத்தில் பிற்போடப்படவிருக்கின்றன. இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்கம் மீண்டும் ஒரு தடவை வெள்ளிக்கிழமை சந்தித்து இந்த விடயம் தொடர்பாக ஒரு முடிவை எடுக்கவிருக்கின்றனர்.

இந்தோனேசிய நட்புறவு செவன்ஸ் : இலங்கை லயன்ஸ், இராணுவப்படை சம்பியன்

இந்த வாரத்தில் கிண்ணத்திற்கான மிக முக்கிய போட்டிகள் இரண்டு இடம்பெறவிருந்தன. இதில் ஒன்றாக புனித பேதுரு கல்லூரிக்கும் புனித ஜோசப் கல்லூரிக்கும் இடையிலான போட்டியும், மற்றைய போட்டியாக றோயல் கல்லூரிக்கும் இசிபதன கல்லூரிக்கும் இடையிலான போட்டியும் இடம்பெறவிருந்தது.

இந்த வெள்ளிக்கிழமை இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்கம் ஒரு முடிவை எடுத்து இலங்கை ரக்பி நடுவர்கள் சம்மேளனத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவார்கள் எனில், பாடசாலை ரக்பி போட்டிகள் அனைத்தும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<