42 ஓட்டங்களுக்குள் சுருண்ட ஜோசப் வாஸ் கல்லூரி

115

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலை (டிவிஷன் – I) அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று ஆறு போட்டிகள் ஆரம்பமாகியிருந்தது.

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி எதிர் தர்மசோக கல்லூரி, காலி

பண்டாரகம பொது மைதானத்தில் தொடங்கிய குழு A அணிகள் இடையிலான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி வீரர்கள் முதல் இன்னிங்சில் 210 ஓட்டங்களினைச் சேர்த்தனர். விஹான் குணசேகர டி.எஸ். சேனநாயக்க கல்லூரி சார்பாக அதிகபட்சமாக 49 ஓட்டங்களை குவிக்க மறுமுனையில் காலி தர்மசோக கல்லூரியின் பந்துவீச்சில் வினுக்க தில்ஷான் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்த புனித அந்தோனியார், திரித்துவக் கல்லூரிகள்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – I….

இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த தர்மசோக கல்லூரி வீரர்கள் 92 ஓட்டங்களுக்கே சுருண்டனர். தர்மசோக கல்லூரியின் துடுப்பாட்டத்தில் இரு வீரர்கள் மாத்திரமே இருபது ஓட்டங்களை தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பந்துவீச்சில் சசிந்த ஹெட்டிகே மூன்று விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் தர்மசோக கல்லூரி இரண்டாம் இன்னிங்சினையும் பலோவ் ஒன் முறையில் ஆரம்பித்து 7 ஓட்டங்களினை விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி குவித்த போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 210 (49.3) விஹான் குணசேகர 49, முதித லக்ஷான் 49, வினுக்க தில்ஷான் 4/55

தர்மசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 92 (38.3) நிமேஷ் மெண்டிஸ் 3/25, மெதுசான் திலின 2/10

தர்மசோக கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 7/0 (2)


வெஸ்லி கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

கொழும்பின் இரண்டு பாடசாலைகள் மோதிய இந்த ஆட்டம் நாலந்த கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற மைதான சொந்தக்காரர்கள் வெஸ்லி வீரர்களை முதலில் துடுப்பாட பணித்திருந்தனர்.

இதன்படி வெஸ்லி கல்லூரி நல்ல ஆரம்பத்தினை காட்டிய போதிலும் பின்வரிசை சரிவினால் 173 ஓட்டங்களையே முதல் இன்னிங்சில் பெற்றது. திசருக்க அக்மீமன அதிகபட்சமாக 83 ஓட்டங்களை வெஸ்லி கல்லூரி சார்பாக பெற்றுக் கொண்டார். இதேவளை நாலந்த கல்லூரியின் சுஹந்த விஜேவர்தன 5 விக்கெட்டுக்களை வெறும் 18 ஓட்டங்களுக்குள் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தம்முடைய முதல் இன்னிங்சில் துடுப்பாடிய நாலந்த கல்லூரி 79 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 173 (60.5) திசருக்க அக்மீமன 84, சுஹந்த விஜேவர்த்தன 5/18

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 79/3 (34) சுஹந்த விஜேயவர்த்தன 25*

லக்ஷான், கமிந்துவின் அபார ஆட்டத்தால் இலங்கைக்கு முதல் வெற்றி

2018ஆம் ஆண்டில் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேசப் போட்டித் தொடராக 19……


புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ எதிர் தர்ஸ்டன் கல்லூரி

தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் தொடங்கிய குழு A அணிகள் இடையிலான இந்த போட்டியில் மொரட்டுவ வீரர்கள் முதலில் துடுப்பாடி 141 ஓட்டங்களினையே முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்டனர். இதில் தர்ஸ்டன் கல்லூரியின் சந்தரு டயஸ் 5 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் மைதான சொந்தக்காரர்கள் தமது துடுப்பாட்டத்தில் 156 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து வலுவாக காணப்பட்டிருந்த போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 141 (44) தருஷ பெர்னாந்து 39,

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 156/5 (49) பன்சிலு தேஷான் 34*, வினுஜ ரணசிங்க 3/47


ஜனாதிபதி கல்லூரி எதிர் புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை

குழு B அணிகள் மோதிக்கொண்ட இந்த ஆட்டம் வத்தளை புனித அந்தோனியர் கல்லூரியின் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஜனாதிபதி கல்லூரி வீரர்கள் 76.3 ஓவர்களில் இமாலய ஓட்டங்களான 343 ஓட்டங்களை முதல் இன்னிங்சில் குவித்தனர். கனிது தேவ்மின ஜனாதிபதி கல்லூரியின் துடுப்பாட்டத்தில் வெறும் ஆறு ஓட்டங்களால் சதத்தினை தவறவிட்டிருந்தார். ஹசிந்து ப்ரமுக்கவும் 74 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

சகல துறைகளிலும் பிரகாசிக்கும் மதீஷ பெரேரா

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டு உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர்….

பின்னர் பெரியதொரு இலக்கினை தாண்டும் நோக்கோடு தங்களது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த அந்தோனியர் கல்லூரி அணி 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 343 (76.3) கனிது தேவ்மின 94, ஹசிந்து ப்ரமுக்க 74, தனுல சாமோத் 41, கவீஷ துலஞ்சன 4/88

புனித அந்தோனியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 56/2 (16)


ஜோசப் வாஸ் கல்லூரி, வெண்ணப்புவ எதிர் குருகுல கல்லூரி, களனி

மஹர சிறைச்சாலை மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில்  நாணய சுழற்சியில் வென்ற களனி குருகுல வீரர்கள் முதலில் ஜோசப் வாஸ் கல்லூரியினை துடுப்பாட பணித்திருந்தனர்.

முதலில் துடுப்பாடிய வெண்ணப்புவ வீரர்களுக்கு, குருகுல கல்லூரியின் லிகசன் சசங்க மற்றும் மலிந்து விதுரங்க ஆகியோர் பந்துவீச்சில் அதிர்ச்சியூட்ட ஜோசப் வாஸ் கல்லூரி வெறும் 42 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. சசங்க மற்றும் விதுரங்க ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

பின்னர் தம்முடைய முதல் இன்னிங்சில் துடுப்பாடிய குருகுல கல்லூரி 145 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது. இதில் ஏற்கனவே பந்துவீச்சில் சிறப்பித்த லிகசன் சசங்க அதிபட்ச ஓட்டங்களை குருகுல கல்லூரிக்காக பெற்றிருந்தார்.

இதனையடுத்து போட்டியின் முதல் நாளிலேயே 103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த ஜோசப் வாஸ் கல்லூரி முதல் நாள் ஆட்டம் முடிவடையும் போது 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்து காணப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 42 (23.2) லிகசன் சசங்க 4/03, மலிந்து விதுரங்க 4/18

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 145 (48.2) லிகசன் சசங்க 37, ஆகாஷ் கனிஷ்க 4/43

ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 37/4 (17)


புனித தோமியர் கல்லூரி, கல்சிசை எதிர் மஹிந்த கல்லூரி, காலி

தோமியர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பித்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தோமியர் வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தனர்.

கிரிஷான் முனசிங்க மைதான சொந்தக்காரர்களுக்கு சதம் (110) கடந்து உதவ தோமியர் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சில் 278 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து காணப்பட்ட போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சொற்ப நேரமே மிஞ்சிய நிலையில் காலி மஹிந்த கல்லூரி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கி 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை  இழந்து காணப்பட்ட போது போட்டியின் ஆட்ட நேரம் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 278/9d (96.3) கிரிஷான் முனசிங்க 110, சித்தார ஹப்புகின்ன 61, டெலோன் பீரிஸ் 42*, சுபஹூ ராஜபக்ஷ 2/33

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 18/1 (5)

அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்